புற்றுநோய் வர காரணமாக நாம் தினசரி உண்ணும் உணவுகள்

புற்றுநோய்கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.

1. மரபணு மாற்றப்பட்ட உணவு – DNA MODIFIED FOODS/HYBRID:
அனைத்து வகை ஹைப்ரிட் காய்கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் – (ACT-II) MICROWAVED POPCORN.

3. தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு (CANNED, PACKAGED DRINKS):
REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளைக் கலங்களைப் பாதிக்கும்.

4.எரிக்கப்பட்ட இறைச்சி – GRILLED MEATS:
அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் புற்றுநோய்க் கலங்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல கலங்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

5.வெள்ளை சீனி – REFINED SUGAR:
கரும்பில் இருந்து எடுக்கும் சீனியை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் சீனியை ‘மந்த விஷமாக’ மாறுகிறது. வெள்ளை சீனிக்கு பதில் நாட்டு சர்க்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள் – SALTED, PICKLED FOODS:
விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்டநாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATESஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்:
கோக் coke முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சீனி வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சீனியைவிட கொடூரமான சோளச்சீனி (CORN SYRUP) சேர்க்கிறார்கள். இது நம் உடலில் அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மா வகைகள்: REFINED WHITE FLOURS:
மைதா, ATTA, தோசா MIX போன்ற மா வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மா வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால்தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்.

9.பண்ணை மீன்கள் – FARMED FISH:
பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்கபடுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில்தான் வளர்கிறது. விலை மலிவில் புற்றுநோய்க் கலங்கள் தூண்ட காரணமான இரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒருமுறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் உடன் கடல்மீன்தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் – Hydrogenated & Refined Oils
விதைகள், காய்கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல இரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்பநபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.

மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.

முடிந்த வரை – “SUGAR FREE”, “DIET”, “LITE”, “FAT FREE” போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் புற்றுநோய் வரக் காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்.

Dr.B.Santhosh Saravanan M.D(A.M), Ph.D(N.D)
Naturopathic Physician.