யந்திரம் எழுதும் முறைகள்

யந்திரம் எழுதும் முறைகள்நீங்கள் வெளியில் தகட்டில் எழுதும் யந்திரங்களையும் அதில் எழுதும் அட்சரங்களையும் முதலில் உங்கள் மனதில் தியானித்து அந்த யந்திரத்தை மனக்கண்ணால் பார்த்தவாறே ஆத்மாவில் வரையவும். ஒவ்வொரு கோடாக ஒவ்வொரு அட்சரமாக மனக்கண்ணில் பார்த்தவண்ணம் ஆழ்மனதால் தியானித்து உங்கள் மார்பின் உள்பகுதியில் எழுதுவதாக பாவித்துக் கொள்ளவும்.

யந்திரம் முழுமை பெற்றபின் சற்று நேரம் அந்த யந்திரத்தின் மூல மந்திரங்களை செபிக்கவும். அதன்பிறகு தயாராக வைத்துள்ள யந்திர தகட்டில் எழுதுகோல் துணையுடன் எழுதவும். இவ்வாறு செய்யும்போது ஆத்ம சக்கரம் முழுவலிமையுடன் அப்படியே யந்திர தகட்டில் பதியும். அந்த யந்திரமே பலன் கொடுக்கும்.

ஆதிசங்கரர்கூட இந்த முறையை கடைபிடித்தே சக்கர ஸ்தாபிதம் செய்தார். ஒரு யந்திரம் எழுதுகிறீர்கள் என்றால் அதை முதலில் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். இன்னொரு வரைபடத்தை பார்த்து பார்த்து வரைவது முழுபலன் தராது. கவனம் மற்றும் கருத்து சிதறல் உண்டாகும். ஆன்மிகர்கள் உண்மையிலேயே மந்திர சித்தி செய்திருந்தால் ஆரம்ப சித்திகளை செய்திருந்தால் மனப்பாட சக்தி தன்னால் தன்னிடம் இருக்கும். எனவே அதைக்கொண்டு யந்திர வரைபடத்தை பார்த்து அதன் கோடுகள் அட்சரங்கள் என முழுவதையும் சற்றுநேரம் உற்றுபார்த்து மனப்பாடம் செய்துகொண்டு பிறகு மனதியானம் செய்து அடுத்து வெளியில் யந்திரம் எழுதி பின் நன்னீரால் சுத்தப்படுத்தி மீண்டும் மந்திரம் செபித்து உரியவரிடம் சேர்பிக்க வேண்டும். இதுவே யந்திரம் சித்தியாகி வலிமையுடன் பலன் கொடுக்கும்.

இங்கு ஒரு பழமையான யந்திரம் எழுதும் முறையை அறிந்து கொள்க
பழங்காலத்தில் இருந்தே யந்திரம் எழுத ஒரு முறை இருந்தது ஆனால் இப்போது அம்முறையை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. பஞ்சபூத சக்திகளை மையமாகக் கொண்டு அஷ்டகர்ம முறைகள் கையாளப்பட்டது. பஞ்சபட்சியும் இவ்வாறே செயல்பாடுகள் பிரிக்கப்பட்டது. இதேபோல் நம் விரல்கள் பஞ்சபூத சக்திகளை கொண்டது எனவே செயலுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட தத்துவம் கொண்ட விரல்களை தேர்ந்தெடுத்து அவ்விரல்களின் அங்குலாஸ்த்தியின் அளவிற்க்கு தகட்டை எடுத்து யந்திரம் எழுதி பயன்படுத்தினர்.

நாளடைவில் யந்திர தகட்டின் அளவு முக்கியமென்று வழக்கத்தில் கண்டுணரப்பட்டது. மேலும் மனமும் அட்சரமும் தான் அதைவிட முக்கியம் என்று ஆராய்ச்சியில் தெறிந்த பின்பு விரல் அங்குல அளவு பயன்படுத்தி யந்திரம் எழுதும்முறை மாறத்தொடங்கியது. முஸ்லிம்களின் ஆன்மீக வளர்ச்சி நம் சித்தர்களின் மூலகருவை மையமாகக் கொண்டதாகும். இவர்கள் தகட்டில் மட்டும் அன்றி பலதிலும் யந்திரம் எழுதினால் பலிக்கும் என்பதை வழக்கத்தில் கொண்டு வந்தனர். நம் சித்தர்கள் காலத்திற்க்கு பின் மிகபிரபலமாக யந்திரத்தைஊக்குவித்த பெருமை முஸ்லிம்களுக்கே உண்டு. இந்துக்கள் யந்திரம் எழுதும் பழக்கம் மிக குறைவாகவே கொண்டிருந்தனர். இந்து குருமார்கள் கடைபிடித்த ஒழுக்க நெறிமுறையே இதற்க்கு காரணமாகும். பின்னாளில் இந்த தவறு சரிசெய்யப்பட்டது.

