பழந்தமிழ் இசை – தமிழ் இசையின் பண்கள் – தொடர் 2 : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம்
பழந்தமிழ் இசை -நான்காம் பாகம் – தமிழ் இசையின் பண்கள்

கரகரப்பிரியா

தமிழிசையின் “படுமலைப்பாலைப் பண்” இன்று கர்நாடக சங்கீதத்தில் கரகரப்பிரியா என்னும் இராகமாகப் பெயர் மாறியது. கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22வது மேளகர்த்தா இராகம். கேட்போரை உருக வைக்கும் இந்த இராகம் இனிமையும் பேரெழிலும் நிறைந்ததாகும். நாதஸ்வரத்தில் இந்த இராகத்தைக் கேட்பவர்கள் இலகுவில் மனதை பறி கொடுத்து விடுவார்கள்.

விரிவான ஆலாபனைக்கு ஏற்ற இராகமாக இது விளங்குவதால் ஆற்றல்மிக்க கலைஞர்களுக்கு தங்கள் வித்துவத்தைக் காண்பிக்க ஏதுவான இராகமாகிறது. இந்த இராகம் நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்தது என்பதை இலகுவில் கண்டுவிடலாம். பழம்பெரும் தமிழ் இராகமான இன்றைய கரகரப்ரியா ராகத்தின் ஆதிகாலத் தமிழ்பெயர் படுமலைப்பண் என்பதாகும்.

பன்னெடுங்காலமாக தமிழ் மக்கள் பழகி வந்த இராகங்கள் பக்தி இசையில் வளர்ச்சிபெற்று, பின்னர் ஆட்சி மாற்றங்களுடே சம்ஸ்கிருத மயப்பட்டு தமிழ் பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. என்னதான் இராகங்களின் இவர்கள் பெயர்களை மாற்றினாலும் அதன் இனிமையை மக்கள் மறுப்பதற்கில்லை.

இங்கே கருணாரசத்திற்கு மட்டும் இடம் இருப்பதால் அந்த உணர்வையே எல்லாப் பாடல்களும் பிரதிபலிக்கின்றன. இதிலிருந்து பிறந்த சேய் இராகங்கள் பல இருக்கின்றன. வழக்கிலுள்ள இராகங்கள் என்ற வகையில் பின்வரும் இராகங்களைக் குறிப்பிடலாம்.
ஆபேரி
ஆபோகி
ஸ்ரீரஞ்சனி
கானடா
மத்யமாவதி
தேவமனோகரி
ஸ்ரீராகம்
பிருந்தாவன சாரங்கா
முகாரி
ரீதிகௌளை
சிவரஞ்சனி

ஆரோகணம் – ச ரி2 க2 ம1 ப த2 நி2 ச்
அவரோகணம் – ச் நி2 த2 ப ம1 க2 ரி2 ச
வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 4வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்தமத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இவ்விராகமே பழமையான சாமகானத்தை ஒத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர் - 76கரகரப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்

பாடல் : மாதவிப் பொன்மயிலாள்….
படம் : இரு மலர்கள்
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : M S விஸ்வநாதன்

பாடல் : இசையாய் தமிழாய் இருப்பவனே….
படம் : அகத்தியர் (1972)
பாடியவர்கள் : சீர்காழி, T R மகாலிங்கம்
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடல் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு…..
படம் : நெற்றிக்கண் (1981)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், P சுசீலா
இசை : இளையராஜா

பாடல் : பூங்காற்று திரும்புமா…..
படம் : முதல் மரியாதை (1984)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட…..
படம் : சிறைப்பறவை (1987)
பாடியவர்கள் : கே.ஜே ஜேசுதாஸ், சுனந்தா
இசை : இளையராஜா

பாடல் : தூளியிலே ஆட வந்த…..
படம் : சின்னத்தம்பி (1991)
பாடியவர்கள் : மனோ, சித்ரா
இசை : இளையராஜா

பாடல் : தானா வந்த சந்தனமே….
படம் : ஊரு விட்டு ஊரு வந்து (1990)
பாடியவர்கள் : S B பாலசுப்ரமணியம், S ஜானகி
இசை : இளையராஜா

ஆபேரி – கரகரப்பிரியா
ஆபேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் சேய் இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் சட்சம் (ச), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
ஆரோஹனம் : ச க2 ம1 ப நி2 ச்
அவரோஹனம் : ச் நி2 த2 ப ம1 க2 ரி2 ச

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது “வர்ஜ” இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும்  அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன.  இதனால் இது “ஔடவ சம்பூரண” இராகம் எனப்படுகின்றது.

“பேரியாழ்” என்ற ஆயிரம் தந்திகளை உடைய யாழை இசைக்கும் போது எழுந்த இசையே “ஆபேரி” என்றழைக்கப்படுகிறது.

ஹிந்துஸ்தானி இசையில் ஆபேரிக்கு அருகில் வரும் ராகம்: “பீம்ப்ளாஸ்” பெண்பால் இராகமான இதை அந்தி மயக்கும் நேரத்தில் பாடுவது பொருந்தும்.

நாடக அரங்கில் புகழ் பெற்று சினிமாவிலும் சாதனை படைத்த இராகங்களில் முதன்மையானது ஆபேரி இராகமாகும். நாதஸ்வர இசையில் கேட்கும் போது இதன் முழுமையான இன்பத்தை நுகரலாம்.

