பழந்தமிழ் இசை – தமிழ் இசையின் பண்கள் – தொடர் 4 : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம்

பழந்தமிழ் இசை – நான்காம் பாகம்- தமிழ் இசையின் பண்கள் 

சூரியகாந்தம் : சூரியகாந்தம் கருநாடக இசையின் 17வது மேளகர்த்தா இராகமாகும். இந்த இராகத்தின் பெயர் சாயாவதி.

சூரியகாந்தம் இராகத்தின் சுரங்கள் வருமாறு:
ஆரோகணம் : ச ரி1 க3 ம1 ப த2 நி3 ச்
அவரோகணம் : ச் நி3 த2 ப ம1 க3 ரி1 ச

இந்த இராகத்தில் சட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சூரியகாந்தத்தின் சேய் இராகங்கள்:
சௌராட்டிரம், வசந்தா, லலிதா, பைரவம், சுப்ரதீபம், சேனாமணி, நாகசூடாமணி, திவ்யதரங்கிணி, ராகச்சந்திரிகா, சம்பகமாலிகா, தூநீரதாரணி

வசந்தா – லலிதா இவையிரண்டும் ஒரே இராகம் தான். ஆனால் நடை முறையில் வேறு வேறு இராகங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மாலையில் பாடுவதற்கு உகந்த இராகமாகக் கருதப்படும் இராகங்களில் முக்கியமான இராகம் ஆகும். கலைநயமும் , அழகுணர்ச்சியும் நிறைந்ததாகும்.

பந்துவராளி , ஹம்சானந்தி , வசந்தா போன்ற இராகங்களில் அமைந்த பாடல்களைக் கேட்கும் போது ஒரே மாதிரி இருப்பது போன்ற மயக்கம் உண்டாகும். இராகம் பற்றி நன்கு தெரிந்தவர்களும் சில சமயங்களில் அடையாளம் காண்பதில் இடர் படுவதுண்டு. எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்தமானதாகவும் கருதப்படும் இந்த இராகம் வீரஉணர்வையும் சிறப்பாக வெளிப்படுத்தும் தன்மை குறிப்பிடத்தக்கது.

செவ்வியல் இசையில் வசந்தா என்ற இந்த இராகம் லலிதா என்ற இராகத்திற்கு நெருக்கமானது. ஆனாலும் சிலர் இரண்டு இராகங்களும் ஒரே இராகம் தான் என்று சொல்வதும் உண்டு.

சூரியகாந்தம் என்ற 17வது மேளகர்த்தா ராகத்தின் சேய் இராகம் வசந்தா என்றும் 15வது மேளகர்த்தா இராகமான மாயாமாளவ கௌளை சேய் இராகம் என்றும் ”லலிதா” என்றும் சொல்லப்படுகிறது.

வசந்தா
ச ம1 க3 ம1 த2 நி3 ச்
ச் நி3 த3 ம1 க3 ரி1 ச

லலிதா
ச ரி1 க3 ம1 த1 நி3 ச்
ச் நி3 த1 ம1 க3 ரி1 ச

தொடர் - 92வசந்தா இராகத்தில் வெளிவந்த சில திரைப்படப் பாடல்கள் 

பாடல் : சிவகாமி ஆட வந்தால்…..
படம் : பாட்டும் பரதமும் (1974)
பாடியவர் : TMS , சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல் : வந்தனம் என் வந்தனம்…..
படம் : வாழ்வே மாயம்
பாடியவர் : பாலசுப்ரமணியம்
இசை : கங்கை அமரன்

பாடல் : மின்சார பூவே பெண் பூவே…..
படம் : படையப்பா
பாடியவர் : ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ
இசை : A R ரகுமான்

பாடல் : மான் கண்டேன் மான் கண்டேன்….
படம் : ராஜரிஷி
பாடியவர் : K J ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை : இளையராஜா

பாடல் : அந்தி மழை பொழிகிறது……
படம் : ராஜபார்வை (1981)
பாடியவர் : S P பாலசுப்ரமணியம், S ஜானகி
இசை : இளையராஜா
இராகம் : வசந்தா

