அலிசி விரை

அலிசி விரைஅலிசி விரை thamil.co.uk

 

 

 

 

 

அலிசி விரை : ALISHI VIRAI
ஆங்கிலப் பெயர் : LINSEED – SEEDS OF
தாவரவியல் பெயர் : LINUM USITATISSIMUM
மருத்துவ பகுதி : பூ, விதை எண்ணெய்
சுவை : இனிப்பு, துவர்ப்பு
வீரியம் : சீதம்
பிரிவு : இனிப்பு
செயல் : காமம் பெருக்கி (APHRODISIAC), வரட்சியகற்றி(EMMOLLIENT), துவர்ப்பி (ASTRINGENT)
குணம் : பூ – இதன் பூ இருதயத்திற்கு வலுவைத்தரும்.
குறிப்பு – அலிசி விதையும் ஆளிவிதையும் ஒன்றென்று சிலர் கருதியுள்ளார்கள் இது தவறான கருத்து. அலிசி இது இந்தியாவிலும், இலங்கை,  இமயமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் பயிராகின்றது.

அலிசி விதைஅலிசி விதை thamil.co.uk

 

 

 

 

 

அலிசி விதை flax seed மருத்துவ குணம்
இருமல், சாயம், நீறேரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, நீர்க்கோவை, சூதக சன்னி, தீப்புண், உள்தாபிதம், வாத வீக்கம்,கட்டிகள், கண் நோய், ஆகிய இவைகளை நீக்கும். அலிசி விதையை பொடித்து சுத்தமான நீரில் ஊறவைக்க குழ குழபாகும். அதை வடித்துச் பசியை எடுத்துக் ககிலிட கண் சிகப்பு, கண் அரிப்பு, கண் எரிச்சல், மாறும். இப்பசையுடன் தேன் கலந்து கொடுக்க நீர்க் கோவை, இருமல், நீங்கும். மூத்திர எரிச்சல், நீரடைப்பு, வெள்ளை இவைகள் உள்பிரயோகத்தால் தேறும். இதையே நீர்த்தாரை, ஆசனவாயின் மூலமாகச் செலுத்த அவைகளைச் சம்பந்தப்பட்டுக் இளைக்கும் நோய்கள் தணியும். குடிக்கக்கூடிய அளவு நீரில் இவ்விதியை பொடித்துக் கூட்டி இரவு முற்றும் வைத்திருந்து மறுநாள் காலையில் அதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் குடித்துவர சயரோகத்தில் உண்டாகும், அழலை, வியர்வை தணியும். இதன் எண்ணெய்யை மேற்கூறிய நீருடன் கலந்து உட்கொண்டுவர ஷயரோகத்தின் சுவாசயத்தைப் பலப்படுத்தும். விதையை அரைத்து புற்கை செய்து கட்ட வாத வீக்கமும் குறையும் பழுக்காத கட்டிகள் பழுக்கும். உள் தாபிதங்கள் போகும்.

-K S kandasamy