மருத மரம்

மருதமரம்மூலிகையின் பெயர் – மருத மரம்
தாவரவியல் பெயர் – டெர்மினேலியா அர்ஜீனா Terminalia arjuna
குடும்பம் – Combretaceae
வேறு பெயர்கள் – ஆற்று மருது, நீர் மருது, வெண் மருது, Queen’s Pride of India, Queen’s Flower Tree, ஹிந்தியில் Jarul.
வளரியல்பு – 30-60 மீ உயரம் வளரக்கூடிய மரமாகும். அடிமரத்தின் சுற்றளவு 7-10 மீ இருக்கும். மரப்பட்டை வெண்சாம்பல் நிறம் கொண்டிருக்கும். இலைக்காம்பு 2 செ.மீ நீளம் இருக்கும்.

வரலாறு –  மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. சங்க காலத்தில் மருதம்தொகுப்பில் சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர். மருத மரம் ஆற்றோரங்களிலும் வயலோரங்களிலும் செழித்து வளரும்.

மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை, மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி. காவிரியாற்று ஆர்க்காட்டின் காவிரித் துறையில் மருத மரங்கள் மிகுதி. புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிக்கு ‘நெய்லங்கானல்’ என்னும் பெயர் உண்டு. அங்கிருந்த தாமரைப் பொய்கைக்கு கைதைமரம் வேலியாக அமைந்திருந்ததாம். இது மதுரையிலிருந்த தாமரைக் குளத்துக்கு மருதமரம் வேலியாக அமைந்திருந்தது போல அமைந்திருந்ததாம்.

திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம்.

Lagerström எனும் சுவீடன் நாட்டு வியாபாரி தனது கிழக்கிந்தியப் பயணத்தின் போது தாவரங்களைச் சேகரித்து வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படும் கார்ல் லின்னேயஸுக்கு (Carl Linnaeus) கொண்டு சேர்த்தார். ஆகையால் இவ்வகையான மரங்களின் பேரினத்தை (Genera) Lagerstroemia என லின்னேயஸ் பெயரிட்டார். இம்மரத்தின் சிறப்பினப் பெயர் reginae அதாவது மாட்சிமை மிக்க (Imperial) என்று பெயர்

மருதம் பூமருத்துவ பயன்கள்
இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில், முக்கியமானது மருத மரம். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது நிகரில்லாத மருந்து. வட இந்தியாவில் மருதம் பட்டைச் சூரணம் மிகவும் பிரபலம். பல நூற்றாண்டுகளாக இதயத்தின் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருத மரப்பட்டையில் உள்ள ‘அர்ஜுனின்’(Arjunin) என்கிற வேதிப் பொருள் பயன்படுவதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கின்றனர். இதில், ‘லிப்பிட் பெர்ஆக்சிடேஷன்’ (Lipid peroxidation) நிறைந்து உள்ளதால் இரத்தம் உறைதலைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் மருத மரப் பட்டைக்கு உண்டு. ஆங்கில மருத்துவப்படி மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தாலும் இதைத் துணை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

இரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை (தலா மூன்று) மென்று விழுங்கினால், உடனடியாகக் குணமாகும்.

இலை, பூ, காய் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கொதிக்கவைத்துக் குடிநீராக்கிக் குடித்தால், இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

இலையை அரைத்துப் பாலில் கலந்து, காலை-மாலை இரு வேளையும் தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை குடித்து வந்தால், பித்த வெடிப்புகள் நீங்கும்.

இதன் பழத்தை நீராவியில் வேகவைத்து, பிசைந்து புண்களில்வைத்துக் கட்டினால், புண்கள் விரைவில் ஆறும்.

மருதம் பட்டையைப் பொடித்து, இரண்டு கிராம் அளவு எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மூட்டு வலி குறையும்.

மருதம் பட்டைக் கஷாயம் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்பாட்டில் வைக்கும். சர்க்கரை நோய் – இரத்தக் கொதிப்பு இவை இரண்டும் ஒருசேர ஒருவரைப் பாதித்து இருந்தால், அவருக்குப் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், மருதம் பட்டைக் கஷாயத்தைத் தொடர்ந்து குடித்துவந்தால், பக்கவாதம் வராமல் தடுக்க முடியும்.

மருதமரப் பட்டை 200 கிராம், சீரகம் 100 கிராம், சோம்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவர, இரத்த அழுத் தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.

சிறுநீரகப் பிரச்னைகள் விலகவும் சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகரிக்கவும் இந்தக் கஷாயத்தைத் தினமும் 120 மி.லி. அளவு தொடர்ந்து 45 நாட்களுக்குக் குடித்துவர வேண்டும்.