(பந்துவராளி , ஹம்சானந்தி , வசந்தா போன்ற இராகங்களில் அமைந்த பாடல்களைக் கேட்கும் போது ஒரே மாதிரி இருப்பது போன்ற மயக்கம் உண்டாகும்)

லலிதா இராகத்தில் வெளிவந்த திரைப்படப்பாடல்:

பாடல் : இதழில் கதையெழுதும் நேரம் இது…..
படம் : உன்னால் முடியும் தம்பி – 1988
பாடியவர் : S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
இசை : இளையராஜா

கரகரப்பிரியா – பிருந்தாவன சாரங்கா

பிருந்தாவன சாரங்கா
பிருந்தாவனசாரங்கா 22வது இராகமாகிய கரகரப்பிரியாவின்  சேய் இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சாதாரண காந்தாரம் (க2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இசையின் நுணுக்கங்கள் தெரிந்த பல வல்லுனர்கள் தானும் மயக்கம் கொள்ள வைக்கும் சில இராகங்கள் உள்ளன. அந்த வகை இராகங்களில் மத்தியமாவதியும், பிருந்தாவன சாரங்காவும் அமைகின்றன.

இவ்விரு இராகங்களின் சுரநிலைகள் வருமாறு:
மத்யமாவதி
ஆரோகணம் : ச ரி2 ம1 ப நி2 ச
அவரோகணம் : ச நி2 ப ம1 ரி2 ச

பிருந்தாவன சாரங்கா
ஆரோகணம் : ச ரி2 ம1 ப நி3 ச
அவரோகணம் : ச நி2 ப ம1 ரி2 க2 ச

இன்பத் திளைப்பும், இனம்புரியாத பரவசமும், அழகுணர்ச்சியும் தரும் இராகங்களில் பிருந்தாவனசாரங்கா இராகத்திற்கு தனிச்சுவை உண்டு. ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் உள்ள பிருந்தாவனி சாரங் (Brindhavani Sarang) என்கின்ற இராகம் இந்த இராகத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களால் விரிவாகப் பயன்பாட்டிலுள்ள இந்த இராகம் வசீகரமும், மென்மையும் ததும்பும் இராகமாகும். தமிழ் திரையிசையில் இந்த இராகத்தில் குறைந்த அளவிலான பாடல்கள் வெளிவந்தாலும் அதிக அழகுணர்ச்சி மேலோங்கும் பல பாடல்களாக அமைந்திருக்கின்றன.

தொடர் - 93பிருந்தாவன சாரங்கா இராகத்தில் அமைந்த சில திரையிசைப்பாடல்கள்

பாடல் : வானம் என்னும் வீதியிலே வந்து…..
படம் : ஒரேவழி (1959)
பாடியவர் : P சுசீலா
இசை : R கோவர்த்தனம்

பாடல் : சிங்காரக் கண்ணே உன்…..
படம் : வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
பாடியவர் : S வரலட்சுமி
இசை : G ராமநாதன்

பாடல் : பொன் ஒன்று கண்டேன்…..
படம் : படித்தால் மட்டும் போதுமா (1967)
பாடியவர் : சௌந்தரராஜன், P B ஸ்ரீநிவாஸ்
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடல் : முத்துக்களோ கண்கள்….
படம் : நெஞ்சிருக்கும் வரை (1967)
பாடியவர் : சௌந்தரராஜன், P சுசீலா
இசை : M S விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி (எழுதிய முதல் பாடலும் இதுவே)

பாடல் : முத்து நகையே உன்னை…..
படம் : என் தம்பி (1970)
பாடியவர் : சௌந்தரராஜன்
இசை : M S விஸ்வநாதன்

பாடல் : நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து…..
படம் : பூவும் பொட்டும் (1968)
பாடியவர் : T M சௌந்தரராஜன், P சுசீலா
இசை : M S விஸ்வநாதன்

பாடல் : இது குழந்தை பாடும் தாலாட்டு…..
படம் : ஒரு தலை ராகம் (1980)
பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர் : ராஜேந்தர்
இசை : A A ராஜ்

