கொய்யா

PSIDIUM GUAJAVA.மூலிகையின் பெயர் – கொய்யா
தாவரவியல் பெயர் – PSIDIUM GUAJAVA
தாவரக்குடும்பம் – MYRTACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, வேர், பழம்

வளரியல்பு – கொய்யா சிறு மரவகையை சேர்ந்தது. இதன் தாயகம் மத்திய அமரிக்கா மற்றும் தென் மெக்சிகோ. முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும், சதைப்பற்றுள்ள உருண்டை மற்றும் நீள்வட்ட அமைப்பில் உள்ள கனிகளையும், வழுவழுப்பான பட்டையையும் உடைய மரம். தமிழகமெங்கும் பழத்திற்காகப் பயிரடப்படுகிறது. காடுகளில் தானே வளரவதுண்டு.

இதன் உயரம் சுமார் முப்பது அடி வளரும், மரத்தின் விட்டம் சுமார் 25 செ.மீ. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் வரை வளரக்கூடியது. களிமண்ணிலும், சிறிது மணல்பாங்கான இடத்திலும் நன்கு வளரும். மண் 4.5 முதல் 8.2 PH  இருந்தால் போதும். வருட மழையளவு 100 செ.மீ. போதும். வேர்கள் 25 செ.மீ. வரை சத்தை உறிஞ்சக் கூடியது.

PSIDIUM GUAJAVAவெப்பமான பிரதேசத்தில் நன்கு வளரக்கூடியது. மரம் நல்ல கெட்டியானது. அதிக கிளைகள் வரக்கூடியது. பூத்து கொத்தாக காய்கள் விடக்கூடியது. காய் பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்தால் மஞ்சள் நிறமாக மாரும். பழத்திற்குள் வெண்மையான சதைப்பற்றுடன் விதைகள் இருக்கும்.

சில வகை கொய்யா சதைப்பற்று சிவப்பாக இருக்கும். மருத்துவப்பயன் ஒன்றே. விதையிலிருந்து இன விருத்தி செய்வார்கள். ஒட்டுக் கட்டியும் புதிய ரகங்களை தயார் செய்வார்கள். பழத்தில் லக்னோ 49 வகை பெரிதாகவும், இனிப்பாகவும் இருக்ககும். விட்டமின் C அதிகமாக இருக்கும்.

அலகாபாத் பேடா வகை பெரிதாகவும் உருண்டையாகவும் நறுமணம் உடையதாகவும் இருக்கும். வரட்சியைத் தாங்கி வளரக் கூடியது. மேலும் பல வகைகள் உள்ளன.


கொய்யா..
கொய்யாக் கொழுந்து இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின் மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான விட்டமின் C, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

கொய்யாக் கொழுந்து இலையை மென்று தின்று இலகுவான உணவு உண்ண செரியாமை, மந்தம், குடல் வாயு தீரும்.

கொய்யா இலை கொழுந்தை உண்டால் நன்றாக பசி எடுக்கும். குடல் வலுப்பெறும். அஜீரணத் தொல்லைகளுக்கு இலைக் கொழுந்தைப் பறித்து கழுவிச் சுத்தம் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணம் தெரியும்.

கொய்யா இலைகொய்யா இலை ஒரு பிடியை அரிந்து ஒரு மிளகாயுடன் வதக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி அரை மணிக்கு ஒரு முடக்கு வீதம் கொடுத்து வர வாந்தி, பேதி (காலரா) மந்தம், வாய்பொருமல், வறட்சி, தாகம் அடங்கும்.

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து இலேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, சூடாக இருக்கும் பொழுதே வடிகட்டி வைத்துக் கொண்டு, ஒரு கோழி முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு நீர் போல அடித்து வைத்துக் கொண்டு, ஒருவர் கசாயத்தை அடித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றவர் கோழிமுட்டை மஞ்சள் கரு எடுத்து அந்தக் கசாயத்தை விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மஞ்சள் கரு எல்லாவற்றையும் விடும் வரை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்தக் கசாயத்தில் பாதியளவைக் காலையிலும் பாதியளவை மாலையிலும் கொடுத்து வந்தால் நாட்பட்ட சீதபேதியானாலும் நின்று விடும்.

மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் காலை, பகல் மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்றுவேளை சங்களவு கொடுத்து வர நாட்பட்ட சீதபேதி நின்று விடும்.

