பழந்தமிழ் இசை – தமிழ் இசையின் பண்கள் – தொடர் 3 : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம்
பழந்தமிழ் இசை – நான்காம் பாகம் – தமிழ் இசையின் பண்கள்

மேசகல்யாணி

மேசகல்யாணி அல்லது கல்யாணி கருநாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக்கூடிய இவ்விராகத்திற்கு மாலைப்பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக்கூடிய இராகம். எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய மிக முக்கியமான ராகங்களில் ஒன்று கல்யாணி.

ஐந்து சுரங்களைக் கொண்ட மோகனம் எவ்வளவு இனிமையானதோ அதேபோன்று ஏழு சுரங்களைக் கொண்ட இந்த இராகமும் மிக இனிமையானதாகும். ஏழுசுரங்களை கொண்ட இந்த ராகத்தை சம்பூரண ராகம் என அழைப்பர்.

தமிழிசைப் பாரம்பரிய கர்னாடக இசையில் தாய் இராகமான கல்யாணி 65வது மேளகர்த்தா இராகமாகும். தமிழ் தொல்லிசை மரபில் “அரும்பாலைப்பண்” என அழைக்கப்பட்ட இந்த கல்யாணி இராகம் தமிழ் மக்கள் இசை உலகத்திற்கு வழங்கிய கொடைகளில் ஒன்றாகும்.
ஆரோகணம் : ச ரி2 க3 ம2 ப த2 நி3 ச்
அவரோகணம் : ச் நி3 த2 ப ம2 க3 ரி2 ச

மேசகல்யாணி இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2). காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேசகல்யாணியின் சேய் இராகங்கள்
சாரங்கா, அமிர்தவர்ஷிணி, யமுனாகல்யாணி, ஹமீர்கல்யாணி, ரசமஞ்சரி, மோகனகல்யாணி, குந்தலசிறீகண்டி, குந்தலகுசுமாவளி, சதுரங்கணி, கௌரிநிஷாதம், சுநாதவினோதினி, மைத்திரபாவனி, கௌமோத, கல்யாணதாஹினி, வந்தனதாரினி, சுப்ரவர்ணி, ஸ்மரரஸாளி, கமலோத்ரம்.

கல்யாணி  இராகம்நாதஸ்வர இசைக்கலைஞர்கள் இந்த இராகத்தை தன்னிகரற்ற வகையில் வாசித்து பரவசப்படுத்துவர். தமிழ் செவ்வியல் இசையில் மிக ஆலாபனை செய்து பாடக்கூடிய இராகமாகவும் கற்பனைக்கும் இடம் கொடுக்கக் கூடிய இராகமாகவும் இருப்பதால் சினிமாவில் அதிக அளவில் பயன்பட்ட இராகமாகவும் இது விளங்குகிறது. தொட்ட இடம் எல்லாம் இனிப்பது என்பது இந்த இராகத்தின் சிறப்பாகும். திரை இசை அலைகளில் மிதந்து நம் நெஞ்சங்களில் கோடி அலைகளை மீட்டிய பெருமைக்குரிய இராகம் இந்தக் கல்யாணியாகும்.

இந்த இனிமையான கல்யாணி இராகத்தில் நூற்றுக்கணக்கான திரையிசைப்பாடல்கள் வெளிவந்திருகின்றன. நீட்சி காரணமாக பலவற்றைத் தவிர்த்து வந்திருக்கிறேன்.

மேசகல்யாணி இராகம்கல்யாணி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்

பாடல் : சிந்தனை செய் மனமே….
படம் : அம்பிகாபதி (1957)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : ஜி.ராமநாதன்

பாடல் : புத்தம் புதிய புத்தகமே…..
படம் : அரசகட்டளை (1967)
பாடியவர்கள் : T M சௌந்தரராஜன், P சுசீலா
இசை : K V மகாதேவன்

பாடல் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே…..
படம் : எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : T .G .லிங்கப்பா

பாடல் : அத்திக்காய் காய் காய்…..
படம் : பலே பாண்டியா (1962)
பாடியவர்கள் : T M சௌந்தரராஜன், P சுசீலா, ஸ்ரீநிவாஸ், ஜமுனாராணி
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : மதுரையில் பறந்த மீன் கொடியை…..
படம் : பூவா தலையா (1969)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன்
இயற்றியவர் : வாலி

