ஆனைக் குன்றிமணி

ஆனைக் குன்றிமணிமூலிகையின் பெயர் – ஆனைக் குன்றிமணி
தாவரப்பெயர் – ADENANTHERA PAVONINA
தாவரக்குடும்பம் – FABACEAE
வேறு பெயர்கள் – மஞ்சாடி மரம்
பொதுவான பெயர் – Red Wood, Bead Tree, Circassian bean seed, Coral wood, Crab’s eyes, False sandlewood, Jumbie bead
பயன்தரும் பாகங்கள் – வேர், விதை மற்றும் இலை ஆகியன.

வளரியல்புஆனைக் குன்றிமணி மரவகையைச் சேர்ந்தது. இது வளமான இடங்களில் நன்கு வளரும். மித வெப்பநிலை தேவை. கந்தகமண், செம்மண்ணிலும் வளரும். இந்தியா, தென் கிழக்கு சைனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இது 20 மீட்டர் உயரம் கூட வளரக்கூடியது. இந்த மரம் கெட்டியாக இருக்கும். இது வேகமாக வளரக்கூடியது. மரம் சுற்றி மிருதுவாக இருக்கும். இலைகள் பச்சையாகவும் இரண்டாகப் பிரிந்திருக்கும். 10 – 40 செ.மீ நீளமும் பக்கக் கிளையில் 2-6 சதைகள் இருக்கும். ஒவ்வொரு இலையிலும் 9-15 சதைகள் இருக்கும்.

ஆனைக் குன்றிமணி1பூக்கள் தன்மகரந்தச் சேர்க்கையுடையது. 2 மி.மி.நீளமும் மஞ்சள் நிறத்தில் நட்சத்திரம் போன்று உச்சியில் பூக்கும். பூனை வால் போன்றும் இருக்கும். பூ வாடும்போது ஆரஞ்சு மணம் வீசும். காய் முற்றிக் காய்ந்தால் வெடித்து கீழே விழுந்து விடும். உள்ளிருக்கும் விதை சிவப்பு நிறத்தில் இருக்கும். அது சுமார் 8-12 கெட்டியான விதை இருக்கும். சாலையோரங்களில் ஆழகுக்காக வளர்ப்பார்கள்.

தங்கம் வெள்ளி எடைபோட இந்த விதைகள் பயன்பட்டன. 4 விதை ஒரு கிராம். 4 நெல் எடை ஒரு குற்றி மணி, 2 குன்றிமணி ஒரு மஞ்சாடி. விதையின் மேற்புறம் கெட்டியாக இருப்பதால் முளைக்க ஒரு விருடம் ஆகும். அதனால் விதையை சுடுதண்ணீரில் போட வேண்டும். ஒரு நிமிடம் அல்லது கந்தக அமிலத்தில் முறைப்படி ஊறவைக்க வேண்டும். நாற்றங்காலில் விதைக்க 10 நாட்களில் முளைக்கும். அது 3 மாதத்தில் 8-15 செ.மீ.உயரம் வளரும். 3 மாதத்தில் 30 செ.மீ. வளரும். இந்தியாவில் அதிகமாக கட்டிங் மூலம் இன விருத்தி செய்கிறார்கள். ஒரு வருடம் கழித்து செடி நன்கு வளர ஆரம்பிக்கும்.

ஆனைக் குன்றிமணி2மருத்துவப் பயன்கள்
முடக்கு வாதம், வாத நோய்கள் மற்றும் சிறுநீரில் காணும் இரத்தம் நீங்கும். வேர் வாந்தியை உண்டாக்கும்.

ஆனைக் குன்றிமணியின் கொழுந்து இலைகளை உணவாக கீரையாகச் சாப்பிடலாம்.

விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். அதில் புரோட்டின் கொழுப்பு இருப்பதால் விரைவான சீரணசக்தியைக் கொடுக்கும்.

மரம் விறகுக்காகவும், தளபாடங்கள் செய்யவும், தரைக்குப் போடவும், வீடு கட்டவும் பயன்படுத்துகிறார்கள். படகுகள் கட்டவும் பயன்படுத்துகிறார்கள். அதன் சேகு சிகப்புச்சாயம், துணி உண்டாக்கவும் பயன்படுத்துகிறார்கள். சுத்தி செய்யாத விதை நச்சாகும்.

ஆனைக் குன்றிமணி3ஆனைக் குன்றிமணி4மரப்பட்டைத் தூள் எடுத்து தண்ணீரில் கலந்து தலைவலிக்கும், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப் போக்குக்குப் பயன்படுத்துவார்கள். பட்டை மற்றும் இலையில் தயார் செய்த கசாயம் மேலை கண்ட நோயிற்க்குப் பயன்படுத்துவார்கள்.

விதை – பொம்மைகள் செய்யவும் தங்க நகைகளில் சேர்க்கவும் பயன்படுத்துகிறார்கள்.

-மூலிகைவளம்