இனிமைமிக்க இந்த ஆபேரி இராகத்தில் அமைந்த நூற்றுக்கும் மேற்பட்ட திரையிசைப்பாடல்கள் பலவுள்ளன. அவற்றில் மிகச்சிறந்த சிலவற்றை மட்டும் நாம் இங்கே பார்ப்போம்.

சூலமங்கலம் சகோதரிகள் பாடும் “கந்தசஷ்டி கவசம்” பாடலின் ஆரம்பமே ஆபேரி இராகத்திலேயே அமைந்துள்ளது.

“துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் – நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர் சஸ்டி கவசந்தனை அமரர் இடர் தீர அமரம் புரிந்த  குமரன் அடி நெஞ்சே குறி …” என்று ஆரம்பிக்கும் இந்த வரிகளும்,  இந்த வரிகளைத் தொடரும் வீணை இசையும்  எம் உள்ளத்தை மிகவும் பரவசப்படுத்தி விடுகின்றது. இத்தகைய ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி மனித மனங்களை வசப்படுத்தும் வல்லமை இந்த ஆபேரிக்குத்தான் உண்டு.

தொடர் - 77ஆபேரி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்

பாடல் : உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே…..
பாடல் : கவிஞர் வாலி
பாடியவர் : T M சௌந்தரராஜன்

பாடல் : காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி…..
படம் : திருவருட்செல்வர்
பாடியவர் : டி.எல் மகாராஜன்
இசை : கே.வீ மகாதேவன்

பாடல் : மாசில் வீணையும் மாலை மதியமும்…..
படம் : திருவருட்ச்செல்வர்
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : கே.வீ .மகாதேவன்

பாடல் : கோமாதா எங்கள் குல மாதா…..
படம் : சரஸ்வதி சபதம்
பாடியவர் : பி.சுசீலா
இசை : கே.வீ மகாதேவன்

பாடல் : இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை…..
படம் : திருவிளையாடல்
பாடியவர் : தீ.ஆர்.மகாலிங்கம்
இசை : கே.வீ .மகாதேவன்

பாடல் : சிங்கார வேலனே தேவா…..
படம் : கொஞ்சும் சலங்கை (1962)
பாடியவர் : எஸ்.ஜானகி
இசை : எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு

முழுவதும் நாதஸ்வரத்திலேயே வாசிக்கப்பட்டிருந்த இந்தப் பாடலைப் பாடுவதற்கு இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு (1962). பலரையும் நாடினார். இந்தப் பாடலை நாகஸ்வரத்தில் வாசித்திருந்தவர் காருகுறிச்சி அருணாசலம் எனும் நாகஸ்வர மேதையாகும். இறுதியில் அக்காலத்தில் அவ்வளவு பிரசித்தமில்லாத எஸ்.ஜானகியைப் பாட வைத்தார். இன்றும் அழியாப் புகழுடன் விளங்குகின்றது.

“ஆபேரி” இராகத்தில் அமைந்திருந்த இந்தப் பாடல்  இந்த இராகத்தில் அமைந்துள்ள எல்லாப் பாடல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது. இப்பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். அடுத்து இந்த இராகத்தில் அமைந்துள்ள  ஏனைய பாடல்களையும் பார்ப்போம்.

பாடல் : சிங்கார புன்னகை கண்ணாரக் கண்டாலே…..
படம் : மகாதேவி (1957)
பாடியவர்கள் : பாலசரஸ்வதிதேவி, ராஜேஸ்வரி
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர்: கண்ணதாசன்

பாடல் : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ…..
படம் : பாகப்பிரிவினை (1959)
பாடியவர் : TMS
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர் : கண்ணதாசன்

பாடல் : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல…..
படம் : பாசமலர் (1960)
பாடியவர்கள் : TMS, பி.சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர் : கண்ணதாசன்

பாடல் : கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே…..
படம் : அம்பிகாபதி (1956)
பாடியவர் : பி.பானுமதி
இசை : ஜி ராமநாதன்

பாடல் : வாராயோ வெண்ணிலாவே…..
படம் : மிஸ்ஸியம்மா (1955)
பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா, பி.லீலா
இசை : எஸ்.ராஜேஸ்வர ராவ்

பாடல் : திருப்பரம் குன்றத்தில் நீ சிரித்தாள்…..
படம் : கந்தன் கருணை
பாடியவர்கள் : பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி
இசை : கே.வீ மகாதேவன்

பாடல் : தென்றல் உறங்கிய போதும்…..
படம் : பெற்ற மகனை விற்ற அன்னை (1958)
பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு…..
படம் : கந்தன் கருணை
பாடியவர் : பி.சுசீலா
இசை : கே.வீ .மகாதேவன்

பாடல் : பூமாலையில் ஓர் மல்லிகை…..
படம் : ஊட்டி வரை உறவு
பாடியவர்கள் : டி.எம் சௌந்தரராஜன், பி.சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…..
படம் : தில்லு முல்லு
பாடியவர் : எஸ்.பி.பாலசுரமணியம்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல் : கவிதை அரங்கேறும் நேரம்…..
படம் : அந்த 7 நாட்கள்
பாடியவர்கள் : பி.ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
இசை : எம்.எஸ்..விஸ்வநாதன்