பாடல் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்…..
படம் : தவப்புதல்வன் (1972)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன்

பாடல் : சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்…..
படம் : ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : P சுசீலா
இசை : விஸ்வநாதன்

பாடல் : மன்னவன் வந்தானடி தோழி…..
படம் : திருவருட் செல்வர் (1966)
பாடியவர் : P சுசீலா
இசை : K V மகாதேவன்

பாடல் : மன்னவன் வந்தானடி தோழி….
படம் : திருவருட் செல்வர் (1966)
பாடியவர் : P சுசீலா
இசை : K V மகாதேவன்

பாடல் : நதியில் ஆடும் பூவனம்…..
படம் : காதல் ஓவியம்
பாடியவர்கள் : SPB, S ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…..
படம் : சிறையில் பூத்த சின்ன மலர்
பாடியவர்கள் : K J ஜேசுதாஸ், சித்ரா
இசை : இளையராஜா

பாடல் : ஜனனி ஜனனி ஜெகம் நீ…..
படம் : தாய் மூகாம்பிகை
பாடியவர் : இளையராஜா
இசை : இளையராஜா

பாடல் : அம்மா என்றழைக்காத…
படம் : மன்னன்
பாடியவர் : K J ஜேசுதாஸ்
இசை : இளையராஜா

பாடல் : கலைவாணியே உனைத்தானே…..
படம் : சிந்துபைரவி
பாடியவர் : K J ஜேசுதாஸ்
இசை : இளையராஜா

பாடல் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…..
படம் : தளபதி
பாடியவர்கள் : SPB, S ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : வெள்ளைப்புறா ஒன்று…..
படம் : புதுக்கவிதை
பாடியவர்கள் : K J ஜேசுதாஸ், S ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : நிற்பதுவே நடப்பதுவே…..
படம் : பாரதி
பாடியவர் : ஹரீஸ் ராகவேந்திரா
இசை : இளையராஜா

சிந்து பைரவி

இந்திய இராகங்களில் ஒன்றாக கலந்த இராகங்களில் முதன்மையானது சிந்துபைரவி ஆகும். நாட்டுப்புற இசைக்கு பொருந்தும் இந்த இராகம் தமிழ் செவ்வியல் இசையில் கச்சேரி முடிவில் சிறிய பாடல்களைப் பாடப் பயன்படுத்தப்படுகிறது. சிந்துபைரவி, 10வது மேளகர்த்தா இராகமாகிய நாடகப்பிரியாவின் சேய் இராகம் ஆகும். இது ஹிந்துஸ்தானி இராகமான பைரவி என்ற இராகத்திலிருந்து வந்தது. பைரவியில் எல்லா சுரங்களும் சுத்தசுரங்களாக இருந்தால் அது சிந்துபைரவி ஆகிறது. சிந்துபைரவி இராகத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த இராகத்தையும் சுலபமாகப் பாடலாம்.

பாடுவதற்கேற்ற நேரம் : காலை முன்ஜாமம் மற்றும் இரண்டாம் ஜாமம்.
பாடுவதற்கேற்ற மனநிலைகள் : வீரரசம், உண்மையான கோபம், மற்றும் அனைத்து வகையான உணர்ச்சிகளும்.

வடஇந்தியாவிலிருந்து வந்த இராகம் இது எனக் கூறப்படுகின்ற இந்த இராகம் மத்திய கிழக்கு மற்றும் அரேபியாவில் அதிகம் புழக்கத்தில் உள்ள இராகமாகும். சங்கீத மும்மூர்த்திகள் இந்த இராகத்தில் அதிக சாகித்தியங்கள் இயற்றவில்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது. இந்த இராகத்தில் அமைந்த சில பாடல்களாக
கருணை தெய்வமே கற்பகமே….. போன்ற பாடல்களும் பிரசித்தமானவையாகும்.
இயற்றியவர் : மதுரை ஸ்ரீநிவாசன்
இராகம் : சிந்து பைரவி
தாளம் : ஆதி
ஆரோகணம்: ச ரி2 க2 ம1 க2 ப த1 நி2 ச்
அவரோகணம்: நி2 த1 ப ம1 க2 ரி1 ச நி2 ச்

