வாந்தி, வயிற்றுப்போக்கு

வாந்திவாந்தி vomiting
நமக்கு எப்பொழுதாவது ஒரு முறைதான் வாந்தி வருகிறது. தினமும் வராது. வாந்தி எப்பொழுது வருகிறது என்று சற்று யோசித்து பாருங்கள். நாம் ஏதாவது கெட்டுப்போன பொருட்களை சாப்பிட்டால் வரும். அளவுக்கு மீறி சாப்பிட்டால் வரும். பசி இல்லாமல் சாப்பிட்டால் வரும். உடல்நிலை சரியில்லாதபொழுது சாப்பிட்டால் வரும்.

வாந்தி என்பது என்னவென்றால் நாம் ஒரு கழிவுப்பொருளை கெட்டுப்போன ஒரு உணவை ஒரு ஹோட்டலில் சூடு செய்து கொடுக்கும்பொழுது நமக்கு தெரியாமல் சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் நம் வயிற்றுக்கு ஒரு அறிவு உள்ளது. ஒரு உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் நல்ல உணவாக இருந்தால் மட்டுமே ஜீரணம் செய்யும். கெட்டுப்போன உணவுகளை நம் வயிறு ஜீரணம் செய்யாது. நம் வயிற்றுக்கு உள்ள அறிவு நாம் சாப்பிட்ட உணவை நல்லதா? கெட்டதா? என ஆராய்ச்சி செய்யும். நல்ல உணவாக இருந்தால் ஜீரண சுரப்பிகளை சுரக்க வைத்து அதை ஜீரணம் செய்து சிறுகுடலுக்குள் அனுப்பும். கெட்டுப்போன உணவாக இருந்தால் உடனே ஜீரண சுரப்பிகளை நிறுத்திவிட்டு வாந்தி எடுப்பதற்கு என்று சில சுரப்பிகள் உள்ளது. அதை சுரக்க வைக்க ஆரம்பிக்கும்.

வயிற்றில் உள்ள உணவை நாம் பற்களால் நன்றாக அரைக்காமல் குண்டு குண்டாக சாப்பிட்டு இருப்போம். வாந்தி எடுப்பதற்காக அந்த உணவை வெட்டிச் சிறிதுபடுத்தும். மேலும் வயிற்றில் நீரை அதிகரிக்கும். நாம் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருப்போம். ஆனால் வாந்தி வரும்பொழுது பாருங்கள் அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் இருக்கும். இந்த நான்கு டம்ளர் தண்ணீர் எங்கிருந்து வந்தது.

நம் வயிறு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளில் உள்ள தண்ணீரையும் எடுத்து வயிற்றில் ஊற்றி விடும். மேலும் வேகமாக வயிற்றிலிருந்து உணவுக் குழாயிலிருந்து வாயின் வழியாக வெளியே வரும்பொழுது உணவுக்குழாயும், வாயும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வழுவழுப்புத்தன்மையான எண்ணெய்களை ஊற்றி பத்திரமாக வெளியனுப்ப சில சுரப்பிகளை சுரக்க வைக்கும்.

இப்படி, உடல் கெட்டுப்போன உணவை அல்லது தேவையில்லாத உணவை, அளவுக்கு அதிகமான உணவை ஜீரணம் செய்தால் குடல் மற்றும் இரத்தத்தில் கழிவுகள் தேங்கி உடலுக்கு ஆபத்து வரும் என்ற நல்ல எண்ணத்தில் நமது உடலில் உள்ள மருத்துவர், வாந்திக்கான சுரப்பிகளைச் சுரக்க வைத்து, நமக்குத் தெரியாமல், நம்மை மீறி “ரெடி 1, 2, 3” என்று கூறி, நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து வயிற்றில் இருக்கும் கழிவுப்பொருட்களை வெளியேற்றும்படி வாந்தி என்கிற ஒரு சிசிச்சையைச் செய்கிறார். நாம் அறிவில்லாமல் சாப்பிட்ட ஒரு கழிவுப்பொருளை, நம் வயிறு அறிவுடன் தூக்கி வெளியே வீசும் ஒரு சிசிச்சைக்குப் பெயர்தான் வாந்தி! வாந்தி என்பது ஒரு நோயல்ல. அது நம் உடல் பார்க்கும் சிசிச்சை.

