இந்துமத சம்பிரதாயங்கள்

நமசிவய -thamil.co.ukநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும். நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும்.

அதன் விவரம் வருமாறு:

ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு

இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப்படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப்போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.

Via FB இந்து மத வரலாறு – Religious history of hinduism

 

சிவ வழிபாடு செய்வது எப்படி ?

வேண்டுதல், பிராத்தனை, வழிபாடு என்பது ஒரு மாதிரியாக இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு. அந்த வகையில் சிவ வழிபாடு பற்றி பார்போம்.

பலி பிடம்முதலில் கொடி மரத்தை வணங்கி, பின் பலி பிடத்தை வணக்க வேண்டும். பலி பிடம் என்பது நந்தி தேவருக்கு பின் உள்ளது. இது அந்த ஆலயத்தின் பிரதான மூர்த்தி யாரோ அவரின் பாத கமலனக்களை குறிக்கும் விதமாக தாமரை வடிவில் இருக்கும்.

இந்த பலி பிடம் பாசத்தை உணர்த்துகிறது. அதாவது மனித வாழ்வில் இயல்பான காம, குரோத, லோப, மோக, மத மாச்சரியங்களை பலி கொடுப்பதாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நமது ஆணவம், அகங்காரம் பற்றுகளை பலி இட்ட பின்னரே தெய்வ சித்தி கிட்டும். கோவிலின் எட்டு மூலைகளிலும் அஷ்ட திக் பாலகர்களான இந்திரன் அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், எசாணன் முதலியவர்களுக்கு தலைமை பிடமாக இருப்பது பலி பிடமாகும்.

கொடி மரத்திற்கு அடுத்து பலி பிடத்தை வணங்கி நந்தி தேவரிடம் வருகிறோம்.

யார் இந்த நந்தி?

உத்தமமான முனிவர் கிலாதர். அவர் பத்தினி சித்ரவதி அம்மையார். இந்த முனி தம்பதியரின் தவப்பயனால் கைலைநாதன் ஸ்ரீ சைலம் போக என்று அன்பு கட்டளை இட்டார்.

பரம்பொருளின் உத்தரவு படி ஸ்ரீ சைலம் வந்தார்கள். புத்திர பாக்கியம் வேண்டி பல வேள்விகளை நடத்தினார்கள். கடும் தவம் புரிதார்கள்.

கருணை கடலான சிவபெருமான் அருளால் சூரியனை போன்ற பிரகாசமான மகன் பிறந்தான். அன்னை சிதிரவதி அம்மையார் பாசத்தை பொழிந்து மகனை சீராட்டி தாலாட்டி வளர்த்தார். சகல கலைகளையும் தந்தை கிலாதர முனிவர் கற்பித்தார்.

வளர்ந்து வாலிபத்தை தொட்டார் நந்தி. எல்லா தாயாருக்கும் உள்ள கவலை சித்ரவதிக்கும் வந்தது. பருவத்தே திருமணம் செய்ய ஆசை பட்டாள். ஆனால் நந்தி பகவானோ தவ கோலம் பூண்டார்.

பெற்று வளர்த்து சீராட்டி பாராட்டி வளர்த்த தாய் தந்தையரை வணங்கி…. என்னை ஆசிர்வதியுங்கள். நான் பரம் பொருளை காண கடும் தவம் செய்ய போகிறேன் என்றார் ரிஷி குமாரன் நந்தி.

காலம் போடும் கணக்கை புரிந்து கொண்ட முனி தம்பதிகள் ஆசிர்வதித்தார்கள். எல்லா வளமும் பெற்று மங்கலம் பெருகுக என்று வாழ்த்தினார்கள்.

விடை பெற்ற நந்தி அக்கினியில் பல ஆண்டுகள் நின்று கொண்டே தவம் செய்தார். மெய் வருத்த செய்த தவத்தின் பயனாக பரமேஸ்வரன் நேரில் வந்தார்.

மகனே… எனது ஆணை எங்கும் நிறைத்தது. அதுபோல் இன்று முதல் உனது அதிகாரமும் எங்கும் நடக்கும். அதனால் அதிகார நந்தி என்று சொல்லபடுவாய் என்று ஆசிகள் கூறினார்.

நந்தி தேவன் அதிகார நந்தி என்று பெயர் பெற்ற பின்னாலும் கடும் தவம் செய்தார். அந்த தவத்தின் பயனாக மீண்டும் வரங்கள் தந்தார்.