தமிழ் பக்திப் பாடல் வரிசையில்,
பாடல் : சின்னஞ் சிறு பெண் போலே…..
இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம
இராகம் : சிந்து பைரவி
தாளம் : ஆதி
சிந்துபைரவி எல்லோரையும் கவரும் சக்தி கொண்ட இராகம். இந்திய நாடகமேடைகளிலும் புகழ் பெற்ற சிந்துபைரவியை சினிமாவிலும் புகழ் பெற வைத்தவர்கள் நாடகப் பரம்பரையில் இருந்து வந்த சினிமா இசையமைப்பாளர்களே. நாட்டுப்பற இசை சார்ந்த பாடலாயினும், செவ்வியல் இசை சார்ந்த பாடல்களாயினும் அழுத்தமான முத்திரைகளைப் பதித்த இராகம் சிந்துபைரவி ஆகும்.

தொடர் - 87சிந்து பைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்

பாடல் : வதனமெ சந்திர விம்பமோ…..
படம் : சிவகவி
பாடியவர் : எம்.கே.தியாகராஜா பாகவதர்
இசை : ஜி.ராமநாதன்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடல் : பூமியில் மாநிட ஜென்மம்…..
படம் : அசோக்குமார் (1941)
பாடியவர் : எம்.கே.தியாகராஜா பாகவதர்
இசை : ஜி.ராமநாதன், ஆலந்தூர் சிவசுப்ரமணியம்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடல் : .காற்றினிலே வரும் கீதம்…..
படம் : மீரா
பாடியவர் : M S சுப்புலட்சுமி
இசை : S V வெங்கட் ராமன்

பாடல் : மணப்பாறை மாடு கட்டி…..
படம் : மக்களைப் பெற்ற மகராசி (1957)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : K V மகாதேவன்
பாடலாசிரியர் : மருதகாசி

பாடல் : சித்தமெல்லாம் எனக்கு சிவா மயமே…..
படம் : திருவருட் செல்வர் (1967)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : K V மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : ஒன்றானவன் உருவில் இரண்டானவன்…..
படம் : திருவிளையாடல் (1965)
பாடியவர் : K B சுந்தராம்பாள்
இசை : K V மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : என்னை யாரென்று எண்ணியெண்ணி…..
படம் : பாலும் பழமும் (1961)
பாடியவர் : T M சௌந்தரராஜன், P சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : எங்கே நீயோ நானும் அங்கே…..
படம் : நெஞ்சிருக்கும் வரை (1967)
பாடியவர் : P சுசீலா
இசை : விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : சொன்னது நீதானா சொல் சொல்…..
படம் : நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
பாடியவர் : P சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : அமுத யோகம் வெள்ளிகிழமை…..
படம் : பாட்டாளியின் சபதம் (1960)
பாடியவர் : T M சௌந்தரராஜன், P லீலா
இசை : வேதா

பாடல் : காதல் எனும் சோலையிலே ராதே ராதே…..
படம் : சக்கரவர்த்தித் திருமகள் (1957)
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : ஜி.ராமநாதன்

பாடல் : நினைக்கத் தெரிந்த மனமே…..
படம் : ஆனந்த ஜோதி (1962)
பாடியவர் : P சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : வாராய் என் தோழி வாராயோ…..
படம் : பாசமலர் (1961)
பாடியவர் : எல்.ஆர்.ஈஸ்வரி, குழுவினர்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : உனக்கென்ன மேலே நின்றாய்…..
படம் : சிம்லா ஸ்பெஷல் (1982)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : விஸ்வநாதன்

பாடல் : தஞ்சாவூரு மண்ணெடுத்து…..
படம் : பொற்காலம் (1997)
பாடியவர் : கிருஷ்ணராஜ்
இசை : தேவா

பாடல் : மார்கழி திங்கள் அல்லவா…..
படம் : சங்கமம் (1997)
பாடியவர் : எஸ் ஜானகி, உன்னிகிருஷ்ணன்
இசை : ஏ.ஆர்.ரகுமான்

இசைஞானி இளையராஜா தந்த சிந்துபைரவி இராகத்தில் அமைந்த பாடல்கள் வருமாறு
பாடல் : மாதா உன் கோவிலில்…..
படம் : அச்சாணி (1978)
பாடியவர் : எஸ். ஜானகி

பாடல் : இளமை என்னும் பூங் காற்று…..
படம் : பகலில் ஒரு இரவு (1979)
பாடியவர் : எஸ் .பி.பாலசுப்பிரமணியம்

