காசினிக் கீரை

காசினிகாசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ள காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேலோங்கும்.

காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கி கோப்பி, தேனீருக்கு பதிலாக பருகலாம். காசினிக் கீரையில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் விட்டமின் A, B, C ஆகியவைகள் உள்ளன.

ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது என்று யுனானி மருத்துவம் சொல்கிறது. உடலில் எந்த இடத்தில் வீக்கம் எற்பட்டிருந்தலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது காசினிக் கீரை.

காசினிக் கீரை, தூதுவளைக் கீரையோடு பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து நன்றாக கடைந்து அல்லது மிக்ஸியில் இட்டு அரைத்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடல் காங்கை என்னும் உடல் சூடு தணிய இதுவே நல்ல கீரை என்கின்றனர் சித்தர்கள்.

உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்துக் காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

காசினிக் கீரைthamil.co.ukகாசினிக் கீரை, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடவைக்கும். காசினிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைபடுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு காசினிக் கீரை நல்ல மருந்து. காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டுவர வெள்ளை படுதல் நோய் குணமாகும்.

காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

சிலருக்கு புண்கள் ஏற்பட்டால் எளிதில் ஆறாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் சில சமயங்களில் அறுவைசிகிச்சை செய்யும் அளவிற்கு சென்றுவிடும். இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்றுபோட்டு கட்டிவந்தால் வெகுவிரைவில் புண்கள் ஆறிவிடும்.

இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும். அதிக உயிர்ச்சத்து கொண்ட கீரை இது.

இன்றைய நவீனமுறை உணவு வகைகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தின் வீரியம் குறைந்து போகிறது. மேலும் தூய்மையான பிராணவாயுவும் கிடைப்பதில்லை. மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலில் பித்தம் அதிகரித்து, பித்தநீர் இரத்தத்தில் கலந்து இரத்தம் மாசுபடுகிறது. இதனால் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதற்கு காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தொகுப்பு – thamil.co.uk