ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத ஜூஸ்கள்

ஜூஸ்கள்என்ன தான் மருத்துவ உலகில் பல முன்னேற்றம் இருந்தாலும், நம் நாட்டின் கை வைத்திய முறையான ஆயுர்வேத மருத்துவ முறைக்கு இணையாக வர முடியாது. ஏனெனில் நம் ஆயுர்வேத மருத்துவமானது, பல மூலிகைகள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த மூலிகை சிகிச்சையை மேற்கொள்வதால், அவை பிரச்சனையை குணமாக்க நாட்களை எடுத்துக் கொண்டாலும், நிரந்தர தீர்வை அளிப்பதாக உள்ளது. இங்கு அப்படி உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் சில ஆயுர்வேத ஜூஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தூதுவளை சாறு
தூதுவளை சாறு ஜலதோஷம் மற்றும் சளியை வெளியேற்ற உதவும். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும்.

பிரண்டை சாறு
குச்சி போன்ற தோற்றத்தைக் கொண்ட பிரண்டையின் சாற்றினை குடித்து வந்தால், எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, எலும்புகளும் வலிமை அடையும்.

ஆவாரம்பூ சாறு
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஆவாரம்பூ சாற்றினை குடிப்பது நல்லது.

ஆடாதோடா சாறு
ஆஸ்துமா நோயாளிகள் ஆடாதோடா சாற்றினை குடிப்பதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்.

கொள்ளு சாறு
பொதுவாக கொள்ளுவை கடைந்து தான் சாப்பிடுவோம். ஆனால் இதன் சாற்றினை பருகி வந்தால், உடலின் ஆற்றல் குறையாமல் ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

பாகற்காய் சாறு
காலையில் பாகற்காய் சாற்றினை பருகுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

கோவைக்காய் சாறு
கோவைக்காயை பொரியல் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அதன் சாற்றினை குடித்தால், வாயு தொல்லை நீங்கும் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது.

முடக்கத்தான் சாறு
முடக்கத்தான் சாறு எலும்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு மிகவும் நல்லது.

வாழைத்தண்டு சாறு
சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், வாழைத்தண்டை ஜூஸ் எடுத்து குடித்து வந்தால், சிறுநீரக கல் கரைந்து, சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

கீழாநெல்லி சாறு
கீழாநெல்லி சாறு குடல்புண், தொண்டை புண் மற்றும் நோய்கள், வயிற்று வலி போன்றவற்றை குணமாக்க உதவும்.

நெல்லிச் சாறு
நெல்லிக்காய் சாறு இரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது. அதிலும் இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தை விருத்தி செய்து, சோகையில் இருந்து விடுபடலாம்.

நாவல் சாறு
நாவல் சாற்றினை பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுன் இருக்கும்.

துளசி சாறு
துளசியை சாறு எடுத்து தினமும் சிறிது குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் பிரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, உடலில் சுத்தமான இரத்தத்தை ஓடச் செய்யலாம்.

அருகம்புல் சாறு
தினமும் அருகம்புல் சாறு குடித்து வருவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

ஆளி விதை சாறு
ஆளி விதை சாறு உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

-L Karthikeyan