பாடல் : நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்…..
படம் : போலீஸ்காரன் மகள்
பாடியவர் : பி .பி.ஸ்ரீநிவாஸ்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல் : பொனென்ன பூவென்ன கண்ணே…..
படம் : அலைகள் (1973)
பாடியவர் : பி.ஜெயச்சந்திரன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

இளையராஜா ஆபேரி இராகத்தைப் பெரும்பாலும் மென்மையான காதல் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளார்.
பாடல் : அன்னக்கிளி உன்னைத் தேடுதே…..
படம் : அன்னக்கிளி (1976)
பாடியவர் : எஸ்.ஜானகி

பாடல் : ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு…..
படம் : வைதேகி காத்திருந்தாள் (1985)
பாடியவர்: P ஜெயச்சந்திரன்

பாடல் : பூவே பூச்சூட வா……
படம் : பூவே பூச்சூட வா (1985)
பாடியவர்கள் : K J ஜேசுதாஸ், சித்ரா

பாடல் : குயிலே கவி குயிலே…..
படம்:கவிக்குயில் (1977)
பாடியவர்: எஸ்.ஜானகி

பாடல் : செந்தூரப்பூவே செந்தூரப்பூவே…..
படம்: பதினாறு வயதினிலே (1977)
பாடியவர் : எஸ்.ஜானகி

பாடல் : சிந்து நதிக்கரையோரம்…..
படம் : நல்லதொரு குடும்பம் (1978)
பாடியவர்கள் : T M சௌந்தரராஜன், P சுசீலா

பாடல் : வசந்த கால கோலங்கள்…..
படம் : தியாகம் (1978)
பாடியவர் : எஸ்.ஜானகி

பாடல் : சின்னஞ சிறு வயதில் எனக்கோர்…..
படம் : மீண்டும் கோகிலா 1982
பாடியவர்கள் : K J ஜேசுதாஸ், S P சைலஜா

பாடல் : ராக்கம்மா கைய தட்டு….
படம்: தளபதி (1991)
பாடியவர்கள் : S P B, சுவர்ணலதா

பாடல் : எனக்கு பிடித்த பாடல்…..
படம் : ஜூலி கணபதி
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ்,ஸ்ரேயா கோஷல்
இசை: இளையராஜ

பாடல் : கடல் அலை கால்களை…..
படம்: பொம்பள மனசு
பாடியவர் : பி.ஜெயச்சந்திரன்
இசை: ரத்னா சூரியன்

பாடல் : அமுத மழை பொழியும் முழு நிலவிலே….
படம் : பொம்பள மனசு
பாடியவர் : T L தியாகராஜன்
இசை: ரத்னா சூரியன்

இந்த பாடலைப் பாடியவர் மறைந்த பழம்பெரும் பாடகர் திருச்சி லோகநாதனின் மூன்றாவது பாடகப் புதல்வர் தியாகராஜன். ஏ ஆர் ரகுமானும் ஆபேரியில் ஒரு நல்ல பாடலைப் போட்டிருகிறார். நித்யஸ்ரீ யின் குரலில் மிகவும் அற்புதமாக ஒலிக்கிறது.

பாடல் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…..
படம் : ஜீன்ஸ்(1998)
பாடியவர் : நித்யஸ்ரீ மகாதேவன்
இசை : A R ரஹ்மான் வைரமுத்து

இன்னும் பல அற்புதமான பாடல்களைத் தவிர்த்துள்ளேன். ஏற்கனவே நான் சொன்னதற்கு ஏற்ப இந்த இராகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைப்பாளர்கள் தந்திருக்கிறார்கள்.

ஆபோகி – கரகரப்பிரியா

ஆபோகி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய, “வேத” என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இது பக்தி பாவம் நிறைந்த ராகம்.

‘ஆ’என்றால் பசு; ‘போகி’ என்றால் இந்திரன். ஆக, இந்திரனின்பசுவாகிய ‘காமதேனு’ தான் ‘ஆபோகி’ . ஆண்பால் ராகமான இதைப்பாட பொருத்தமான நேரம், காலை 8 மணி முதல் 10 மணி வரை.

பாடுவதற்கேற்ற நிலைகள்: விரகம், சிருங்காரம், பக்தி ஆகிய மனநிலைகள்.
ஆரோகணம்: – ச ரி2 க2 ம1 த2 ச்
அவரோகணம்: – ச் த2 ம1 க2 ரி2 ச

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), சதுஸ்ருதி தைவதம்(த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம். கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்குரிய இராகம். இதுவும் கருணைச் சுவை கொண்ட ஒரு இராகம் ஆகும்.

தொடர் - 78ஆபோகி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
பாடல் : நானன்றி யார் வருவார்…..
படம் : மாலையிட்டமங்கை
பாடியவர்கள் : டி.ஆர் மகாலிங்கம், A P கோமளா
இசை : விஸ்வநாதன் ராமமுர்த்தி

பாடல் : தங்கரதம் வந்தது வீதியிலே…..
படம் : கலைக்கோயில் (1964)
பாடியவர்கள் : பாலமுரளி கிருஷ்ணா, P சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமுர்த்தி.
இந்தப்பாடல் பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் அமரத்துவம் பெற்றது.