மனதால் போடும் கிறுக்கல் யாவுமே மந்திரக்கோடுதான் அது நம் எண்ண சக்திப்படி சிறப்பாக வேலை செய்யும் என்று சொன்னவர்கள் நம் சித்தர்கள் ஆவர். இதை செவ்வனே ஏற்று நடைமுறையில் நிரூபித்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்தான். இன்றும் கூட அவர்களின் யந்திரம் கிறுக்கலாகத்தான் இருக்கும். அழகாக யந்திரம் எழுதும்போது சிறுதவறு உண்டானாலும் அது நம் மனதை பாதித்து யந்திரத்தின் சக்தியை குறைத்துவிடும். எனவே அதற்க்கு வாய்ப்பளிக்காமல் நாங்கள் மனஆற்றலைக்கொண்டு யந்திரத்தில் கோடுகளை இடுகிறோம். அதில் ஒழுங்கு முறைகளை பார்ப்பதில்லை. மன ஆற்றலால் சக்தியை பதித்துவிட்டோம் என்பதையே முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று முஸ்லிம் பெருமக்கள் கூறுகிறார்கள் இதில் உண்மையுள்ளது.

சில இரகசியங்களை பலரும் அறியும் வகையில் கூறினால் அதன் விளைவு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றே சித்தர்கள் முதல் ஞானிகள் அனைவரும் இந்த கலையை பரிபாஷையாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கிறார்கள். முதலில் குருமூலமாக மாந்திரீக முறைகளை கற்க வேண்டும் என்ற நியதி இதனால்தான் ஏற்பட்டது.

அஷ்ட கர்ம பிரயோகங்களில் யாதேனும் ஓர் தேவைக்காக இயந்திரம் ஒன்றை கீறவேண்டி ஏற்படின் அவற்றுக்குறிய முறையை சரியாக பயன்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டல் அதன் பலன் கண்டிப்பாக கிடைக்காது.

சில குறிப்பிட்ட மந்திரப்பிரயோகத்துக்கான இயந்திரங்கள் இன்றும் இரகசியமாகவே இருக்கிறது அது சரியான குருமூலம் அன்பான பன்பான மாணவனுக்கு மட்டும் குருவின் சமாதி காலங்களில் கிடைக்கும். பெரும்பாலான இயந்திரங்கள் வரைவதற்கான சரியான முறைகள் குறிப்பிட்ட மந்திரப்பாடலில் விளக்கமாகவே இருக்கும். இயந்திரங்கள் வரைவதற்கான சில பொது விதிமுறைகள் இருக்கிறது அவற்றை பார்க்கலாம்.

அட்ஷரம் கீறும் முறை – பொதுமுறை
1. செம்புத்தகடாக இருக்க வேண்டும்.
2. குறைந்த பட்சம் 5” x 5” அங்குலமாக இருக்கவேண்டும்.
3. இருப்பு ஆனியினால் கீற வேண்டும்.
4. தகட்டில் காயம் ஏதும் வரக்கூடாது.
5. கீறும்போது சிறுதவறு ஏற்பட்டாலும் திருத்தம் செய்யக்கூடாது. மீண்டும் புதிய தகட்டில் கீறவும்.
6. கோடுகள் தெளிவாக இருக்கவேண்டும்.
7. எழுத்துக்கள் அல்லது இலக்கங்கள் சற்று அழுத்தமாக இருக்க வேண்டும்.
8. சமச்சீர் சரியாக இருக்க வேண்டும்.
9. கோணங்கள் சரியாக இருக்க வேண்டும்.
10. வாசல் மற்றும் மூலை நேராக வர வேண்டும்.
11. விந்து என்னும் வட்டம் மையத்தில் அமைய வேண்டும்.
12. ஓங்காரம் சுற்றும்போது சரியாக அட்ஷரம் அதனுள் அமையவேண்டும்.
இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் அட்ஷரங்கள் சரியான பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. தகடுக்கு பதிலாக மரப்பலகையோ அல்லது வேறு எதுவாயினும் பாவிக்கலாம். அவற்றை குறிப்பிடப்படும் அளவு மாறாமல் இந்த விதிமுறைக்கு ஏற்ப செய்தால் பலன் கிடைக்கும்.

– Gopalan