பாடல் : என்ன சத்தம் இந்த நேரம்…..
படம் : புன்னகை மன்னன் (1985)
பாடியவர் : எஸ் .பி.பாலசுப்பிரமணியம்

பாடல் : நான் ஒரு சிந்து காவடி சிந்து….
படம் : சிந்துபைரவி (1985)
பாடியவர் : சித்ரா

பாடல் : ஒரு நாளும் உன்னை மறவாத…..
படம் : எஜமான்
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

பாடல் : முத்து மணி மாலை என்னைத் தொட்டு…..
படம் : சின்ன கவுண்டர்
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா குழுவினர்

பாடல் : என் மன வானில் சிறகை விரிக்கும்…..
படம் : காசி (2002)
பாடியவர் : ஹரிகரன்
இசைஞானியின் அற்புதமான பாடல்கள் இன்னும் இருக்கின்றன. நீட்சி காரணமாகத் தவிர்த்துள்ளேன். உறவுகள் பொறுத்துக் கொள்ளவும்.

சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். இந்த ராகத்திற்கு “சாமரம்” என்று மற்றொரு பெயருமுண்டு. இது முருகப் பெருமானுக்கு உகந்த இராகமாகக் கருதப்படுகிறது. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
ஆரோகணம்: ச ரி2 க2 ம2 ப த1 நி2 ச்
அவரோகணம்: ச் நி2 த1 ப ம2 க2 ரி2 ச

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து இருந்து தோன்றியவன் முருகன். அவனுக்கு மிகவும் பிடித்தமான இராகம் சண்முகப்பிரியா ஆகும். மனத்திடத்தையும் உயிருக்கு ஊட்டத்தையும் தருவது. இரசிப்பவரை பரவச நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. எந்த நேரத்திலும் பாடக்கூடிய இராகம் இதுவாகும்.

அருணகிரிநாதர் முதன் முதலில் பாடிய “முத்தைத்தரு” என ஆரம்பிக்கும் திருப்புகழ் சண்முகப்பிரியா இராகத்தில் பாடப்படுகிறது. கேட்பவரை உருக வைக்கும் “சரவணபவ எனும் திருமந்திரம்” என்ற பாபநாசம் சிவன் இயற்றிய பாடலும் சண்முகப்பிரியாவில் அமைந்ததே.

இந்த இராகத்தில்; சட்ஜம், சதுஸ்ருதி ரிசபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.

சண்முகப்பிரியாவின் சேய் இராகங்களாவன :
பிரிமரசாரங்க, நாகபிரபாவளி, கமலநாராயணி, திருமூர்த்தி, வசீரி, ஹம்சகீர்வாணி, கோபிகாதிலகம், சுமநீசரஞ்சனி, வசுகெற்ப, பாவுகதாயினி.

ஒரு பாடகனின் இசைத்திறனை கூர்மையாக்கும் வல்லமை கொண்டது. நகைச்சுவைப் பாடல்களிலும் பக்திப் பாடல்க‌ளிலும் ஷண்முகப்ரியா உபயோகப்படுத்துவது வழக்கம். பக்தி இரசத்தை பொழியும் இராகம் இதுவாகும் விருத்தம் பாட ஏற்ற இராகமும் இதுவேயாகும்.

கந்தகுரு கவசம் இராகம் : சண்முகப்ரியா

கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை சண்முகா ஒழித்திட்டு

கிழக்குத் திசையிலிருந்து கிருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலு மென்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலு மென்னைத் திறன்வேலால் காப்பாற்றும்

மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரட்சிப்பாய்
வடமேற்கிலு மென்னை மயிலோனே ரட்சிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே

சண்முகப்பிரியா இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

தொடர் - 88பாடல் : முத்தைத் தரு பத்தித் திருநகை…..
படம் : அருணகிரிநாதர்
பாடியவர் : T M சௌந்தரராஜன்

பாடல் : பழம்நீயப்பா ஞானப்பழம் நீயப்பா…..
படம் : திருவிளையாடல் (1965)
பாடியவர் : K B சுந்தராம்பாள்
இசை : K V மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்…..
படம் : இரும்புத்திரை (1960)
பாடியவர் : T M சௌந்தரராஜன், P லீலா
இசை : S V வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
இது பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் என்றும் சில பதிவுகளில் காணப்படுகின்றது.