அனைத்து பூதங்களுக்கும் உன்னை தலைவனாக ஆக்குகிறேன். சிவ ஞானத்தை உலகிற்கு போதிக்கும் ஆசிரியனும் நீ. எனக்கு வாகனமாகவும், கைலயில் காவல் தெய்வமாகவும் நீயே இருப்பாய். அதனால் என்னை போலவே நீயும் நித்தியனாக இருப்பாய் என்று வரமளித்தார்.

நந்தி சைவர்களுக்கு குரு. நந்தி என்றாலே எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பார் இருப்பவர் என்று பொருள். இவரின் அனுமதி பெறாமல் சிவ தரிசனம் செய்வது தவறு. அப்படி வணக்கினால் சிவனருள் கிட்டாது.

பொதுவாக சிவ ஆலையத்தில் நந்தி தேவர் எப்பொதும்சிவனை துதித்து வணங்கியபடியே இருப்பதால், சிவனுக்கும் நந்திக்கும் இடையே செல்வதை தவிர்க்க வேண்டும். நந்தி தேவர் வழிபாடு பிரதோஷ காலத்தில் செய்வதே பிரதானமாக இருக்கிறது.

திரயோதசி அன்று மாலை சூரிய அஸ்த மனத்திருக்கு முன்னதாக ஒன்னரை மணி நேரம் பிரதோஷ காலமாக கருதபடுகிறது. அந்த நேரத்தில் தான் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே, அண்டத்தின் மீது நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார்.

இவ்வேளையில் உலகில் உள்ள அனைத்து சீவன்களும் சிவபெருமானுக்குள் ஒடுங்கி விடுவதாக புராணம் சொல்கிறது. பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும் சிவனையும் துதிப்பது 1000 அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

கல்வி, செல்வ வளம் பெற்று, கடன் தொல்லை, வறுமை, மனக்கவலை நீங்கி குறிப்பாக மரணபயம் அற்று வாழ பிரதோஷ வழிபாடு சிறப்பு.

நந்தி தேவர் மந்திரம்:

தத் புருஷாய வித்மகே

சக்ர துண்டாய தீமைகி

தன்னோ நந்தி பிரசோதயாத்

நந்தி தேவரை வணங்கி அனுமதி பெற்று சிவதரிசனம் செய்த பிறகு சண்டிகேசுவரை வணங்க வேண்டும்.

யார் இந்த சண்டிகேசுவரர்?

இவர் ஒரு சிவனடியார். சிவ சன்னதியில் சிறு இடைவெளி விட்டு இடது புறத்தில் சிறிய ஆலயம் அமைக்க பட்டிருக்கும். இவருக்குயென தனியாக மாலையோ நெய்வேதியமோ கிடையாது.

மூலஸ்சாணத்தில் சார்த்திய மாலையும், மிதமுள்ள நெய்வேத்தியமும் தான் இவருக்கு உரியது.

எப்போதுமே தவநிலையில் இருந்து சிவபெருமையை நெஞ்சுருக பிரார்த்தித்து கொண்டிருப்பார். அவரை வணக்கும் போது சிவனருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று இவரிடம் கேட்க வேண்டும்.

பின் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி கொடி மரத்திற்கு முன்னாள் நமஸ்காரம் செய்தால் சிவதரிசனம் நிறைவு பெறுகிறது.

Via FB சர்வம் சிவமயம்

செவ்வாய்,வெள்ளி மகிமை !

செவ்வாய் கிழமையை பெரும்பாலனவர்கள் ராசில்லாத நாளாகவும், வெறும்வாய் என்பார்கள் அது முற்றிலும் தவறாகும். செவ்வாயை எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை. அறிவியல் பூர்வமாக இது ஒரு சிறந்த கிழமையாகும்.

செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம். இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அத்னால் அந்தகாலத்தில் ரிஷிகள் இந்த பெயரை வைத்தார்கள். வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள். இந்த நாளில் பூமி சம்பந்தபட்ட காரியங்கள் செய்யலாம். விவசாய வேலைகள் செய்யலாம். மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது. செவ்வாய்  முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும்.

மகாலெஷ்மியின் அம்சம் பொருந்திய கிழமை வெள்ளிகிழமை. இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிரச்சாரியார் அமசம் பெற்றது இந்த கிழமை.

