கோபுரதாங்கி

கோபுரதாங்கிமூலிகையின் பெயர் – கோபுரதாங்கி
தாவரப்பெயர் – andrographis echioides
பயன்தரும் பாகங்கள் – இலை,வேர்

வளரியல்பு – தமிழகம் முழுவதும் பரவலாக தானே விளைந்து கிடக்கும் ஒரு களைச்செடி. கட்டிடங்களின், மலைகளின் அடியில் வளர்வதால் இதை கோபுரதாங்கி என்ற பெயர் காரணமாக கூறுவர். ஆனாலும் அது காரணமல்ல. சித்தர்கள் குறிப்பிட்ட கோபுரம் என்பது மனிதர்களின் உடலை. ஏனென்றால் இம்மூலிகையின் சிறப்பு நம் உடலில் உள்ள இரத்தம் முழுவதையும் தூய்மை செய்து அனைத்து நரம்புகளையும் பலப்படுத்தி வலிமை தருகின்ற ஒரு கற்ப மூலிகையாகும். ஆகவே கோபுரம் போன்ற நம் உடலை 80 வகையான வியாதிகளிலிருந்து காப்பாற்றி தாங்கிக் கொள்வதாலேதான் கோபுரதாங்கி எனப் பெயர்பெற்றது.

நாற்பட்டை வடிவ தண்டுகளில் முழுமையான நீள்வடிவ இலைகள் இருக்கும்,இலைக்கோணங்களில் பூக்கள் காணப்படும்.

மருத்துவகுணங்கள் 

இந்த மூலிகையின் இலைப்பொடியுடன், சம எடை வில்வ இலைப்பொடி,சம எடை பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நாற்பது நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.

இலைச்சாறு 100 மிலி, நல்லெண்ணெய் 100மிலி கலந்து பதமுற காய்ச்சி வாரம் இருமுறை தலை குளித்துவநதால் முடி உதிர்வு நின்று வளர ஆரம்பிக்கும். கண் குளிர்ந்து பார்வைதிறன் அதிகரிக்கும்.

கோபுரந்தாங்கியின் இலையும் கொட்டைகரந்தையின் இலையும் சம எடை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு 100மி லிட்டராக காய்ச்சி தினமும் காலை குடித்துவந்தால் உடல் காய கற்பமாகி விடும்.

andrographis echioidesசிறுநீர் போகும்போது எரிச்சல்,சிறுநீரகத்தில் கற்கள் போன்ற உபாதைகளுக்கு சித்த,ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது. உலோகங்களை கரைக்கும் ஆற்றல் கொண்டதால் சித்த மருத்துவத்தில் பஸ்பங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மிலியாக சுண்ட வைத்து வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும். சிறுநீர் எரிச்சல் குறையும்.

கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும்.

கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.

-zha.co.in
-tamilyes.com

தொகுப்பு – thamil.co.uk