முருங்கை

முருங்கை-thamil.co.ukகாய்கறிகளில் முருங்கை சுவையானது, அனைவரும் விரும்புவது. அதிக சத்துள்ளதும் கூட வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை. தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் பூமியில் முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அனைத்து ஜீவசத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்புதம்தான். இது கடவுளின் கொடை. சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். இதன் அனைத்து பாகங்களும் உபயோகமானது. இதன் விதை, காய், இலை, இலையின் ஈர்க்கு, மரம், வேர், பூ அனைத்துமே பயனுள்ளவை.

இதன் விதையில் இருந்து பயோ டீசல் (bio diesel) எடுக்கலாம், சமையல் எண்ணெய் எடுக்கலாம் மேலும் மேனி எழிலுக்கு, சுகாதாரத்திற்கு, இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய், இன்னும் என்னவோ உபயோகம்.

ஆரஞ்சை போல் 7 மடங்கு விட்டமின் c அடங்கியது.
பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
கரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு விட்டமின் A அடங்கியது
வாழைபழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரதம் அடங்கியது
இரும்பு சத்து அபரிதமாக உள்ளது.
எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
இறைவனின் கொடை என கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இது 200 நாடுகளுக்கு மேல் உலகில் பயிர் செய்கின்றனர். இந்தியாவில் இமயமலையில் தொடங்கி குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கை முக்கியமானது. இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைப் பூ-thamil.co.ukமுருங்கைப் பூ 
முருங்கைக் கீரையைப் போலவே முருங்கைப் பூ அதிக மருத்துவக் குணங்கள் கொண்டது. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும். முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
– அகத்தியர் குணபாடம்

கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதி வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று. நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு
சில பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடிவயிற்றுவலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

முருங்கை இலை-thamil.co.uk

முருங்கை இலை/முருங்கை கீரை

தினமும் முருங்கைக் கீரை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி சத்து உள்ளது. ஈரபதம்-75.9% புரதம்-6.7% கொழுப்பு-1.7% தாதுக்கள்-2.3% இழைப்பண்டம்-0.9% கார்போஹைட்ரேட்கள்-12.5% தாதுக்கள், விட்டமின்கள், கல்சியம்-440 மி,கி பாஸ்பரஸ்- 70மி.கி அயன்- 7 மி.கி விட்டமின் சி 220 மி.கி விட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்.

• பொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்தசோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, சருமம், சுவாசப் பாதை, செரிமான மண்டலம் போன்றவற்றில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இரத்த சோகை இருந்தால் மாதவிடாய் சுழற்சியானது சீராக நடைபெறாமல் போகும்.முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது.

•மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

• உடலில் இரத்தணுக்களின் அளவு குறைவாக இருந்தால், அதனை இயற்கை முறையில் அதிகரிக்க முருங்கைக்கீரையை சாப்பிடுங்கள்.  இதில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து மட்டுமின்றி, கல்சியம், விட்டமின் ஏ, சி போன்றவையும் உள்ளது.

• முருங்கைக்கீரையில் விட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை கிடைக்கும்.

• முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

• முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் தாக்கும் மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும்.

• முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

• முருங்கைக்கீரையில் உள்ள கல்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்கும்.

• முருங்கைக்கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் வெப்பமானது குறையும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

• பிரசவம் முடிந்த பெண்கள் தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க, முருங்கைக்கீரையை சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். ஆகவே பிரசவத்திற்கு பின் அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவானது அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும்.

• முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.

• தோல் வியாதிகள் நீங்கும்.

• கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு. வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

•முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

•முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

முருங்கைக் காய்-thamil.co.ukமுருங்கைக் காய்
•முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண்நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் (sperm) பெருகும்.

• முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

• முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. 