இசைஞானி இளையராஜா தந்த பிருந்தாவன சாரங்கா இராகத்தில் அமைந்த பாடல்கள் :
தமிழ் மண்ணிலிருந்து தொடர்பற்று அறுத்துச் சென்ற தமிழிசையை மீண்டும் மடை மாற்றி, மண்ணுக்கே உரிமையாக்கி, மண்ணின் வாசமுடன் மிகவும் நுட்பமாக வேயப்பட்ட பாடல்களால் எம்மை மகிழ்விக்கச் செய்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.
பாடல் : ஆத்தாடி பாவாடை காத்தாட…..
படம் : பூ விலங்கு (1984)
பாடியவர் : இளையராஜா
இசை : இளையராஜா

பாடல் : மாலைகள் இடம் மாறுது….
படம் : டிசம்பர் பூக்கள் (1994)
பாடியவர் : ஜேசுதாஸ்,சித்ரா
இசை : இளையராஜா
இன்னும் பல பாடல்கள் இந்த இராகத்தில் அமைந்துள்ளன. நீட்சி காரணமாகத் தவிர்த்துள்ளேன்.

கமனப்ரியா – கம்சானந்தி

ஹம்சானந்தி – “ஆண் அன்னப் பறவை” என்பது இதன் பொருளாகும். இது 53ஆவது ‘மேளகர்த்தா’வாகிய “கமனச்சரம” என்ற இராகத்தின் சேய் இராகமாகும்.
ஆரோகணம் : ச ரி1 க3 ம2 த2 நி3 ச்
அவரோகணம் : ச் நி3 த2 ம2 க3 ரி1 ச

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3)ஆகிய சுரங்கள் வருகின்றன.

“ப” என்னும் ஸ்வரம் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது ஒரு ஷாடவ இராகம். உபாங்க வகையைச் சேர்ந்த இந்த ராகம் காலை வேளையில்,பாடத் தகுந்தது. மென்மையும் அழகும் தரும் தமிழ் இராகங்களில் ஒன்று ஹம்சானந்தி ஆகும்.

கமனச்சரமவின் இன்னுமொரு சேய்ராகமான பூரிகல்யாணி அல்லது பூர்விகல்யாணி, மற்றும் சுநாதவினோதினி போன்ற இராகங்கள ஹம்சானந்திக்கு மிக நெருக்கமானவை எனக் கருதப்படுகின்றன.

ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகத்தை பூரிசோகினி அல்லது சோகினி என்று அழைக்கின்றனர். ஹிந்துஸ்தானி இசை மேடைகளில் பிரபல்ய ராகமாகவும் விளங்குகின்றது.

செவ்விசை மரபில் மாலையில் பாடுவதற்கு உகந்த ராகமாகக் கருதப்பட்டாலும் சினிமாவில் மென்மையான இரக்க சுபாவ உணர்வுகளை வெளிப்படுத்த இந்த ராகம் அற்புதமாகப் பயன்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது.

திரை இசையில் புதுமை விரும்பிய இசையமைப்பாளர்கள் சிலர் இந்த இராகத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மிக அருமையான பாடல்களைத் தந்துள்ளார்கள்.

சிறிய வட்டத்துக்குள் வீணாக உறங்கிக்கிடந்த இராகங்களை அவர்கள் ஊர்சுற்றி வரும்படி திறந்து வெளியில் விட்டார்கள். இவ்விராகங்கள் பலவிதமான மனிதர்களின், இசை ரசிகர்களின் காதுகளிலும் நுழைந்து இன்பம் ஊட்டின. மேல் தட்டு மக்களில் ஒரு சிலருக்கே இசைவானதாக இருந்த பாரம்பரிய இசை இராகங்கள் இலட்சக்கணக்கான மக்களின் காதுகளில் இலகுவான பாடல்களாக ஒலித்தன. இந்த இராகத்தில் மிகக் குறைந்த அளவான பாடல்களே வெளிவந்துள்ளன.

ஹம்சானந்தி இராகத்தை மக்கள் மத்தியில் மெல்லிசையில் பயிற்றுவிக்க தக்க, புதிய கிளர்ச்சியை உண்டாக்கும் அதே நேரம் இராகத்தின் அடிப்படைக்கூறை நேர்த்தியாக உணர்ச்சி என்ற உயிர்த் துடிப்புடன் வெளிப்படுத்திய பாடல்களைப் பார்ப்போம்.