பாடல் : மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன…..
படம் : தில்லானா மோகனாம்பாள் (1968)
பாடியவர் : P சுசீலா
இசை : K V மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : தந்தன தந்தன தாளம் வரும் புதுராகம் வரும்…..
படம் : புதிய வார்ப்புகள் (1979)
பாடியவர் : ஜென்சி, வசந்தா, குழுவினர்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்

பாடல் : தகிட ததிமி தகிட…..
படம் : சலங்கை ஒலி
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து

பாடல் : கண்ணுக்குள் நூறு நிலவா…..
படம் : வேதம் புதிது
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை : தேவேந்திரன்
பாடலாசிரியர் : வைரமுத்து

தோடி / ஹனுமத்தோடி

தோடி அல்லது ஹனுமத்தோடி என்பது கருநாடக இசையின், எந்நேரமும் பாடக்கூடிய 8வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்படுகிறது.
ஆரோகணம்: ச ரி1 க2 ம1 ப த1 நி2 ச்
அவரோகணம்: ச் நி2 த1 ப ம1 க2 ரி1 ச

தோடி இராகத்தில் வரும் சுரங்கள்:
சட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி1) ஆகியவை.

விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். பக்திச் சுவையுள்ளது. ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் பஞ்சமம் இல்லாமல் இசைத்தால் அதற்குச் சுத்த தோடி என்று பெயர்.

ஹனுமத்தோடியின் ஜன்ய இராகங்கள் :
புன்னாகவராளி, சுத்தசீமந்தினி, அசாவேரி, தன்யாசி, பேனத்துதி, ஜன்யதோடி, மாலினி, சிறீமணி, கண்டா, முக்தாம்பரி, சந்திரிகாகௌளை, கலஹம்சகாமினி, காசியபி, ருக்மாங்கி, கட்கதாரிணி, தரங்கம், ரேவதி(இராகம்) ஆகியவை.

தோடி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

தொடர் - 89பாடல் : சிறைச்சாலை என்ன செய்யும்…..
படம் : மணிமேகலை(1940)
பாடியவர் : K B சுந்தராம்பாள்
இசை : பாபநாசம் சிவன்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடல் : .என்னைப்போல் பெண்ணல்லவோ…..
படம் : வணங்கா முடி(1957)
பாடியவர் : P சுசீலா
இசை : G ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை ராமையாதாஸ்

பாடல் : தோடியில் பாடுகின்றேன் ஓடி நீ வருவாயம்மா…..
படம் : தோடி ராகம் (1983)
பாடியவர் : மதுரை T N சேஷகோபாலன்
இசை : குன்னக்குடி வைத்யநாதன்

பாடல் : கங்கைக்கரை மன்னனடி…..
படம் : வருஷம்-16 (1989)
பாடியவர் : K J யேசுதாஸ்
இசை : இளையராஜா

பந்துவராளி / சுப பந்துவராளி

பந்துவராளி (காமவர்த்தனி)
இந்த ராகத்தைக் குறித்து ஒரு சர்ச்சை நிலவுகிறது. 51ஆவது மேளகர்த்தாவாகிய ‘காமவர்த்தனி’ என்ற இராகத்தின் மறுபெயர் தான் ‘பந்துவராளி’ என்று ஒரு சாராரும்,  45ஆவது மேளகர்த்தாவாகிய சுப பந்துவராளியின் சேய் இராகம் தான் ‘பந்துவராளி’ என்று ஒரு சாராரும் கூறுகின்றனர்.

‘குடிமக்கள் காப்பியம்’ என்று போற்றப்படுகின்ற சிலப்பதிகாரம் ஒரு இசைக் களஞ்சியம் எனினும் அது மிகையன்று. அது தமிழர் வளர்த்த அரும்பெரும் பல கலைகளைப் பற்றிய பொக்கிசமாகவும் அது கருதப்படுகிறது. பாட்டுக்கலையில் தமிழ்மக்கள் பேராற்றல் மிக்கவர்களாக விளங்கியதை எடுத்தியம்பும் சிலப்பதிகாரம் மட்டும் இன்று எம் கையில் இல்லையானால் தமிழிசையில் பார்ப்பனர்களால் திரிக்கப்பட்ட தில்லு முல்லுகளை நாம் அறியாமல் இருந்திருப்போம்.