முருங்கைக்காயின் விதைகள்
முருங்கைக்காயின் விதைகள் நச்சுக்கிருமிகளை கொல்லும் ஆற்றல் படைத்தவை. குடிநீரை சுத்தம் செய்ய விதைகள் (பொடி) பயன்படுத்தப்படுகின்றன.

விதைகளை மென்று சாப்பிட்டால் வயிற்றில் கீரைப்பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாதநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. Gomme de Benoide எனப்படும் இந்த ஆயில் ஒவியங்கள் வரைய தேவைப்படும் எண்ணெய்யாகவும் பயன்படுகிறது.

முருங்கை காம்பு/ ஈர்க்கு
பெண்களின் மாதவிடாய் வலியை குறைக்க, முருங்கை ஈர்க்கை ஒரு பிடி எடுத்து இடித்து, 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் தயாரிக்கவும். இத்துடன் நெய், சீரகம், வெங்காயம் சேர்த்து தாளித்து ‘சூப்’ பாக பருகிவர மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.

முருங்கைக்காய் சூப்
முருங்கைக்காய் – 3
பெரிய வெங்காயம் – 2
எலுமிச்சம்பழச்சாறு – 1 தேக்கரண்டி
புதினா-mint இலை- தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர் – 1 லிட்டர்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு
(சோளமாவு) corn flour – 1 மேசைக்கரண்டி

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் நீரைச் சேர்த்து முருங்கைக்காய், புதினா இலை ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். காய் நன்றாக வெந்ததும், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைசாறு ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு எடுத்து வடிகட்டவும். கடைசியாக சோளமாவு கரைத்து ஊற்றி சூப் கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

முருங்கை மரப்பட்டை
முருங்கை வேரிலுள்ள பட்டையைத் தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்த குடிநீரில் புளி, மிளகாய், உப்பு முதலியவைகளைத் திட்டமாகப் போட்டு பாகப்படி பக்குவப்படுத்தி ரசமாக வைத்து சாப்பாட்டிலேனும், தனியாகவேனும் சாப்பிடப் பாரிசவாயு, குளிர்சுரம், காக்கை வலி, சூதகச்சன்னி இவைகள் போகும்.

இந்தப் பட்டையுடன் கடுகு சேர்த்தரைத்துக் கீழ் வாதங்களுக்கு பற்றுப்போடக் குணமாகும். பற்றிட்ட சிறிது நேரத்தில் எரிச்சலுண்டாகும். முடிந்த அளவு எரிச்சலைத் தாங்கிக் கொள்ள வேண்டும். எரிச்சல் அதிகமாக இருந்தால் பற்றிட்ட இடத்தைக் கழுவிவிட்டு சிறிது தேங்காய் எண்ணெய்யைத் தடவிவிட எரிச்சல் நின்று விடும் .

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.

முருங்கை பிசின்தாது விருத்தி லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.

முந்து நீரைத்தடுக்கு மோரைப் போலேயழுகும்
விந்துவைத் தடிப்பித்து மேனிதருந் – தொந்தக்
கரியநிற வாயுதனைக் காதிவிடு நாளும்
பெரியமுருங்கைப் பிசின்” – சித்தர் பாடல்

முருங்கைப் பிசின் அதிமூத்திரம், குஷ்டம், வாதம் ஆகியவைகளைக் குணப்படுத்தி சுக்கிலத்தை இருகச் செய்து அழகை உண்டாக்கும்.

முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

 எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கும் முருங்கை

முருங்கை கீரையில் கல்சியம், இரும்புசத்து, விட்டமின் பி, பி-2, விட்டமின் C ஆகிய சத்துகள் அதிகம் உள்ளன.

பூக்களை அதில் உள்ள பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு பலன் கிடைக்கும். காய்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் சளி குறையும்.

சிறுநீரை பெருக்கவும், மலமிளக்கவும் முருங்கை பயன்படுகிறது. முருங்கை கீரை தலை நோய்க்கு நல்ல மருந்தாகும். பூக்கள் கண்களுக்கு நல்ல குளிர்ச்சி தரும். நாக்கு சுவையின்மையை குணமாக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும், தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் ஒரு நல்ல மருந்து.

கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

ஆரஞ்சை போல் 7 மடங்கு விட்டமின் C அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது.

கரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு விட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது.

தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

முருங்கைகாய் குழம்பு

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் இதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும், இதில் நறுக்கி வைத்துள்ள முருங்கைகாயை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி காயை நன்றாக வேக விட வேண்டும்.

காய் வெந்தவுடன், புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விட்டால் சுவையான குழம்பு ரெடி.

முருங்கைகீரை பொரியல்

முருங்கைகீரையை சுத்தம் செய்து உருவி வைத்து கொள்ளவும், சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின் ஒரு வாணலியில் எண்ணெ விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் முருங்கைகீரை, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும், அதிகநேரம் வதக்க தேவையில்லை உடனே வேந்துவிடும்.

MoringaMoringa Oleifera Kills 97% of Pancreatic Cancer Cells in Vitro

We just discovered an amazing report about Moringa, courtesy of our friends over at The Eden Prescription. In 2013 scientists reported in a paper published in BMC Complementary and Alternative Medicine (A peer-reviewed, open access journal) that A hot-water extract of the leaves of Moringa Oleifera killed up to 97% of human pancreatic cancer cells (Panc-1) after 72 hours in lab tests. Moringa leaf extract inhibited the growth of all pancreatic cell lines tested.

Pancreatic cancer is very serious, one of the worst. Fewer than 6% patients with adenocarcinoma of the pancreas live five years after diagnosis. The typical treatment is currently chemotherapy.
Called the “miracle tree” on account of its many virtues, Moringa is very well known in India, parts of Africa, the Philippines and several other countries, yet it is relatively unknown in countries such as the USA. However it seems from the current buzz around it that it may well soon experience a rise to new popularity. It has a long history of use in traditional medicine due to its properties as an anti-fungal, anti-bacterial, antidepressant, anti-diabetes, pain and fever reducer and even asthma treatment. We’ve dedicated a full page on our site to a detailed herbal report on the amazing Moringa and those interested in herbalism would do well to investigate this plant.

It also contains numerous powerful anti-cancer compounds such as kaempferol, rhamnetin and isoquercetin. Now, researchers are discovering that Moringa has anti-cancer potential with positive results so far against ovarian cancer, liver cancer, lung cancer, and melanoma in lab tests. A list of these studies can be seen on Pubmed here.

Please note that it’s a long way before Moringa can be claimed as a cancer cure, but this kind of study is important because it indicates the potential for a starting point for a medicine of the future. It’s especially interesting because Moringa is already in common use – not only in herbalism but in a wide variety of other applications.

Moringa is now extensively cultivated throughout Asia, Africa, the Caribbean and Central America, but the largest Moringa crop in the world is produced by India – where it grows natively. It’s fascinating to note that may be one reason why the death rate from pancreatic cancer in India is a stunning 84% lower than in the United States! Moringa supplements are available online.

Note – as always, this article is not medical advice nor a substitute for consultation with a medical professional.

Note 2 – “In Vitro” literally means “In Glassware” and is the Latin expression to denote that the tests were done on cell cultures in a lab, as opposed to “In Vivo” which means tested on living creatures. Such studies indicate preliminary success but much more research will be needed to “prove” efficacy in humans. Though the huge disparity in pancreatic cancer rates in India is highly encouraging.

Check out our full “herbal page” on Moringa – tons of detailed information for those wishing to study this plant in depth: http://www.herbs-info.com/moringa.html

Please check out The Eden Prescription for more reports on the cutting edge science being done investigating the medicinal properties of herbs!

-herbs-info.com
– தமிழ் -கருத்துக்களம்
– இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்
– ayurvedam today
-World Wide Tamil People

தொகுப்பு – thamil.co.uk