94பாடல் : காலையும் நீயே மாலையும் நீயே…..
படம் : தேன் நிலவு (1960)
பாடியவர் : AM ராஜா, S ஜானகி
இசை : AM ராஜா

பாடல் : என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்…..
படம் : கர்ணன் (1964)
பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : நினைத்தால் போதும் பாடுவேன்….
படம் : நெஞ்சிருக்கும் வரை (1968)
பாடியவர் : S ஜானகி
இசை : M S விஸ்வநாதன்
இராகம் : ஹம்சானந்தி

பாடல் : குழலும் யாழும் குரலினில் ஒலிக்க……
படம் : பக்தி பாடல்
பாடியவர் : K J ஜேசுதாஸ்
இசை : M S விஸ்வநாதன்

பாடல் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா……
படம் : நினைத்தேன் வந்தாய்
பாடியவர் : SPB, சுவர்ணலதா
இசை : தேவா

இசைஞானி இளையராஜா தந்த ஹம்சானந்தி இராகத்தில் அமைந்த பாடல்கள் சில
பாடல் : ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ……
படம் : பயணங்கள் முடிவதில்லை(1982)
பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து

பாடல் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை…..
படம் : தங்க மகன் (1983)
பாடியவர் : S P பாலசுப்ரமணியம், S ஜானகி
இயற்றியவர் : புலமைப்பித்தன்

பாடல் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…..
படம் : சலங்கை ஒலி
பாடியவர் : S P பாலசுப்ரமணியம், S Pசைலஜா

பாடல் : வானம் நிறம் மாறும்….
படம் : தாவணிக் கனவுகள்
பாடியவர் : S P பாலசுப்ரமணியம், S ஜானகி

பாடல் : புத்தம் புது பூ பூத்ததோ…..
படம் : தளபதி
பாடியவர் : KJ ஜேசுதாஸ்,  S ஜானகி

பாடல் : ஒரு பூஞ்சோலை ஆளானதே…….
படம் : வாத்தியார் வீடு பிள்ளை
பாடியவர் : SPB, சித்ரா

பாடல் : கானக் குயிலே கானக் குயிலே…..
படம் : பூஞ்சோலை
பாடியவர் : உன்னி கிருஷ்ணன், பவதாரிணி

பாடல் : வா வா அன்பே அன்பே……
படம் : அக்னிநட்சத்திரம்
பாடியவர் : K J ஜேசுதாஸ், S ஜானகி

பாடல் : பிறையே பிறையே வளரும் பிறையே……
படம் : பிதாமகன்
பாடியவர் : மதுபாலகிருஷ்ணன்

பாடல் : மின்சார பூவே பெண் பூவே……
படம் : படையப்பா
பாடியவர் : ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்

தர்மவதி – ஹம்சநாதம்

ஹம்சநாதம்
ஹம்சநாதம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59வது இராகமாகிய தர்மவதியின் சேய் இராகம் ஆகும். அன்னப்பறவையின் இனியகுரல் எனப் பொருள்படும்.

65ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘மேசகல்யாணி’ யின் சேய் இராகமென்றும், 59ஆவது ‘மேளகர்த்தா’ வாகிய ‘தர்மவதி’யின் சேய் இராகமென்றும், 60ஆவது ‘மேளகர்த்தா’ வாகிய ‘நீதிமதி’யின் சேய் இராகமென்றும், பலவாறாகக் கருதப்படுகிறது. உபாங்க வகையைச் சேர்ந்த இந்த ராகம் மாலை வேளையில் பாடத் தகுந்தது.

இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம் : ச ரி2 ம2 ப நி3 ச்
அவரோகணம் : ச் நி3 ப ம2 ரி2 ச

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் ஐந்து சுரங்களும் அவரோகணத்தில் ஐந்து சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ-ஔடவ இராகம் எனப்படுகின்றது.