ஆனால் நம்மில் பலர், வாந்தி வருவது போல் இருந்தால் உடனே எலுமிச்சம்பழத்தை எடுத்து முகர்வார்கள். மருந்துக் கடைக்குச் சென்று “வாந்தியை நிறுத்துவதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள்!” என்று வாங்கிச் சாப்பிடுவார்கள். அப்படியெல்லாம் தயவுசெய்து செய்யாதீர்கள்! ஒரு கழிவுப்பொருள் வயிற்றில் இருக்கும்பொழுது அதை ஜீரணம் செய்வதற்காக நாம் ஒரு வேலையைச் செய்தால் அது நம் உடலுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? எப்பொழுது நம் வயிறு, இது கழிவுப்பொருள், இது உடலுக்குத் தேவையில்லை என்று வெளியே தூக்கி வீசத் தயாராகிவிட்டதோ அந்தக் கழிவு வெளியே வந்தே தீரவேண்டும். அதை ஜீரணம் செய்வதற்கு நீங்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் என்னவாகும்? நீங்கள் வாந்தியை ஜீரணம் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தமாகும். இந்தக் கழிவு ஜீரணம் ஆகி உடலுக்குள் போகும்பொழுது குடலில் நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், அந்தக் கழிவுப்பொருள் இரத்தத்திலும் கலந்து பல உறுப்புகளுக்கும் நோயை ஏற்படுத்துகிறது.

எனவே, வாந்தி வரும்பொழுது உலகத்தில் மிகச்சிறந்த சிசிச்சை ஒன்றே ஒன்றுதான்! நன்றாக வாந்தி எடுக்கவேண்டும். உடல் கழிவைத் தூக்கி வெளியே வீசும்பொழுது அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? எனவே, வாந்தி வரும்பொழுது தயவுசெய்து ஓரமாக அமர்ந்து விரலை வாய்க்குள் விட்டு நன்றாக வாந்தி எடுங்கள்! வாந்தி எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்தால் மீண்டும் வாந்தி வரும். இப்படி உங்கள் வயிற்றிலிருக்கும் கழிவுப்பொருட்கள் வெளியே வரும் வரைக்கும்தான் வாந்தி வரும். என்றாவது உங்கள் வயிறு வெளியே வந்து விழுந்திருக்கிறதா? கழிவுதானே வெளியே வருகிறது? அது வெளியே சென்றால் நம் உடல் ஆரோக்கியமாகத்தானே இருக்கும்? எனவே, தயவுசெய்து வாந்தி வரும்பொழுது அதற்கு எந்த ஒரு சிகிச்சையும் செய்யாதீர்கள்! வாந்தி என்பதே ஒரு சிகிச்சைதான்.

வாந்தி எடுத்து வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியே வந்து முடிந்த பிறகு, சாதாரண தண்ணீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கல் உப்பு தேவையான அளவு கலந்து குடித்தால் ஓர் அரைமணி, ஒருமணி நேரத்திற்குள் நம் வயிறு பழைய நிலைமைக்குத் திரும்பும். நன்றாகப் பசிக்கும். இப்படி, கழிவை வெளியேற்றிய பிறகு உணவு சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, வாந்தி வந்து கொண்டு இருக்கும்பொழுது அல்லது வருவது போல் ஓர் உணர்ச்சி இருக்கும்பொழுது எலுமிச்சம்பழச் சாறு குடிக்காதீர்கள்! வாந்தி எடுத்து முடித்து வயிறு காலியான பிறகு மட்டுமே எலுமிச்சம்பழச் சாறு குடித்து வயிற்றைச் சுத்தம் செய்ய வேண்டும்.

வயிற்றுப்போக்குவயிற்றுப்போக்கு dysentery
வாந்தி வரும்பொழுது அதை வெளியே அனுப்பாமல் வயிற்றை ஜீரணம் செய்வதற்காக எதாவது ஒரு வைத்தியம் செய்தால் அந்த வாந்தி ஜீரணமாகி சிறுகுடல் பெருங்குடல் மற்றும் இரத்ததில் கலக்கும். இப்படி வாந்திக்கு மருத்துவம் செய்தால் சில நாட்களுக்கு பிறகு இந்த கழிவுப்பொருட்கள் உடலில் தங்கி கெட்டியாகி மலச்சிக்கலை உண்டு செய்யும். இப்படி குடல் பகுதிகளில் கழிவுப்பொருள் அதிகமாகி தேங்கும்பொழுது நமது உடல் குடலைச் சுத்தம் செய்வதற்காக ஒரு சுரப்பியை சுரக்க வைக்கும். அதற்கு பெயர் வயிற்றுப்போக்கு சுரப்பி. சிலருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்கு என்பது ஒரு நோயல்ல. பல நாட்களாக ஒழுங்காக மலம் போகாமல் அடைபட்டு இருக்கும்பொழுது உடலில் உள்ள மருத்துவர் ஒருநாள் முடிவுசெய்து இந்தக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக சில சுரப்பிகளைச் சுரக்கவைத்துக் குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளை கழுவி சுத்தம்செய்து வெளியே அனுப்பும் குடல் சுத்தம் செய்யும் ஒரு சிசிக்சைக்கு பெயர்தான் வயிற்றுப்போக்கு.