மெல்லிசை மன்னர்கள் இசையில், கவியரசரின் வரிகளில், “மாங்கனி கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீனாட” போன்ற வரிகளுடன் அமைந்தது. இதன் சிறப்பம்சம், பாலமுரளிகிருஷ்ணா அவர்களையும், வீணை சிட்டிபாபு அவர்களையும் முதன்முதலாக தமிழ்த்திரையுலகிற்கு எம்எஸ்வி அறிமுகப்படுத்தியது.

பாடல் : வணக்கம், பலமுறை சொன்னேன்…..
படம் : அவன் ஒரு சரித்திரம்
பாடியவர் : சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமுர்த்தி.

பாடல் : இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே…..
படம் : வைதேகி காந்திருந்தாள் (1984)
பாடியவர்கள் : ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
இசை : இளையராஜா

இது ஒரு அற்புதப் பாடல். ஜெயச்சந்திரன் என்றவுடன் நினைவுக்கு வரும் இப்பாடலின் ஆரம்ப ஆலாபனையும், இடையில் வாணிஜெயராம் பாடும் ஸ்வரக் கோர்வைகளும், ‘தகிட தகிட’ என்னும் துள்ளல் நடையில் வரும் தபேலாவும் வீணையும் இணைந்து என்றென்றைக்கும், ஆனந்தம் அளிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.

இளையராஜாவின் பாணியின் ஒரு அம்சம் என்னவென்றால் ஒரு பாடலில் அவர் தேர்வு செய்யும் ராகத்தின் இலக்கணத்தைப் பெரும்பாலும் மீறமாட்டார். எம் எஸ்வி, ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சில விதிமீறல்களை அனுமதிப்பார்கள். அதனாலேயே ராஜாவின் பாடல்கள் ராகங்களை அறிவதற்கு எதுவாக இருக்கிறது.

கீர்த்தனைகள் கற்றுக்கொள்வதற்குமுன் இதுபோன்ற பாடல்கள் மூலமாகத்தான் இராகங்களை இனம் காணமுடிகிறது.

பாடல் : கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்…..
படம் : சந்திரமுகி (2005)
பாடியவர்கள் : ஆஷா பான்ஸ்லே, மதுபாலகிருஷ்ணன்
இசை : வித்யாசாகர்
நீண்ட காலத்துக்குப் பின் ராகங்களில் பாடல்களைத் தரும் வித்யாசாகரின் இசையில் இந்தப்பாடல் வெளிவந்திருக்கிறது எனலாம்.

காபி – கரகரப்பிரியா

இது 22வது மேளகர்த்தா இராகமாகிய கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமாகும். சிருங்கார ரசத்துக்குப் பொருத்தமான இந்த ராகம், அன்னிய சுரங்கள் அதிகம் வரும் பாஷாங்க ராகமாகும். ஆண்பால் ராகமான ‘காபி’ ரம்யமான மாலை வேளைக்கு ஏற்ற ராகம்.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள்:
ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம் மற்றும் காகலி நிஷாதம்.
ஆரோகணம்: – ச ரி ம ப நி ச்
அவரோகணம்: – ச் நி த நி ப ம க ரி ச

தொடர் - 79காபி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
பாடல் : ஹே… பாடல் ஒன்று…..
படம் : ப்ரியா (1978)
பாடியவர்கள் : S ஜானகி, K.J யேசுதாஸ்
இசை : இளையராஜா
பாடல் : என்மேல் விழுந்த மழைத் துளியே…..
படம் : மே மாதம் (1994)
பாடியவர் : ஜெயச்சந்திரன்
இசை : A R ரஹ்மான்

பாடல் : குச்சி குச்சி ராக்கம்மா…..
படம் : பம்பாய்(1995)
பாடியவர்கள் : ஹரிஹரன் குழுவினர்
இசை : A R ரஹ்மான்

பாடல் : கண்ணே கலைமானே…..
படம் : மூன்றாம்பிறை (1982)
பாடியவர் : K J யேசுதாஸ்
இசை : இளையராஜா
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : சங்கத்தில் பாடாத கவிதை…..
படம் : ஓட்டோ ராஜா
இசை : இளையராஜா

கானடா – கரகரப்பிரியா

இது 22வது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு
ஆரோகணம்: ச ரி2 ப க2 ம1 த2 நி2 ச
அவரோகணம்: ச நி2 ப ம1 க2 ம1 ரி 2 ச
பக்தி இரசனையினைத் தூண்டக்கூடியது. ஆலாபனைக்கு உகந்த இந்த இராகம், இராகமாலிகைகளில் பெரிதும் கையாளப்படுகின்றது. காதலும், வாஞ்சையும், சக்தியும், பேருவகையும், களிப்பும் தரும் இராகமாகும். மென்மையும், அழகும், இயல்பிலேயே சோகம் கவிந்த நுண்மையும் கொண்ட இந்த இராகம், கருணை, சாந்தம், சிருங்காரம் போன்ற சித்தரிப்புகளையும் தரும் வல்லமை கொண்டது. எழிலும், ஈர்ப்பும் கொண்ட இந்த இராகம் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா சென்ற
இராகங்களில் முக்கியமாதாகும்.

வட இந்திய செவ்வியல் இசையான ஹிந்துஸ்தானி இசையில், தமிழ் செவ்வியல் இசை இராகமான இந்த கானடா இராகத்திற்கு இணையான இராகமாக “தர்பாரிகானடா” அமைந்துள்ளது. தவிர கௌசிக் கானடா, நாயகி கனடா, காபிகானடா, பாகஸ்ரீகானடா, குசைனீகானடா போன்ற இராகங்கள் கானடா குடும்பம் என்றும் கருதப்படுகிறது.

ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப் படுத்தப்பட்டது. அக்பரின் அரசைவையில் பெருமிதத்துடன் இசைக்கப்பட்ட இராகமாதலால் “தர்பாரி” கனடா எனப் பெயர் பெற்றது போலும்.

தொடர் - 80கானடா இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

பாடல் : அலை பாயுதே கண்ணா என் மனம்…..
பாடியவர் : பித்துக்குளி முருகதாஸ்
இயற்றியவர் : ஊத்தக்காடு வெங்கட சுப்பய்யர்

பாடல் : ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை…..
படம் : வல்லவனுக்கு வல்லவன் (1968)
பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன்
இசை : வேதா

பாடல் : முல்லை மலர் மேலே மொய்க்கும்…..
படம் : உத்தமபுத்திரன் (1958)
பாடியவர்கள் : டி.எம் சௌந்தரராஜன், P.சுசீலா
இசை : ஜி.ராமநாதன்
இயற்றியவர் : மருதகாசி

பாடல் : கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே…..
படம் : அக்பர் (1960)
பாடியவர் : பி.லீலா
இசை : நௌசாட்

பாடல் : சின்னஞ் சிறிய வண்ணப்பறவை…..
படம் : குங்குமம் (1962)
பாடியவர்கள் : டி.எம் சௌந்தரராஜன், P.சுசீலா
இசை : கே.வீ.மகாதேவன்

பாடல் : நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்…..
படம் : கர்ணன் (1964)
பாடியவர் : திருச்சி லோகநாதன்
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாடல் : ஏன் இப்படி தண்டு கொண்டு…..
படம் : திருவிளையாடல் (1967)
பாடியவர் : கே.பி.சுந்தராம்பாள்
இசை : கே.வீ. மகாதேவன்

பாடல் : வசந்தத்தில்ஓர் நாள் மாணவரை ஓரம்…..
படம் : மூன்று தெய்வங்கள் (1973)
பாடியவர் : பி.சுசீலா
இசை : விஸ்வநாதன்

பாடல் : மருதமலை மாமணியே முருகைய்யா…..
படம் : தெய்வம் (1973)
பாடியவர் : மதுரை சோமு
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடல் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு…..
படம் : நீதிக்குத் தலை வணங்கு (1975)
பாடியவர் : எஸ்.வர லட்சுமி
இசை : விஸ்வநாதன்

பாடல் : கேள்வியின் நாயகனே…..
படம் : அபூர்வ ராகங்கள் (1975)
பாடியவர்கள் : வாணி ஜெயராம், சசிரேகா
இசை : விஸ்வநாதன்

பாடல் : அலைபாயுதே கண்ணா என் மனம்…..
படம் : எத்தனை கோணம் எத்தனை பார்வை (1981)
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா…..
படம் : மௌனம் சம்மதம் (1991)
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா
இசை : இளையராஜா

பாடல் : ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ…..
படம் : அரங்கேற்ற வேளை (1991)
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா

பாடல் : பூமாலை வாங்கி வந்தான்…..
படம் : சிந்துபைரவி (1984)
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா

பாடல் : புது வெள்ளை மழை பொழிகின்றது…..
படம் : ரோஜா (1992)
பாடியவர்கள் : உன்னிமேனன், சுஜாதா
இசை : ஏ.ஆர்.ரகுமான்

பாடல் : ஒரு தெய்வம் தந்த பூவே…..
படம் : கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
பாடியவர் : பி.ஜெயச்சந்திரன்
இசை : ஏ.ஆர்.ரகுமான்

பாடல் : மலரே மௌனமா.. மௌனமே வேதமா…..
படம் : கர்ணா (1995)
பாடியவர்கள் : எஸ். பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
இசை : வித்யாசாகர்

பாடல் : நீ காற்று நான் மரம்….
படம் : நிலாவே வா (1995)
பாடியவர் : ஹரிகரன்
இசை : தேவா
இவாறாக இந்த இராகத்தில் இன்னும் பல பாடல்களைப் பல இசையமைப்பாளர்கள் தந்திருக்கிறார்கள். தொடரின் விரிவுக்கஞ்சி தவிர்த்து வந்திருக்கிறேன்.

சிறீரஞ்சனி – கரகரப்பிரியா
இந்த ராகம் 22வது மேளகர்த்தாவாகிய கரகரப்ரியாவின் ஜன்ய இராகமாகும். இதற்கிணையான ஹிந்துஸ்தானி இராகம் “பாகேஸ்ரி” உபாங்க இராகமான இது முற்பகல் நேரத்தில் பாடத்தகுந்ததாகும்.

ஆண்பால் இராகமான ‘ஸ்ரீ ரஞ்சனி’யின் சுரங்கள் :
இந்த இராகத்தில் சட்சம்(ச), சதுச்ருதி ரிசபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), சதுச்ருதி தைவதம்(த2), கைசிக நிசாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. (பஞ்சமம் இல்லை).
ஆரோகணம் – ச ரி க ம த நி ச
அவரோகணம் – ச நி த ம க ரி ச

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது “வர்ஜ” இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் ஆறு சுரங்களும் அவரோகணத்தில் ஆறு சுரங்களும் உள்ளன. இதனால் இது “சாடவ” இராகம் எனப்படுகின்றது. இந்த இராகத்தில் அமைந்த மிகவும் அற்புதமான பாடல் ஒன்று.

