பற்பாடகம்

பற்பாடகம்மூலிகையின் பெயர் – பற்பாடகம்
தாவரப்பெயர் Mollugo cerviana
பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, தண்டு
வளரியல்பு  – எல்லாக் கண்டங்களிலும் வளரக் கூடியது.

மருத்துவகுணங்கள்
பற்பாடகம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். குறிப்பாக குடிநீரில் இது ஒரு கூறாகப் பயன்படுத்தப்படுகிறது. பற்பாடகம் என்னும் மூலிகைக்குக் கபவாதசுரம், பித்ததாக நோய், உளமாந்தம், பித்த தோஷம் ஆகியன போகும்.விழிகளுக்குக் குளிர்ச்சியுண்டாக்கும்.உடலின் காங்கை, எரிச்சல், தாகம் இவைகளைச் சாந்தப்படுத்தும்.

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி நன்றாக சுத்தம் செய்து அல்லது தண்ணீரில் நன்கு கழுவி 5 கிராம் அளவு எடுத்து அதை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி இருவேளையும் கொடுத்து வர குழந்தைகளுக்கு காணும் சீதபேதி, மற்றும் சுரம் ஆகியவை கட்டுக்குள் வரும். இதை பெரியவர்களும் சாப்பிட நோய்கள் குணமாகும்.

Mollugo cervianaபற்பாடகம் இலையைப் பாலில் அரைத்து தலையில் தடவி குளித்து வரக் கண்ணொளி மிகும். உடல் நாற்றம், சூடு தணியும்.

இனம்தெரியாத எவ்வகைக் காய்ச்சலாயினும் கைப்பிடி அளவு பற்பாடகம் எடுத்து தேக்கரண்டியளவு மிளகு, சுக்கு, அதிமதுரம், வேப்பங்கொழுந்து இடித்துப் போட்டு தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி அதை காலை, மாலை கொடுத்துவரக் குணமாகும்.

இவ்விதம் மூன்றுநாள் கொடுக்க வேண்டும். தேவையான அளவு பற்பாடகத்துடன் சிறிது பச்சைப் பயிறும் சேர்த்து அரைத்துத் தலைக்குத் தேய்த்து இளம் வெந்நீரில் குளித்துவர உடல் குளிர்ந்து சமநிலைக்கு வரும்.

காலையில் இரண்டு பற்படாக இலைகளை மென்றால் பசியின்மை குறையும்

பற்பாடகத்தில் வேளைக்கு அரை அல்லது ஒரு தோலா எடையை ஒரு குடுவையில்போட்டு கால் படி தண்ணீர்விட்டு வீசம்படியாகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை அவுன்ஸ் வீதம் தினமும் மூன்றுவேளை கொடுத்தால் வியர்வை வெளிப்பட்டு சுரத்தைப் போக்கும்.சுரத்தினாலுண்டான எரிச்சல், தாகம் அடங்கும். இதர சரக்குகளைச் சேர்த்து குடிநீர் செய்தும் உபயோகிப்பர்.

-zha.co.in
-sudar24.com

தொகுப்பு – thamil.co.uk