பூனை மீசை மூலிகை / சீரக துளசி

மூலிகையின் பெயர்  – பூனை மீசை
தாவரவியல் பெயர் -Orthosiphon Stamineus / O.aristatus
தாவரகுடும்பம் – Lamiaceae
பயன்தரும் பாகங்கள் – சமூலம்

பூனை மீசை.சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூனை மீசை மூலிகை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் நம் உண்ணும் உணவுகள் விசமாகிக்கொண்டு இருக்கின்றன. நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் அதனால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றன. ஆனாலும் நாம் தினமும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்.

முடிந்தவரை அந்த நச்சுப் பொருட்களின் தாக்கத்தை குறைத்து நம்மை பாதுகாத்து கொள்வதே இப்போது இருக்கும் தற்காலிக வழி. இதற்கு தினமும் பூனை மீசை தேநீர் அருந்துவது நல்ல பயனளிக்கும். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தினை சுத்தம் செய்யலாம் மேலும் இதன் பயன்கள் பல. பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை, மேம்படுத்த பூனை மீசை (ஜாவா டீ) என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Orthosiphon aristatusஇதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. பூனை மீசை மூலிகை வாதநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரமாக உள்ளது. மலேசியா, சீனா, இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப் படுகிறது.

மருத்துவபயன்கள்

இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

பூனை மீசை-இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை.

கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது. தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகபடுத்துகிறது.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

java teaஇந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.

சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது.

இது கிரீன் டீ green tea போல தினசரி பயன்படுத்தலாம், நோய் இலாதவரும் பயன்படுத்தலாம். இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள். தினசரி 2 வேளை பயன்படுத்துவதால் மேற்கண்ட அனைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.

-vasivasi.com
-ஆயுர்வேத மருத்துவம்

தொகுப்பு – thamil.co.uk