தொடர் - 81பாடல் : நாதமெனும் கோயிலிலே…..
படம் : மன்மதலீலை (1976)
பாடியவர் : வாணி ஜெயராம்
இசை : விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : ஒரு ராகம்…..
படம் : உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
இசை : இளையராஜா

பாடல் : பகலிலே ஒரு நிலவினை…..
படம் : நினைவே ஒரு சங்கீதம்
இசை : இளையராஜா

பாடல் : நாதம் எழுந்ததடி…..
படம் : கோபுர வாசலிலே
இசை : இளையராஜா

சிவரஞ்சனி – கரகரப்பிரியா

இந்த ராகம், 22 வது மேளகர்த்தாவாகிய கரகரப்ரியாவின் ஜன்ய இராகமாகும். இந்த இராகத்தில் சட்சம்(ச), சதுச்ருதி ரிசபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), பஞ்சமம்(ப), சதுச்ருதி தைவதம்(த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம் – ச ரி2 க2 ப த2 ச்
அவரோகணம் – ச் த2 ப க2 ரி2 ச
இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது “ஔடவ” இராகம் எனப்படுகின்றது. மத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.

இவ்விராகத்தின் ரிஷப, காந்தார மூர்ச்சனைகளே முறையே ரேவதி, சுநாதவினோதினி ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன. இசையரசி எம் எஸ்ஸின் குரலில் அமைந்த அமரத்துவம் பாடல் “குறை ஒன்றும் இல்லை”. பாடலின் துவக்கமும் முதல் சரணமும் சிவரஞ்சனியில் அமைந்திருக்கிறது.

ராகம்: சிவரஞ்சனி
தாளம் : ஆதி
இயற்றியவர் : ராஜாஜி
பாடியவர் : M.S. சுப்புலக்ஷ்மி

பல்லவி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

சினிமா இசையைப் பொறுத்த வரையில் இந்த ராகத்தில் பலவிதமான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டாலும் சோகவண்ணம் பூசப்பட்ட சக்தி வாய்ந்த ஜனரஞ்சக ராகமும் சிவரஞ்சனி தான் என்றால் மிகையான கூற்று அல்ல.

சிவரஞ்சனி ராகத்தில் வெளியான திரையிசைப் பாடல்கள் சில
பாடல் : வா கலாப மயிலே…..
படம் : காத்தவராயன் (1958)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : ஜி.ராமநாதன்

பாடல் : காதலிலே தோல்வியுற்றான் காளை…..
படம் : கல்யாணப்பரிசு (1959)
பாடியவர் : ஏ.எம் ராஜா, பி.சுசீலா
இசை : ஏ.எம்.ராஜா

பாடல் : நான் பேச நினைப்பதெல்லாம்…..
படம் : பாலும் பழமும் (1961)
பாடியவர்கள் : சௌந்தரராஜன், பி.சுசீலா
இசை : மெல்லிசைமன்னர்கள்

பாடல் : நலம் தானா நலம் தானா…..
படம் : தில்லானா மோகனாம்பாள் (1968)
பாடியவர் : பி.சுசீலா
இசை : கே.வீ. மகாதேவன்

பாடல் : ஆயிரம் நிலவே வா…..
படம் : அடிமைப்பெண் (1969)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
இசை : கே.வீ. மகாதேவன்

பாடல் : கலைமகள் கைப்பொருளே…..
படம் : வசந்த மாளிகை (1972)
பாடியவர் : பி.சுசீலா
இசை : கே.வீ. மகாதேவன்

பாடல் : முத்துக்கு முத்தாக…..
படம் : அன்பு சகோதரர்கள் (1974)
பாடியவர் : கண்டசாலா
இசை : கே.வீ. மகாதேவன்

பாடல் : இது மாலை நேரத்து மயக்கம்…..
படம் : தரிசனம் (1975)
பாடியவர்கள் : T M சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
இசை : சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை உதவி : ஆர்.கே.சேகர்

பாடல் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த….
படம் : நினைத்ததை முடிப்பவன் (1975)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல் : அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை…..
படம் : நட்சத்திரம் (1979)
பாடியவர் : S.P பாலசுப்ரமணியம்
இசை : சங்கர் கணேஷ்

பாடல் : நாளும் உந்தன் உறவை நாடி வந்த பறவை…..
படம் : உறவை காத்த கிளி (1984)
பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
இசை : T ராஜேந்தர்

பாடல் : கண்மணி நில்லு காரணம் சொல்லு…..
படம் : ஊமை விழிகள் (1986)
பாடியவர்கள் : S N சுரேந்தர், சசிரேகா
இசை : மனோஜ் கியான், ஆபாவாணன்

பாடல் : தோல்வி நிலை என நினைத்தால்….
படம் : ஊமை விழிகள் (1986)
பாடியவர் : பி.பி.ஸ்ரீநிவாஸ்
இசை : மனோஜ் கியான், ஆபாவாணன்

பாடல் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா…..
படம் : புது வசந்தம் (2000)
பாடியவர் : ஜேசுதாஸ், சுசீலா
இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடல் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…..
படம் : ஆட்டோ கிராப் (2004)
பாடியவர்கள் : பரத்வாஜ், ஹரிகரன்
இசை : பரத்வாஜ்