செம்மருதப் பூக்கள்

செம்மருதப் பூக்கள்

அந்தக் காலத்தில், உடலை உரமாக்கும் காய கல்ப மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பல் வலி தீர இந்தப் பட்டையைப் பொடியாக்கிப் பயன்படுத்தலாம். ‘அஸ்ட்ரின்ஜென்ட்’ (Astringent) என்கிற துவர்ப்புத் தன்மை கொண்ட இரசாயனப் பொருள் இந்தப் பட்டையில் அதிகம் இருப்பதால் இதனைக் கஷாயமாகத் தயார் செய்து புண்களைக் கழுவினால், அவை விரைவில் குணமடையும்.

வயிற்றுப்போக்கு குணமாக இந்தக் கஷாயத்தை 120-மி.லி குடித்தால் போதும். பித்தம், வெள்ளைப்படுதல், மாதவிலக்கு, சரும நோய்கள் போன்றவற்றுக்கும் மருதம் பட்டைக் கஷாயம் சிறந்த மருந்து.

ஒரு லிட்டர் தண்ணீரில், 200 கிராம் மருதம் பட்டையைச் சேர்த்து 120 மில்லியாகும் வரை முதல் நாளே சுண்டக் காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவதோடு, மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்த்துவிட முடியும். இதன் பட்டை குடல் புண்ணிற்குப் பயன்படுகிறது. மற்றும் பல் சொத்தைக்குப் பயன்படுகிறது.

ஒற்றைத் தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் பருமன் போன்றவற்றிற்கும் இம்மரம் பயன்படுகிறது. இதுபோன்ற நம் இயற்கை செல்வங்களை பேனி காப்பது நம் கடமை.

-Astro Healer Daksna

அர்ஜூனா மரத்தின் சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்

15மானுட உடம்பில் உண்டாகும் ஒட்டுமொத்த நோய்களையும் களையும் வல்லமை பெற்றது மருத மரமேயாகும். வாத, பித்த, கப நோய்களை முற்றிலும் நீக்கி, ஆரோக்கியத்துடன் கூடிய ஒரு மேம்பட்ட வாழ்க்கையை நமக்கு மருத மரம் வழங்கி வருகிறது.

இரத்தக் கொதிப்பு நீங்க…
இரத்த அழுத்தமே (இல்) இரத்தக் கொதிப்பு எனப் படுகிறது. ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். இரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக் கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.

மன உளைச்சல், தூக்கமின்மை விலக…
மருதமரப் பட்டை, வில்வம், துளசி ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து அரைத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, மன உளைச்சல், படபடப்பு, தேவையில்லாத பயம், ஆவேசம், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் தானே மறையும்.

சர்க்கரை நோய் குணமாக…
மருதமரப் பட்டை, ஆவாரம்பட்டை வகைக்கு 200 கிராம். சுக்கு, ஏலக்காய் வகைக்கு 20 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவு எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரிலிட்டு கசாயமிட்டு காலை, இரவு என இருவேளையும் காபிக்குப் பதிலாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் குணமாகும்.

சர்க்கரை நோய் குணமாக மற்றொரு மருந்து கூறுகிறேன்.

மருதமரப் பட்டை, ஆலம்பட்டை, அரசம் பட்டை, கருவேலம் பட்டை, ஆவாரம் பட்டை, பருத்திக் கொட்டை, கடல் அழிஞ்சில், நாவல் பட்டை, நாவல் கொட்டை, கருஞ்சீரகம் ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்கு முன்பாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் வெகுவாகக் கட்டுப்படும். சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் பலவீனம், அதிக தாகம், அதிமூத்திரம் போன்ற கோளாறுகளும் உடனே தீரும்.

இதயநோய் குணமாக…
இதய நோய்களை மிக எளிதில் குணமாக்கும் வல்லமை மருத மரத்திற்கு உண்டு. இதய நோய்களுக்கு உண்டு வரும் நவீன மருந்துகளுடன், மருதம் சார்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரலாம். மருத மரம் வீரியமான ரசாயனமல்ல என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் கண்டிப்பாகச் சாப்பிடத் தயங்கமாட்டீர்கள்.

மருதம்பட்டை, தாமரைப்பூ வகைக்கு 200 கிராம். ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப் பட்டை வகைக்கு 20 கிராம். இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, இதய பலவீனம், இதயத்தில் உண்டாகும் வலி, இதய வீக்கம், இதயக் குழாய் களில் உண்டாகும் அடைப்பு போன்றவை அதிசயமாய் நீங்கும்.