ஹம்சநாதம் இராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

தொடர் - 95பாடல் : இரவும் நிலவும் வளரட்டுமே…..
படம் : கர்ணன் (1964)
பாடியவர் : T M சவுந்தரராஜன், P சுசீலா
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாடல் : இலக்கணம் மாறுதோ……
படம் : நிழல் நிஜமாகிறது (1978)
பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
இசை : M S விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : தென்றல் வந்து என்னைத் தொடும்…..
படம் : தென்றலே என்னைத் தொடு (1985)
பாடியவர் : யேசுதாஸ்  S ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து

பாடல் : இசையில் தொடங்குதம்மா…..
படம் : ஹேராம்
பாடியவர் : அஜய் சக்ரபர்த்தி
இசை : இளையராஜா

பாடல் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு…..
படம் : ஊரு விட்டு ஊரு வந்து (1990)
பாடியவர் : இளையராஜா, S ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

பாடல் : கன்னிப்பொண்ணு கைமேல……
படம் : நினைவெல்லாம் நித்யா (1981)
இசை : இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து

பாடல் : ஒரு பூ எழுதும் கவிதை…..
படம் : பூவேலி
இசை : பரத்வாஜ்

சங்கராபரணம் – பஹாடி

மேளகர்த்தா இராகமான தீரசங்கராபரணம் இராகத்தின் சேய் இராகமாக உள்ளது.
ஆரோகணம் : ப த ச ரி க ப த ச
அவரோகணம் : ச நி த ப க ரி ச + நி த ப த ச
அமைதி, சக்தி, சோகம், உணர்வுகளின் கலவை பஹாடி இராகமாகும். இந்த இராகம் தும்ரி, கஜல், பஜன், பாடல்களில் மிகவும் பிரபலமானது.

இதை பாடுவதற்கேற்ற நேரம்:
இரவின் முதல் ஜாமம், வசந்த காலம், வசந்தகால மழை நேரங்கள், காற்றுடன் கூடிய மழைக் காலம் ஆகியவை.

அமீர்கல்யாணி, யமன்கல்யாண், மாண்ட், தேஷ், ஜோன்புரி, பீம்ப்ளாஸ் ஆகிய ஹிந்துஸ்தானி இராகங்களுடன் பெரிதும் அறியப்படாத இராகம் ஒன்று, மேகத்திரை மறைவில் மறைந்து, நின்று ஜாலம் காட்டும் நிலவு போல, இன்பப் பொலிவை தந்து நின்று மௌனமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வற்றாத ஜீவநதிகள் ஊற்றெடுக்கும் மலைகள் நிறைந்த ஜம்மு, காஸ்மீர் பகுதியின் நாட்டுப்புற இசையில் பிறந்ததுதான் இந்த இராகமாகும். அந்த பகுதிகளில் வாழும் மக்கள் ‘பஹார்’ என்று அழைக்கப்படுகின்றனர்.  பஹார் மக்கள் தந்த இனிமை மிக்க இந்த இராகத்தின் பெயர் பஹாடி என்பதாகும். மலைவாழ் மக்களான இமாலயப் பிரதேசத்து மக்களின் நாட்டுப்புற இசையில், பெரும்பாலும் புல்லாங்குழலில் இந்த இராகம் அதிகளவில் இசைக்கப்படுகிறது. தமிழ் செவ்வியல் இசையில் பஹாடி இராத்தில் குறிப்பிடும் படியான பாடல் இல்லை.

பஹாடி ராகத்தில் வெளிவந்த திரையிசைப்பாடல்கள்.

தொடர் - 96பாடல் : உறவுமில்லை பகையுமில்லை….
படம் : தேவதாஸ் (1952)
பாடியவர் : கண்டசாலா,  ராணி
இசை : சி.ஆர்.சுப்பராமன்

 