பாடல் : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்…..
படம் : திருடா திருடா (1994)
பாடியவர் : மனோ குழுவினர்
இசை : ஏ.ஆர் ரகுமான்

பாடல் : உனக்கென்ன நானிருப்பேன்…..
படம் : காதல் (2007)
பாடியவர் : மனோ குழுவினர்
இசை : ஜோஷுவா ஸ்ரீதர்

இசைஞானி இளையராஜா தந்த இசைநயமிக்க சிவரஞ்சனி ராகப்பாடல்கள்.
பாடல் : சோலைப் புஷ்பங்களே என் சோகம்…..
படம் : இங்கேயும் ஒரு கங்கை (1989)
பாடியவர்கள் : கங்கை அமரன், சுசீலா

பாடல் : வா வா அன்பே அன்பே…..
படம் : அக்னிநட்சத்திரம் (1989)
பாடியவர்கள் : கே.ஜ ஜேசுதாஸ், சித்ரா

பாடல் : குயில் பாட்டு ஒ வந்ததென்ன இளமானே….
படம் : என் ராசாவின் மனசிலே (1991)
பாடியவர் : சுவர்ணலாதா

பாடல் : அடி ஆத்தாடி இள மனசொன்னு ரக்கை…..
படம் : கடலோரக் கவிதைகள் (1987)
பாடியவர் : இளையராஜா, எஸ்.ஜானகி

பாடல் : மஞ்சள்பூசும் மஞ்சள்பூசும்….
படம் : சக்கரைத் தேவன் (1993)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

பாடல் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா…..
படம் : இதயக்கோயில் (1987)
பாடியவர் : எஸ்.பி பாலசுப்ரமணியம்

பாடல் : சங்கீத ஜாதி முல்லை…..
படம் : காதல் ஓவியம் (1987)
பாடியவர் : எஸ்.பி பாலசுப்ரமணியம்

பாடல் : குடகு மலை காற்றில் வரும்…..
படம் : கரகாட்டக்காரன் (1989)
பாடியவர்கள் : மனோ, சித்ரா

பாடல் : பாட்டு சொல்லி பாட சொல்லி…..
படம் : அழகி (2002)
பாடியவர் : சாதனா சர்க்கம்

பாடல் : வண்ண நிலவே வைகை நதியே…..
படம் : பாடாத தேனீக்கள்
பாடியவர்கள் : கே.ஜே ஜேசுதாஸ், சித்ரா

இவைபோன்று இன்னும் அதிகமான சோகப்பாடல்களை இந்த இராகத்தில் எமது இசையமைப்பாளர்கள் தந்திருகின்றார்கள். விரிவுக்கஞ்சி சுருங்கக் கூறியுள்ளேன்.

மத்தியமாவதி – கரகரப்பிரியா

மத்தியமாவதி இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய “வேத” என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். தேவாரப் பண்களில், “செந்துருத்தி” என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம். இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம் – ச ரி2 ம1 ப நி2 ச்
அவரோகணம் – ச் நி2 ப ம1 ரி2 ச

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

காந்தாரம், தைவதம் என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது ஒரு ஔடவ இராகம். உபாங்க இராகம். இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடி முடிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது.

பல்வேறு இராகங்களைக் கேட்பதன் மூலமாக பல்வேறு இரச உணர்ச்சிகள் நமக்கு ஏற்படுகின்றன. இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக பழகிவந்த செழுமைப்படுத்திய இசைவடிவங்களில் கிடைத்தவைதான் இராகங்கள்ஆகும்.

பழந்தமிழர்களின் ஐந்து நிலத்திணைகளில் மலையும் மலைசார்ந்த பகுதியை குறிஞ்சிநிலம் என அழைத்தனர். குறிஞ்சி நிலத்திற்குரிய பண்ணையும் வகுத்தனர். அதனைக் குறிஞ்சிப்பண் என்றும் அழைத்தனர்.

குறிஞ்சிப்பண்ணை மதுமாதவி, செருந்தி, துருத்தி, செந்துருதி, செந்துருத்தி, செந்திருதி, செந்திசை, குறிஞ்சிப்பாணி, மத்யமாவதி எனப் பல்வேறு பெயர்களால் அழைத்தனர். குறிஞ்சிப்பண் என பழந்தமிழர் போற்றிய இராகத்தின் இன்றைய பெயர்தான் மத்யமாவதி.

ஐந்து சுரங்களைக் கொண்ட இனிமையான ஐந்து ராகங்களாவன : மோகனம், ஹிந்தோளம், சுத்ததன்யாசி, சுத்தசாவேரி, மத்யமாவதி ஆகும்.

எல்லையற்ற இன்பமும், புத்துணர்வும், உத்வேகமும் தந்து உள்ளத்தை பரவசப்படுத்தும் இராகங்களில் தனிச்சுவையும் தருவது மத்யமாவதி இராகம் ஆகும். உள்ளத்தில் பேருணர்ச்சிகளை பெருக்கெடுக்கவைத்து, உள்ளார்ந்த இன்பத்தை சுரக்கவைத்து இனியரசங்களை பெருகவைக்கும் இராகங்களில் முதன்மையானது இந்த இராகமாகும்.