கோவலன், கண்ணகி கதையைக் கூறவந்த இளங்கோவடிகள், கதையோட்டத்தில் அந்தக் காலக்கூத்து இசையின் வகைகளையும், நாட்டார் இசையையும் அல்லது வாய்மொழி இசையையும் கதைக்குப் பொருத்தமான இடங்களில் அமைத்துச் சென்றதன் மூலம் எமக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளார். தவிர தமிழிசையின் இலக்கணங்களையும் மிகவும் நுட்பமகாவும் விவரித்துச் சொல்லியிருக்கின்றார்.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் இத்தகைய தமிழிசையின் நுட்பங்களையும் இலக்கணங்களையும் தனது அரும்பெரும் கடின உழைப்பால், ஆராய்ச்சிகளினால் பார்ப்பனீய பித்தலாட்டங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்தான் இசை அறிஞர், பெருமகனார் திரு.ஆபிரகாம் பண்டிதர் அவர்களாவார். அவரது ஆய்வுகளின் முடிவாக, இன்றைய இராகங்களின் பெயர்கள் பண்டைய தமிழ் இராகங்களுக்கு வலிந்து சூட்டப்பட்ட வடமொழிப் பெயர்கள் என்பதனை நிறுவிக்காட்டுகின்றார்.

இத்தகைய பெருமைமிக்க இராகங்களில் ஒன்று தான் பந்துவராளி ஆகும். நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்த இராகங்களில் இதுவும் ஒன்று. பந்துவராளி என்றும் காமவர்த்தினி என்றும் இன்று அறியப்படுகின்ற இந்த இராகத்தின் பண்டைய தமிழ்ப் பெயர் “சாதாரி பண்” ஆகும். தமிழ் செவ்வியல் இசையில் 51 வது மேளகர்த்தா ராகம்.

பந்துவராளியின் சுரங்கள் இவை:
ஆரோகணம்: ச ரி1 க3 ம2 ப த1 நி3 ச்
அவரோகணம்: ச் நி3 த1 ப ம2 க3 ரி1 ச

இந்த இராகத்தில் சட்ஜம், சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிசாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இது ஒரு பழமையான இராகம். பண்டைத்தமிழிசையில் “சாதாரிப்பண்” என்றழைக்கப்பட்டது.

காமவர்த்தனியின் ஜன்ய இராகங்கள் :
மந்தாரி, தீபகம், போகவசந்தம், கனகரசாளி, கமகப்பிரியா, ஹிந்துமதி, ஹம்சநாராயணி, ஜடானப்பிரியா, கல்தவப்பிரியா, கமலாப்தம்

தொடர் - 90பந்துவராளி இராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

பாடல் : மின்னல் எழில் உடையாள் இவள்…..
படம் : நவீன சாரங்கதரா (1936)
பாடியவர் : M K தியாகராஜ பாகவதர்
இசை : பாபநாசம் சிவன்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடல் : தேவியைப் பூஜை செய்வாய்…..
படம் : சாவித்திரி (1941)
பாடியவர் : M.S. சுப்புலட்சுமி
இசை : துறையூர் ராஜகோபால சர்மா
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடல் : நீராட நேரம் நல்ல நேரம்……
படம் : வைர நெஞ்சம் (1975)
பாடியவர் : வாணி ஜெயராம்
இசை : M S விஸ்வநாதன்

பாடல் : வந்தனம்……
படம் : வாழ்வே மாயம் (1982)
பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
இசை : கங்கை அமரன்
இராகம் : பந்துவராளி

பாடல் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்……
படம் : அபூர்வ ராகங்கள் (1975)
பாடியவர் : வாணி ஜெயராம்
இசை : M S விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

இளையராஜாவும் பந்துவராளி இராகமும்
பாடல் : செங்கமலம் சிரிக்குது……
படம் : தாவணிக் கனவுகள்
பாடியவர் : S P பாலசுப்ரமணியம், S ஜானகி

பாடல் : உரக்க கத்துது கோழி……
படம் : எஜமான்
பாடியவர் : S ஜானகி

பாடல் : என்னே பெத்த ஆத்தான்னு……
படம் : கரகாட்டக்காரி
பாடியவர் : இளையராஜா

பந்துவராளி இராகத்தில் ஒரு ஒப்பாரி இசை.
பாடல் : என் சோக கதையை கேளு……
படம் : தூறல் நின்னு போச்சு
பாடியவர் : மலேசியா வாசுதேவன்

பாடல் : ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்……
படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : S P பாலசுப்ரமணியம், S ஜானகி

பந்துவராளி இராகத்தில் இன்னும் பல பாடல்கள் இருக்கின்றன.

