ஆற்றுத்தும்மட்டி

தும்மட்டிமூலிகையின் பெயர் – ஆற்றுத்தும்மட்டி
தாவரப்பெயர் – CITRULLUS COLOCYNTHIS
தாவரக்குடும்பம் – CUCURBTACEAE
வகைகள் – பெரிய தும்மட்டி, சிறு தும்மட்டி
வேறு பெயர்கள் – கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி, Bitter Apple
பயன்தரும் பாகங்கள் – இலை, காய், வேர்.

வளரியல்பு – ஆற்றுத்தும்மட்டியின் தாயகம் டட்ரேனியன் மற்றும் ஆசியா. 1887 ல் துருக்கி, Nubia and Jrieste ல் இதைக்கண்டு பிடித்தார்கள். ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் CITRULLUS COLOCYNTHIS.வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி.

பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்துபோல் இருக்கும். 5cm தொடக்கம் 10cm விட்டமுடையது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்தன்மை அதிலம் இருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

ஆற்றுத்தும்மட்டிமருத்துவப்பயன்கள்
சமூலம் நுண்புழு கொல்லும். நஞ்சு முறிக்கும். காய் சிறுநீர், மலம் பெருக்கும்.

புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடங்களில் காயை நறுக்கித் தேய்த்துவரப் புழுவெட்டு நீங்கி முடி வளரும்.

பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய் புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக உலர்த்திப் பொடித்து சமனெடை கலந்து அரை தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் முறியும்.

தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

ஆற்றுத்தும்மட்டி1பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய் பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய், வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம், திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம், சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சன்ன லவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப் போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத்தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும் 2, 3 தேக்கரண்டி (4 முறை பேதியாகுமாறு) 4, 5 நாள்கள் சாப்பிட்டுவர வாதநீர், கிருமிகள் ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு, இடுப்புவலி, வாயு, ருதுச்சூலை முதலியவை தீரும்.

Citrullus colocynthisதுமட்டிக்காய், எலுமிச்சம்பழம், வெள்ளை வெங்காயம், நொச்சி, இஞ்சி இவற்றின் சாறுவகைக்கு 1 லிட்டர் கலந்து சிறு தீயில் காய்ச்சி 1 லிட்டராக வற்றி வரும்போது இறக்கி ஆறவைத்துக் கல்வத்திலிட்டு ரசம் லிங்கம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம், வெங்காயம், கடுகு, மஞ்சள், வெந்தயம், மிளகு, காந்தம், நேர்வாளம் வகைக்கு 10 கிராம் பொடித்துச் சேர்த்து மெழுகுப் பதமாய் அரைத்து தூதுளங்காய் அளவாக வெல்லத்தில் பொதித்து 10 நாள்கள் காலையில் மட்டும் கொடுத்துவர வயிற்று நோய்கள் குன்மம், வாயு தீரும்.

-மூலிகைவளம்