சுபகாரியங்கள், திருமண காரியங்கள், தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும். அதேபோல் வெள்ளியில் பெண்குழந்த பிறப்பதும் சிறப்பாகும்.

# அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு !

அனைத்து சிவாலங்களிலும், ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நவக்கிரகங்கள் மேற்குதிசை முகப்பாக அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் கிரகம் சூரியன். சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும், மேற்கில் சனியும், வடக்கில் குரு, தெற்கில் செவ்வாய், வடகிழக்கில் புதன், தென் கிழக்கில் சந்திரன், வட மேற்கில் கேது, தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர்.

நவக்கிரகங்கள்

சூரியன் கிழக்கு முகமாக இருப்பார்.
சந்திரன்-மேற்கு;
செவ்வாய்- தெற்கு;
புதன்-வடக்கு; குரு-வடக்கு;
சுக்கிரன்-கிழக்கு;
சனி-மேற்கு;
ராகு-தெற்கு;
கேது-தெற்கு.

இந்த முறையில் அமைந்திருப்பார்கள். ஒவ்வொரு நவக்கிரகமும் தனித் தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள். சிவாலயங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை.

நவக்கிரகங்களை 7 முறை கடிகார சுற்றிலும், 2 முறை எதிர் சுற்றிலும் வலம் வந்து வணங்க வேண்டும். ஏனென்றால் சூரியன் முதலான ஏழு கிரகங்கள் இடமிருந்து வலமாக சுற்றும் ஆனால் ராகு,கேது இரு கிரகங்களும் வலமிருந்து இடமாக சுற்றும்.

பெரும்பாலும் நவக்கிரக ஸ்லோகங்கள் சமஷ்கிருதத்தில் இருக்கும்.அதை அனைவரும் மனனம் செய்து சொல்வது சிரமம்.ஆதலால் கீழ்கண்ட எளிய முறையில் சொல்லலாம்.

சூரியனே போற்றி, சந்திரனே போற்றி, செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி, ராகு,கேதுவே போற்றி போற்றி என சொல்லிகொண்டே நவக்கிரகத்தை வழிபடலாம்.

# அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

குல தெய்வம் 

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெருக்கமான துணை வேண்டும் அது வாழ்க்கை துணையாக இருக்கலாம், நண்பனாக இருக்கலாம் அப்படி இல்லாவிட்டால் நம்முடைய குலதெய்வமாக இருக்கலாம். நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குல தெய்வம் ஆகும்.

நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும், ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும். இவர்களுக்கு காவல் தெய்வம், குல தெய்வம் வழிபாடு இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு, முதல் முடி குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள். சிலர் காது குத்துவார்கள்.

குலதெய்வம் வழிபாடு இந்து சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும். அடிப்படையில் நம்முடைய இந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. குல தெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. அப்படியானால் குலதெய்வமும், இறைநிலையும் வேறுவேறா?அப்படி கிடையாது, அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

உலகத்தில் இன்பத்தையும், பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லோராலும் முடியாது, லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்கும் தான் இறைதூதர்களையும், தேவதைகளயும் இறைவன் படைத்திருக்கிறார். அவர்களே குலதெய்வங்கள் ஆவார்கள்.

குல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள், முழுவதும் பங்காளி ஆவார்கள். இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதுபவர்கள். இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டார்கள்.

மேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்க வேண்டும். எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும், சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.

# அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

மஹாளய அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல்உலகத்தில் இருந்து அமுதுபெற்று நமது வீடுகளுக்கு வருகை தருவதாக நம்பிக்கை ஆகும்.

நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எவ்வித குறைகளும் இன்றி நலமோடு வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியமாகும். அந்த ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்க அமாவாசை தினத்தில் சிரார்த்தம் கொடுப்பது நன்மையாகும். வரும் அமாவாசை மஹாளய அமாவாசையாகும். இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்பணம் கொடுப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.

பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள். அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.

இந்த தினத்தில் விரதமிருந்து பிதூர் தர்பணம் செய்தால் கர்ம வினைகள் விலகும்,ஏழு தலைமுறைக்கு புண்னியம் சேரும்.

# அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

அட்டமா சித்திக்கள்

1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் “எல்லாம்வல்ல சித்தரான படலம்” என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

நன்றி: சித்தர் மயம்
Via FB தமிழ் தந்த சித்தர்கள்