பாடல் : கண்ணுக்கு குலம் ஏது…..
படம் : கர்ணன் (1964)
பாடியவர் : P சுசீலா
இசை : M S விஸ்வநாதன் ராமமூர்த்தி
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : யார் யார் யார் அவள் யாரோ…..
படம் : பாசமலர் (1961)
பாடியவர் : P B ஸ்ரீனிவாஸ், P.சுசீலா
இசை : M S விஸ்வநாதன் ராமமூர்த்தி
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : அத்தை மகனே போய் வரவா…..
படம் : பாத காணிக்கை (1962)
பாடியவர் : P சுசீலா, L R ஈஸ்வரி
இசை : M S விஸ்வநாதன் ராமமூர்த்தி
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : கண் படுமே பிறர் கண் படுமே…..
படம் : காத்திருந்த கண்கள் (1967)
பாடியவர் : பி.பி.ஸ்ரீநிவாஸ்
இசை : M S  விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : நாணத்தாலே கன்னம் மின்ன….
படம் : வல்லவனுக்கு வல்லவன் (1967)
பாடியவர் : T Mசௌந்தரராஜன் பி.சுசீலா
இசை : வேதா

பாடல் : தொட்டு தொட்டு பாட வா…..
படம் : வல்லவனுக்கு வல்லவன்(1967)
பாடியவர் : T M சௌந்தரராஜன், பி.சுசீலா
இசை : வேதா

பாடல் : உலகின் முதலிசை தமிழிசையே….
படம் : தவப்புதல்வன் (1973)
பாடியவர் : T M சௌந்தரராஜன் பி.பி.ஸ்ரீநிவாஸ்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல் : விழியே கதை எழுது…..
படம் : உரிமைக் குரல் (1974)
பாடியவர் : K J யேசுதாஸ், P.சுசீலா
இசை : M S விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்

இளையராஜா தந்த பஹாடி இராகப்பாடல்கள் சில:
பாடல் : ஒரே நாள் உன்னை நான்…..
படம் : இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

பாடல் : இந்த மான் எந்தன் சொந்த மான்….
படம் : கரகாட்டக்காரன் (1989)
பாடியவர் : இளையராஜா, சித்ரா

பாடல் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…..
படம் : புன்னகை மன்னன் (1986)
பாடியவர் : சித்ரா

பாடல் : என்னோடு பாட்டு பாடுங்கள்…..
படம் : உதய கீதம் (1978 )
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடல் : வா வெண்ணிலா உன்னைத்தானே…..
படம் : மெல்ல திறந்தது கதவு
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜானகி

பாடல் : குழலூதும் கண்ணனுக்கு…..
படம் : மெல்ல திறந்தது கதவு  (1986)
பாடியவர் : சித்ரா

பாடல் : மௌனமான நேரம்….
படம் : சலங்கை ஒலி  (1983)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜானகி

பாடல் : நினைத்தது யாரோ நீ தானே…..
படம் : பாட்டுக்கொரு தலைவன் (1988)
பாடியவர் : மனோ, ஜிக்கி

பாடல் : போகுதே போகுதே என் பைங்கிளி….
படம் : கடலோரக்கவிதைகள் (1986)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர் 92 -96
சிறீ சிறீஸ்கந்தராஜா
20/11/2015 – 25/12/2015

உறவுகளுக்கு!!

“இசையமுதம்” எனும் தலைப்பின் கீழ் இதுவரை பயணித்து வந்தோம்! இசை என்றால் என்ன? அது எதுவரை… எவ்வாறு… மக்களைச் சென்றடைந்திருக்கின்றது என்பது பற்றியும் இராகங்களின் வகைகள் பற்றியும் எளிய முறையில்… இனிய தமிழில் ஓர் அறிமுகத்தை இதுவரை பெற்றுள்ளோம்!

இனிவரும் தொடர்களில்… புதியதொரு தலைப்பின் கீழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த தமிழிசை எப்படி கர்நாடக சங்கீதமாக மாறியது என்பது பற்றியும்… ஆதியில் எமது முன்னோர் வகுத்த தமிழிசைப் பண்கள் பற்றியும் தெளிவாகவும் விரிவாகவும் பார்ப்போம்.

தொடர்ந்தும் என்னோடு பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்… ஆழமறியாது காலை விடுகின்றேன். உறவுகள் என்னைக் கரை சேர்ப்பீர்களாக!!

வாழ்த்துக்கள்!!

சிறீ சிறீஸ்கந்தராஜா
16/01/2016

தொகுப்பு – thamil.co.uk