இரண்டு கைப்பிடியளவு நறுக்கிய கொய்யா இலையை லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும். ஆனால் மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும்.

கொய்யா இலையைக் கொண்டு வந்து அதை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும். இதனால் ஆடும் பற்கள் கெட்டிபடும். பற்சொத்தை நீங்கும். எகிர் வீக்கம் வாடி விடும். பற்களில் ஏற்படும் அரிப்பு அதாவது தேய்வு மாறி பல் வெண்ணிறமாகும். பல்லில் உள்ள அழுக்கு நீங்கும்.

கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும்.

நீரிழிவு நோயால் அவதிபடுபவர்கள் நீரிழிவை தடுக்க கொய்யா இலையை மருந்தாகப் பயன்படுத்தலாம். வகை 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும். கொய்யாக் கொழுந்து இலை ஒரு கப் எடுத்து நன்கு கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

கொய்யா பிஞ்சிற்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பு போன்ற பல விதமான உடல் உபாதைகளைத் தீர்க்கக்கூடியது.

கொய்யாப்பழம்-thamil.co.ukகொய்யாப்பழம் சாப்பிடும்போது அதனை தோல் நீக்கிச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் தோன்றும். மேலும் தோலோடு சாப்பிட்டால்தான் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெறமுடியும். அப்பிளைப் போலவே, கொய்யாப் பழத்திலும் அதிக சத்துக்கள் தோலில் மட்டுமே காணப்படுகின்றன.

கொய்யாப்பழத்தில் விட்டமின் A , C ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கொழுப்பு, புரதம் ஆகியவை  சிறிதளவில் உள்ளன. நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் விட்டமின் C சத்து கொண்ட பழம் கொய்யாதான். ஒரு அவுன்சு பழத்தில் 1 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்புச்சத்து, 3 மில்லி கிராம் கல்சியம், 4.1 கிராம்  காபோவைதரேற்று, 0.3 கிராம் இரும்புச் சத்தும் உள்ளது.

விதை நீக்கப்பட்ட கொய்யா இதயத்துக்கு வலுவூட்டும் சக்தியுடையது. இதில் அதிகளவு விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

விஷகிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப்பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டுபண்ணும் விஷக் கிருமிகள் இரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

கொய்யாப்பழம் முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. உங்கள் முகம் பொலிவோடு விளங்க வேண்டுமென்றால் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள்!

தினம் ஒரு கொய்யாப்பழம் வீதம் நாள்தோறும் தொடர்ந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்குப் புற்றுநோய் வரவே வராது. காலையில் உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் கொய்யாப் பழத்தைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீரையும் பருகுங்கள். ஒரு மணிநேரம் கழித்து உணவருந்தலாம். ஆனால் மதியம்வரை கோப்பி, தேநீர் எதுவும் குடிக்கக்கூடாது. பால், பூஸ்ட், ராகி மால்ட் பருகலாம். மாலை வேளையில் கோப்பி , தேநீர் குடிக்கலாம்.

மலச்சிக்கலினால் கஷ்டப் படுகிறவர்கள் இரண்டு தினங்களுக்கு ஒரு முறை கொய்யாப் பழத்தைத் தின்று வந்தால் மலம் இளகளாகச் சரளமாக இறங்கும். சிறுநீர் நன்கு பிரியும். எரிச்சல் குணமாகும்.

மலச்சிக்கல்தான் நோயின் ஆரம்பம். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.

உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய் படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.

இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது.  இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச்சோகையை மாற்றும் தன்மை கொண்டது. கொய்யாப் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. இரத்தத்தைப் பெருகச் செய்யும்.

ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின் C சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்.

அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப் பழம் உண்டு வந்தால் கெட்ட கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.)

சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.

நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.

விக்கல் வந்தால் கொய்யாபழம் உண்ணுங்கள் விக்கல் உடனே நிற்கும்.

கொய்யா மரத்தின் ஜல்லி வேர் அதாவது மெல்லிய வேர்களைக் கொண்டு வந்து அதைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுதும் மூடிவைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நன்று விடும். குழ்ந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும். இந்த நீரைக் கொண்டு மூலத்தைக் கழுவி வந்தால் மூலம் சுருங்கு விடும். ஆனால் தொடர்ந்து 21 நாட்கள் வரை கழுவி வந்தால் தான் குணம் தெரியும்.

-மூலிகைவளம்
-Karthickeyan Mathan

தொகுப்பு – thamil.co.uk