சுப பந்துவராளி

செவ்வியல் இசையில் சுபபந்துவராளி 45வது மேளகர்த்தா இராகம் ஆகும். இதன் சேய் இராகம் தான் பந்துவராளி என்ற கருத்தும் உண்டு. இந்த இராகத்தை முத்துசுவாமி தீட்சிதர் “சிவபந்துவராளி” என்று அழைத்தார். இந்துஸ்தானி இசையில் “தோடி தாட்” என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.

பந்துவராளியை போன்ற சாயலைக் கொண்ட சுபபந்துவராளி தனக்கென ஒரு தனித்தன்மையைக் கொண்டுள்ள இராகம் ஆகும். இதன் சிறப்பம்சம் சோக ரசம் என்றுதான் சொல்லவேண்டும். மனதைக் கரைய வைக்கின்ற குணம் கொண்டதாகும். இந்த இராகத்தில் பாடலை ஆரம்பித்தால் முடிவு வரை சோகரசம் இசையின்பமாகப் பெருகும்.

சுப பந்துவராளி இராகத்தின் சுரங்கள் வருமாறு:
ஆரோகணம் : ச ரி1 க2 ம2 ப த1 நி3 ச்
அவரோகணம் : ச் நி3 த1 ப ம2 க ரி1 ச

இந்த இராகத்தில் சட்சம் , சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.

சுபபந்துவராளியின் ஜன்ய இராகங்கள் இவை.
பானுகீரவாணி, ராமகலி, நடனவேளாவளி, ரத்னகர்ப்ப, புஷ்கரணி, மாயாதாரிணி, அம்போதம், நாட்டிகா.

சுப பந்துவராளி இராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
தொடர் - 91
பாடல் : இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை…..
படம் : பாலும் பழமும் (1961)
பாடியவர் : P சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : கால மகள் கைகொடுப்பாள் சின்னய்யா…..
படம் : ஆனந்தி (1965)
பாடியவர் : P.சுசீலா
இசை : விஸ்வநாதன்

பாடல் : ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே…..
படம் : அவன்தான் மனிதன் (1975)
பாடியவர் : T.M.சவுந்திர ராஜன்
இசை : விஸ்வநாதன் ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : ராமன் எத்தனை ராமனடி…..
படம் : லக்ஷ்மி கல்யாணம்
பாடியவர் : பி சுசீலா
இசை : விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடல் : உன்னை நான் சந்தித்தேன்…..
படம் : ஆயிரத்தில் ஒருவன்
பாடியவர் : P சுசீலா
இசை : விஸ்வநாதன்

பாடல் : பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு…
படம் : சரணம் ஐயப்பா (1980)
பாடியவர் : K J யேசுதாஸ்
இசை : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : தசரதன்

பாடல் : அம்மா யாரு அப்பா யாரு ஒண்ணும்…..
படம் : புதிய பாதை (1989)
இசை : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : வைரமுத்து

பாடல் : வாழ்வே மாயம்…..
படம் : வாழ்வே மாயம்
பாடியவர் : K J யேசுதாஸ்
இசை : கங்கை அமரன்

இளையராஜாவின் இசையில் சுபபந்துவராளி ராகம் :
பாடல் : ஆயிரம் தாமரை மொட்டுக்களே…….
படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடியவர் : S P பாலசுப்ரமணியம், S ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : ஒரு மூணு முடிச்சாலே…..
படம் : அம்மன் கோயில் கிழக்காலே
பாடியவர் : மலேசியா வாசுதேவன், குழுவினர்
இசை : இளையராஜா

பாடல் : எல்லோருடைய வாழ்க்கையிலும்…..
படம் : பாட்டுக்கொரு தலைவன்
பாடியவர் : இளையராஜா
இசை : இளையராஜா

பாடல் : மானே தேனே கட்டிப் புடி…..
படம் : உதயகீதம்
பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர் 86 – 91
சிறீ சிறீஸ்கந்தராஜா
23/10/2015 – 13/11/2015

தொகுப்பு -thamil.co.uk