கருணைக்கிழங்கு‬ – மூலநோயைக் குணப்படுத்தும்

“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.

பிடி கரணைகருணைக் கிழங்கில் காரும் கருணை / பிடிகருணை, காராக் கருணை/ சாதாரண கருணை / சேனைக்கிழங்கு  என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது. சிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. ஜீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க, இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.

கருணைக்கிழங்கு‬காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்வார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது. இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை விட்டமின்களும் உள்ளன.

இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.

மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக ஏற்று நா வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று அனுபவமுள்ளவர்கள் கூறுவதுண்டு.

உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது சற்றுக் கடுமை குறைந்த பத்தியமுறை.

இதன் சுவை காரணமாக, சூடான வீர்யமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் இரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும். கிழங்குகளில் இது சுலபமாக ஜீரணமாவதும் கபத்தையோ வயிற்றில் வாயுக் கட்டையோ செய்யாமலிருப்பதுடன் வாயு கபக் கட்டுகளைப் போக்குவதுமாகும்.

ருசி, பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது, குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது, மூல முளையைச் சுருங்க வைத்து வேதனையையும், தடையையும் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள். “வன சூரணாதி’ என்ற பெயரில் லேகிய மருந்தாக விற்கப்படும் ஆயுர்வேத மருந்தில், கருணைக் கிழங்கு முக்கிய மூலப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

கருணைக்கிழங்கு லேகியம் செய்முறை
கருணைக்கிழங்கு – 1/2 கிலோ (வேகவைத்து தோலுரித்து மசித்து வைக்கவும்)
நல்லெண்ணைய் – 100 ml
சுக்குப்பொடி – 1/4 தேக்கரண்டி
வெல்லம் – 1/4 கிலோ
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு மசித்த கிழங்கை போட்டு 3 நிமிடம் நன்கு வதக்கி பின் சுக்குப்பொடி, வெல்லம் சேர்த்து நன்கு கிளறி கைவிடாமல் கிளறி எண்ணைய் மேலே மிதக்கும் வரை சமைத்து இறக்கி ஆறவைத்து காற்று புகாமல் ஜாடியில் போட்டு வைக்கவும். கருணைக்கிழங்கு லேகியம் ரெடி.

கருணைக்கிழங்கு பொரியல்
கருணைக்கிழங்கு பொரியல்கருணைக்கிழங்கை நன்கு தோல் சீவி மண் வாசனைபோக கழுவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.

வெந்தகிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு மசாலாத்தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.

அதில் நறுக்கி வைத்திருக்கும் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் அப்படியே விடவும். (இடையில் ஒரு முறை கிளறி விடவும்)

கிழங்கு பொன்னிறமாக மாறியதும் வறுத்து பொடித்த தூளை தூவி பிரட்டி விட்டு, உப்பு சரிப்பார்த்து விட்டு அடுப்பிலேயே ஐந்து நிமிடம் வைத்திருக்கவும்.

நன்கு உதிரியாக சிவந்து வரும். அதன் பிறகு கிழங்கை இறக்கி வைத்து விடவும். இன்னும் மொறுகலாக வேண்டுமானால் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் கூடுதல் நேரம் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான கருணைக்கிழங்கு பொரியல் தயார். இன்னும் மொறுகலாக வேண்டுமானால் இன்னும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் கூடுதல் நேரம் வைத்திருக்கவும்.

இந்த பொரியல் சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். கிழங்கை புதிதாக வாங்கியவுடனே சமைத்தால்தான் அரிக்கும். நான்கு, ஐந்து நாட்கள் காற்றோட்டமாக போட்டு விட்டு பின்பு சமைத்தால் அரிக்காது.

-manakkumsamayal.com
-அறுசுவை

தொகுப்பு – thamil.co.uk