மேற்சொன்ன மருந்தையே கசாயமிட்டும் சாப்பிட்டு வரலாம். கடைகளில் கிடைக்கும் மருத மரம் சார்ந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கலாம். நம் பண்டைய ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் “அர்ஜுனா அரிஸ்டம்’ என்ற திரவ மருந்து மருந்துக் கடைகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இதில் 20 மி.லி. அளவு காலை, இரவு என இருவேளையும் சாப்பிட்டு வர, இதய நோய்கள், இரத்தம் சார்ந்த நோய்கள் உடனே தீரும்.

இரத்த மூலம் தீர…
மருத மர இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் கலக்கிச் சாப்பிட்டுவர, மூன்று தினங்களில் இரத்தப் போக்கு நிற்கும்.

மாதவிலக்கை முறைப்படுத்த...
மருத மர இலையைக் காயவைத்துத் தூள் செய்து, தினசரி ஐந்து கிராம் அளவில் இருவேளை யும் சாப்பிட்டுவர, பெண்களுக்கு உண்டாகும் மாதாந்திர சுழற்சி முறையாகும்.

மாதவிலக்கில் உண்டாகும் வயிற்றுவலி தீர…
மருதம்பட்டை, வேப்பம்பட்டை வகைக்கு 100 கிராம், பெருங்காயம் 10 கிராம் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, காலை, இரவு என இருவேளையும் ஒரு டம்ளர் மோருடன் சாப்பிட்டுவர, மாதவிலக்கின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகும்.

மேலும் மருத மரத்தினால் வெள்ளைப்படுதல், உஷ்ண நோய்கள், பித்த நோய்கள், சரும நோய் கள், பற்களைச் சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும்.

இரத்த கொதிப்பு குணமாக…
மருதம் பட்டை, இதன் அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாகி , காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து , தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும் , பருகி வர, இரத்த அழுத்த நோய் , உடலை விட்டு அகலும்.

ஆங்கிலத்தில் terminalia arjuna என்றும் ஹிந்தியில் அர்ஜீனா என்று பெயர் கொண்ட இந்த மரம் மனிதர் நோய்கள் அனைத்தும் குறிப்பாக இதயம்சம்பந்தமான அனைத்து நோய்களையும் நீக்கும் வல்லமை உள்ள சிறந்த மரம்.

இதய இரத்த குழாய்களில் உண்டாகும் அடைப்பு, இதய பலவீனம், இதய வலி போன்ற அனைத்து இதயம் சார்ந்த நோய்களுக்கும் மருதம் பட்டை நிரந்தர தீர்வளிக்கும் மருந்து.

மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம் , ஏலம் , இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து , பொடியாகி வைத்துகொண்டு , காலை மற்றும் மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர இதய நோய் விரைவில் குணமடையும்.

மருத மரத்தினால் பித்த, சரும மற்றும் உஷ்ண நோய்கள் தீரும்.

தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்)  20-25  மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு  இடையே  இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும்  ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும்.

அர்ஜூனா மரத்தின் மரப்பட்டையில்   ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால்  முலிகைக்காக பயன்படுத்துகிறார்கள்.  கோ-என்சைம் கே -10, டான்னிக் அமிலம், ஃபிளாவனாய்டுகளில்  மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன.                            

அர்ஜூனா மரத்தின் மரப்பட்டைஆஸ்துமா பிரச்சனையை தீர்க்க இந்த அர்ஜூனா மரம் மிகவும் உதவியாக இருக்கிறது. ஆஸ்துமா இயற்கை சிகிச்சையின் ஒரு பகுதியாக, அர்ஜூனா மரத்தின் பட்டையை தூள்  செய்து சூடான தண்ணீர் அல்லது பாலில்  கலந்து தேநீர் வடிவில் உட்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வாக இருக்கும்.

அர்ஜூனா மரத்தின் பட்டையில் அதிகமான நோயெதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, தோல்களுக்கு இந்த மரத்தின் பட்டை மிகவும் உதவியாக இருக்கிறது.

சிறுநீரகத்தில் உருவான கல் கரைய , அர்ஜூனா பட்டையை நன்கு வேகவைத்து வடிக்கட்டி பருக வேண்டும் . இவ்வாறு செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

இந்த அர்ஜூனா பட்டை மூலம் இதய நோய் வருவதையும் தடுக்கலாம்.

அர்ஜூனா பட்டயை தேநீராக குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கிறது.

– Vilupuram My City

தொகுப்பு – thamil.co.uk