எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது…..

Burgerதற்போதைய நவீன சமுதாயத்தில் துரிதஉணவுகளின் மீதுள்ள மோகத்தால், உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய உணவுகள், உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதிலும் எவ்வளவு முறை ஜங்க் உணவுகள் ஆரோக்கியமற்றது என்று கூறினாலும், அதை நாம் உட்கொள்ளாமல் இருப்பதில்லை. துரித உணவுகளால் மட்டுமின்றி, தவறான உணவுச் சேர்க்கையாலும் நாம் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். ஆனால் நமக்கு எந்த உணவுடன் எதை சேர்க்கக்கூடாது என்பது தெரியாததால், இத்தனை நாட்கள் நம்மை அறியாமல் பின்பற்றி வந்துள்ளோம். இக்கட்டுரையைப் படித்த பின், இனிமேலாவது தவறான உணவுச் சேர்க்கைகளைத் தவிர்த்து, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உணவின் போது பழங்கள் அல்லது உணவுக்கு பின் பழங்கள்
பழங்களில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு வேகமாக செரிக்கப்படும். ஆனால் இந்த பழங்களை தானியங்களுடனோ அல்லது இறைச்சியுடனோ உட்கொள்ளும் போது, இவை செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதோடு நொதிக்க ஆரம்பித்துவிடுகின்றன. இதனால் இந்த உணவுச் சேர்க்கையை உண்ட பின் குடல் சுவர் பாதிப்பிற்குள்ளாகி, வேறு சில பிரச்சனைகளை உருவாக்குகிறது.

இறைச்சிகளின் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்
தாரா அல்டர் என்னும் நிபுணர், இறைச்சிகளின் புரோட்டீனுடன், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சேர்த்து உட்கொள்ளும் போது, இவ்விரண்டு உணவுப் பொருட்களிலும் உள்ள உணவுகளில் இருந்து சத்துக்களைப் பெற முடியாமல் போகிறது என்று சொல்கிறார். மேலும் இவைகளை செரிக்க உதவும் இருவேறு செரிமான நொதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு, அதன் காரணமாக வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. எனவே அடுத்த முறை இறைச்சிகளுடன், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

எலுமிச்சை மற்றும் சளி மருந்து
எலுமிச்சையானது கொழுப்புக்களை குறைக்கும் ஸ்டாட்டின்களை உடைத்தெறியும் நொதிகளைத் தடுக்கும். ஆனால் அப்போது சளி மருந்தான டெக்ஸ்ரோம்த்ரோபனை எடுக்கும் போது, அது இச்செயலில் இடையூறை ஏற்படுத்தி, பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதுவும் மன பிரம்மை மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை உருவாக்கும். எனவே அடுத்த முறை சளி பிடித்துள்ளது என்றால், இந்த உணவுச் சேர்க்கையைத் தவிர்த்திடுங்கள்.

கார்போஹைட்ரேட் மற்றும் தக்காளி
தக்காளியில் அசிட்டிக் ஆசிட் உள்ளது. அத்தகைய தக்காளியை கார்போஹைட்ரேட்டுடன் உட்கொள்ளும் போது, செரிமான பிரச்சனைகள், இரையக உண்குழலிய எதிர்வினை நோய் மற்றும் இதர செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். சிலருக்கு தக்காளியையும், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவையும் ஒன்றாக சாப்பிட்ட பின் மிகுந்த சோர்வை உணரக்கூடுமாம்.

பழங்கள் மற்றும் தயிர்
தயிருடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமாம். ஏனெனில் பால் பொருட்கள் இரத்த சேர்க்கை, சளியை ஊக்குவித்தல் மற்றும் அலர்ஜியை மேலும் மோசமாக்கக் கூடியவை. அத்தகைய உணவுப் பொருளுடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும். எனவே இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள்.

Cereal மற்றும் பால்
பலருக்கும் இந்த விஷயம் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏனெனில் உலகில் பெரும்பாலானோர் இப்படித் தானே தங்களின் காலை உண்கிறார்கள். இருப்பினும் ஆய்வு ஒன்றில், இவ்விரண்டு உணவுப் பொருட்களிலும் வேகமாக கரையக்கூடிய கார்போஹைட்ரேட் உள்ளதால், செரிமான மண்டலம் அழுத்தத்திற்கு உள்ளாவதோடு, இரத்த சர்க்கரையின் அளவும் ஒரே நேரத்தில் அதிகரிக்கக் கூடுமாம். எனவே காலை உணவாக இவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்து, இட்லி, தோசை என்று நம் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.

Burger மற்றும் fries
பொதுவாகவே இவைகள் மிகவும் ஆரோக்கியமற்றவையாக கருதப்படுகிறது. அதிலும் பர்கருடன் Burger, பிரெஞ்சு ப்ரைஸை French fries உட்கொள்ளும் போது, உருளைக்கிழங்கு ப்ரைஸில் உள்ள சர்க்கரை, சைட்டோகீன்களை உருவாக்கி, உடலினுள் காயங்களை ஏற்படுத்தி, முதுமைத் தோற்றத்தை வேகமாக்கும். எனவே இந்த உணவுச் சேர்க்கையை மட்டுமின்றி, இவைகளை முழுமையாகத் தவிர்த்திடுங்கள்.

– tamil.boldsky.com

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது?

நாம் உண்ணும் போது தவறான உணவு சேர்க்கையால் சிலவித ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. உதாரணத்திற்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் அதனுடன் இஞ்சி சாப்பிடக்கூடாது, அவ்வாறு சாப்பிட்டால் உணவு நஞ்சாகிவிடும்.

தர்பூசணி மற்றும் பால்
தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பப்பாளி மற்றும் தண்ணீர்
பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.

முட்டை மற்றும் பால்
இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.

பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்
பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஓட்ஸை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும் நொதிகளை ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் அழித்துவிடும்.

மேலும் ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் பாலை திரிக்கச் செய்து, உடலில் சளி தேக்கத்தை அதிகரிக்கும். எனவே இந்த உணவு சேர்க்கைகளைத் தவிர்த்திடுங்கள்.

வாழைப்பம் மற்றும் பால்
வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.

மீன் மற்றும் பால்
மீன் சாப்பிட்ட உடனேயே பால் குடிக்கக்கூடாது என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனெனில் மீன் மற்றும் பால் அடுத்தடுத்தோ அல்லது ஒன்றாகவோ உடலினுள் சென்றால், அதனால் உடலில் உள்ள இரத்தம் பாழாவதோடு, சீரான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.

-Suba Printers Mohan

தொகுப்பு – thamil.co.uk