ஆத்தி

Bidi Leaf Treeமூலிகையின் பெயர்  ஆத்தி
தாவரப்பெயர் – Bauhinia racemosa
தாவரக்குடும்பம் Caesalpiniaceae
வேறு பெயர்கள் ஆர்,Bidi Leaf Tree
பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, கனி, பட்டை,வேர், மரம்.

வளரியல்பு ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது ஒரு வித மந்தாரையாகும்.

ஆத்தி மலர்இலைகள் இரண்டு சிற்றிலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1-2 அங்குல நீளமிருக்கும். இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும்.

பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும் கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும்.

கனி ஒரு சிம்பு. 6 – 12 அங்குல நீளமும் 3/4 – 1 அங்குல அகலமும் இருக்கும்.

ஆத்தி.வரலாறு – பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவரான சோழர் அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை.

ஆத்தி மலரைக் குறிஞ்சிப்பாட்டு ‘அமர் ஆத்தி’ என்று குறிப்பிடுகிறது. அமர் என்னும் சொல்லுக்கு விரும்புதல் என்பது பொருள். ஆத்தி மரதைக் கருங்காலி என்கின்றனர். சோழப் பெருவேந்தர்களின் குடிப்பூ ‘ஆர்’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இந்த ஆர்-மலரை ஆத்தி என்கின்றனர். சிவபெருமான் ஆத்திப் பூவைச் சூடியுள்ளான் என்பர். (ஆத்தி சூடி – நூல்). சிவபெருமான் ஆத்திமர நிழலில் அமர்ந்திருந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

12-ஆம் நூற்றாண்டு இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அவைக்களத்தில் இருந்த புலவர்கள் ஒட்டக்கூத்தரும், புகழேந்தியும் பாட்டுப்பாடிச் சொற்போர் புரிகின்றனர்.
ஒட்டக்கூத்தர் ஆருக்கு வேம்பு நிகர் ஆகுமோ அம்மானை – என்று பாடுகிறார்.

அதற்கு விடையளிக்கும் புகழேந்தி கடிப் பகைக்குத் தாதகியோ கண்ணியோ அம்மானை – என்று பாடுகிறார். ஆர் என்னும் பூ தாதகி என்னும் பெயர் பெற்றிருந்ததை இவரது பாடல்களால் உணரமுடிகிறது.

மருத்துவகுணம்
இம் மரத்தின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப் படுகின்றது. இது நுண்ணுயிரெதிர்ப்புப் பொருட்களுக்கான மூலமாகப் பயன்படக்கூடும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

Beediஇந்தியாவின் சில பகுதிகளில் இதன் இலை பீடிசுற்றுவதற்குப் பயன்படுகிறது.

பட்டை சொரசொரப்பாகவும் கருமை நிறமுடையதாகவும் நார் எடுத்து முரடாண பலம் வய்ந்த கயிறு திரிப்பதற்கும் உதவும்.

மரம் பழுப்பு நிறமுடைய கடினமான விறகாகும்.

 

Plant name : Vellai mantharai
“The bark of this medicinal plant is highly astringent, leaves are anthelmintic and seeds are anti-bacterial.”

Botanical name : Bauhinia racemosa
Family : Caesalpiniaceae
Actions : Astringent, Anthelmintic, Anti-bacterial, Anti-malarial.

Siddha Medicinal Uses
The dried bark is crushed and decoction is prepared with it and given for glandular infections.
The decoction prepared by the bark is used as an external wash for skin diseases and ulcers.
The flowers are used to prepare decoction and given for heamorrhagic conditions, plies and cough.
The decoction prepared by the roots are used for abdominal disorders.

Note: Siddha treatment is based on complete physical examination of the patient, Naadi diagnosis, and other diagnostic criteria of the disease. The content given in this article is purely meant for information and education purpose only. Kindly consult a Siddha physician before any sort of self medication.

-விக்கிப்பீடியா
-pannayar.com
-kallarperavai.hpage.co.in
-vaiyan.blogspot.co.uk

தொகுப்பு – thamil.co.uk