இன்சுலின் செடி

Insulin plant மூலிகையின் பெயர் – இன்சுலின் செடி.
தாவரப்பெயர் – costus pictus
தாவர குடும்பம்– Costaceae
பயன்தரும் பாகம் – இலை

வளரியல்பு – இந்தச் செடி வளமான ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக்கூடியது. இந்தத் தாவரம் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இதுபற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரியிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் nursery உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக்காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப்பெருக்கம் செய்ய 3 கணுக்களை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும்.

இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும். ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன. அவரது போன்- 9894066303 0422-2566303.

மருத்துவப் பயன்கள்
இன்சுலின் செடிசர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் costus pictus என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்துவரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் “இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், செயற்கை முறையிலும்தான் தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ் பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது” என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study.

தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாகக் குறைக்கிறது. ANTI Diabetic herb.

பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயனடைவார்கள்.

-மூலிகைவளம்

COSTUS PICTUS Medicinal Uses

costus pictusCostus pictus is a medicinal plant and capable of having Magic Cure for Diabetes. Leaf of this herbal plant helps to build up insulin by strengthening beta cells of Pancreas in the Human body.

The leaves of this herbal medicinal plant are used to control Blood sugar levels or in Treatment of Diabetes. The patient has to consume two leaves in the morning and two leaves in evening for first week. From the second week one leaf in the morning and one in the evening. This dosage should be continued for 30 days. The leaves of Insulin plant must be chewed well before swallowing. After chewing the leaves / leaf have a little water.

Having natural concentration of Corosolic acid, Insulin plant can have a positive effect on blood sugar levels. Corosolic acid works in metabolism of glucose process like insulin that reduces blood sugar levels by transporting glucose into cells and out of the bloodstream. This can be beneficial to anyone who has trouble with high blood sugar levels, and particularly to that in diabetes

In Indian Traditional Medicine this herbal plant is also used to promote Long life, Take care of skin complaint, Reduce fever, Treatment of asthma, Bronchitis treatment and to Eliminates intestinal worms. In Indian traditional literature this plant is mentioned as an ingredient in a cosmetic to be used on the eyelashes to give a nice look.

-linkedin.com

தொகுப்பு – Thamil.co.uk