ஆனால் நம்மில் பலர் இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே பயப்படுகிறோம். இப்பொழுது என்ன வெளியில் செல்கிறது? மானம், மரியாதையா போகிறது? மலம்தானே போகிறது. போனால் போகட்டுமே என்றாவது சிறுகுடல் பெருங்குடல் வெளியே வந்து விழுந்திருக்கிறதா? நேரம் பார்த்து சாப்பிடுகிறோமே நேரம் பார்த்து மலம் கழிக்கிறோமா? நாம் எப்பொழுதும் நம் உடலுக்குள் உள்ளே செல்லும் பொருளை மட்டுமே யோசித்து அனுப்பிக்கொண்டிருக்கிறோம். உடல் என்றுமே கழிவுப்பொருட்ளை வெளியேற்றும் வேலையை மட்டுமே செய்கிறது. தினமும் ஒழுங்காக மலம் கழிப்பவருக்கு எப்பொழுதும் வயிற்றுப்போக்கு வரவே வராது. பல நாள் கழிவுகளை உடல் சுத்தம் செய்யும் ஒரு சுத்திகரிப்பே வயிற்றுப்போக்கு. எனவே எப்பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதோ அது ஒரு நோயல்ல என்று புரிந்து கொண்டு வயிற்றுப்போக்கை நாம் அனுமதிக்க வேண்டும்.

இதில் ஒரே ஒரு பயம் என்னவென்றால் இரண்டு மூன்று முறை மலம் கழித்தால் உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டும்தானே? அதற்கு ஒரு சிறிய வழி உள்ளது. வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நாம் நம் உடலுக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படும். 1) நீர் 2) குளுகோஸ் என்ற சர்க்கரை 3) உப்பு. இந்த மூன்றையும் நாம் கொடுத்தால் உடல் சோர்வு ஏற்படாமல் நன்றாகத் தெம்பாக இன்னும் சிலமுறை மலம் கழிக்க முடியும். இந்த நேரங்களில் சாதாரண நீரில் பனங்கருப்பட்டி, வெல்லம், அச்சுவெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்ற ஏதாவது சர்க்கரையைக் கலந்து கொண்டு கல் உப்பு சிறிதளவு கலந்து நிறைய குடிக்க வேண்டும். ஆனால் வெள்ளைச் சர்க்கரை மற்றும் பொடி உப்பை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். அப்படி நாம் உடலுக்கு இந்த மூன்று விஷயத்தையும் அனுப்பினால் உடல் சந்தோஷப்பட்டு சீக்கிரமாகக் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நம்மை ஆரோக்கியப்படுத்தும்.

நன்றாகப் பரிசோதித்துப் பாருங்கள். வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நமக்கு மூத்திரம் அதிகமாக வராது. ஏனென்றால் மூத்திரம் வழியாக செல்ல வேண்டிய நீர் மலம் வழியாக சென்று கொண்டிருக்கும். மலம் தீர்ந்து விட்டது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால் மேற்கூறியவாறு திரவத்தைக் குடித்துக் கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் மலம் வரும். ஒரு குறிப்பிட்ட நிலையில் அதிகமாக மூத்திரம் வரும். எப்பொழுது குடித்த நீர் மூத்திரமாக மட்டுமே அதிகமாக வருகிறதோ? நம் வயிற்றுப்போக்கு முற்றிலும் குணமடைந்து விட்டது என்று பொருள். நமது வயிறு குடல் ஆகியவை சுத்தமாக சுத்தப்படுத்தி விட்டது என்று புரிந்துகொண்டு இந்த உப்பு சர்க்கரை கரைசலை நிறுத்தவேண்டும். சிறிது நேரத்தில் நன்றாக பசி உண்டாகும். அப்பொழுது முதலில் கஞ்சி அல்லது இயற்கை உணவுகளை சாப்பிடவேண்டும். அடுத்தவேளை இட்டலி பொங்கல் போன்ற லேசான உணவுகளை சாப்பிடவேண்டும். அடுத்தவேளை வழக்கம்போல நமது இயல்பான உணவை சாப்பிடலாம். இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நம் உடலுக்கு உதவி செய்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

ஆனால் நம்மில் பலர் வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது மருந்து மாத்திரை மற்றும் பாட்டி வைத்தியத்தை பயன்படுத்தி அதை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நீங்கள் மருந்து மாத்திரையால் அதை நிறுத்தினால் நமது கழிவை நமது உடலிலேயே தங்குவதற்கு நாம் அனுமதிக்கிறோம் என்று அர்த்தம். இப்படி யார்யாரெல்லாம் மலத்தை உடலுக்குள் வைத்துக் கொள்கிறீர்களோ அதற்கு பெயர்தான் நோய். எனவே வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது அதை நிறுத்தக்கூடாது. அதை நிறுத்துவதற்கு நாம் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த சிகிச்சைக்குப் பெயர் தான் நோய்.

-Healer Baskar’s Anatomic Therapy