உச்சஉணர்ச்சி, திடீர்எழுச்சி, உணர்ச்சிப்பெருக்கு, களிப்பு, கிளர்ச்சி போன்ற பல அர்த்தங்களை இசையில் இன்பரசமாகத் தருவதில் மத்யமாவதிக்கு இணையான இராகம் இல்லை எனலாம். குறிஞ்சிப்பண் எனபழந்தமிழர் போற்றிய இராகத்தின் இன்றைய பெயர் மத்யமாவதி.

தொடர் - 83மலரிலும் மெல்லிய, தேனினும் இனிய உணர்ச்சிததும்பும் இந்தராகத்தை, அதில் உட்புதைந்த இனபத்தை துழாவித்துழாவி எடுத்து அதில் இன்பங்களை இழைத்து இழைத்து அதன் பெருமையை தூக்கி நிறுத்தியவர்கள் திரையிசை அமைப்பாளர்களே என்பது மிகையான கூற்றல்ல!

பாடல் : தங்கச்சிசின்ன பொண்ணு……
படம் : கருப்புப்பணம் (1963)
பாடியவர்கள் : சீர்காழி, எல்.ஆர் ஈஸ்வரி குழுவினர்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : எங்கிருந்தோ வந்தான் இடைசாதி…..
படம் : படிக்காதமேதை (1954)
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : கே.வீ மகாதேவன்
இராகம் : மத்தியமாவதி

பாடல் : திருமால் பெருமைக்கு நிகரேது…..
படம் : திருமால்பெருமை (1965)
பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன்
இசை : கே.வீ மகாதேவன்

பாடல் : உலகின் முதலிசை தமிழிசையே…..
படம் : தவப்புதல்வன் (1972)
பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ் விஸ்வநாதன்

பாடல் : ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல்…..
படம் : பொன்னூஞ்சல் (1972)
பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன், பிசுசீலா
இசை : எம்.எஸ் விஸ்வநாதன்

பாடல் : சந்தனத்தில் நல்லவாசம் எடுத்து…..
படம் : பிராப்தம் (1972)
பாடியவர்கள் : டிஎம் சௌந்தரராஜன், பி சுசீலா
இசை : எம்எஸ் விஸ்வநாதன்

பாடல் : மதனமாளிகையில் மந்திர மாலைகளாம்…..
படம் : ராஜபார்ட் ரங்கதுரை (1974)
பாடியவர்கள் : டி.எம் சௌந்தரராஜன், பி சுசீலா
இசை : எம்.எஸ் விஸ்வநாதன்

பாடல் : கங்கை ஜமுனை இங்குதான் சங்கமம்…..
படம் : இமையம் (1976)
பாடியவர்கள் : கே ஜே ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை : எம்.எஸ் விஸ்வநாதன்

பாடல் : ஹரிவராசனம் விஸ்வ மோகனம்…..
படம் : சுவாமிஐயப்பன் (1976)
பாடியவர் : கே.ஜே ஜேசுதாஸ்
இசை : ஜி தேவராஜன்

பாடல் : மரகதவல்லிக்கு மணக்கோலம்…..
பாடியவர் : கே.ஜே ஜேசுதாஸ்
இசை : ஷங்கர்கணேஷ்

பாடல் : தைய்யா தைய்யா தகதைய்யா…..
படம் : உயிரே (2009)
பாடியவர்கள் : சுக்வீந்தர்சிங் , மால்குடிசுபா குழுவினர்
இசை : ஏ.ஆர் .ரகுமான்

பாடல் : மஞ்சக் குழிச்சு…..
படம் : 16 வயதினிலே (1976)
பாடியவர் : எஸ்.ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : என் கல்யாணவை போகம் உன்னோடுதான்…..
படம் : அழகே உன்னைஆராதிக்கிறேன் (1978)
பாடியவர் : வாணிஜெயராம்
இசை : இளையராஜா

பாடல் : செவ்வந்திப் பூக்களில் செய்தவீடு…..
படம் : மெல்லபேசுங்கள் (1982)
பாடியவர்கள் : தீபன்சக்கரவர்த்தி, உமாரமணன்
இசை : இளையராஜா

பாடல் : நிலாக்காயுது நேரம் நல்லநேரம்…..
படம் : சகலகலாவல்லவன் (1982)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : துள்ளித்துள்ளி நீபாடம்மா…..
படம் : சிப்பிக்குள் முத்து (1986)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுரமணியம், எஸ்.ஜானகி
இசை : இளையராஜா

பக்திப்பாடல்களில் சீர்காழி கோவிந்தராஜன் “மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி” ஆகிய பாடலும் மத்தியமாவதி இராகத்தில் தான் அமைந்திருக்கிறது.

ரிதீ கெளளை – கரகரப்பிரியா

ரீதிகௌள இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய “வேத” என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். (தீட்சிதர் மரபில் ‘நாரீரீதிகௌள’ என்று பெயர்.) உபாங்க – வக்ர இராகமான “ரீதி கௌள” அதிகாலையில் பாடப் பொருத்தமானது.

பெண்பால் ராகமான இதன் சுரங்களாவன இந்த இராகத்தில் சட்சம்(ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

ஆரோகணம் : ஸ க ரி க ம நி த நி ஸ்
அவரோகணம் : ஸ் நிதம கமபம கரிகஸ
(ஆரோஹணத்தில் பஞ்சமம் இல்லை)

இது மிகவும் அருமையானா இராகம் ஆகும். கர்நாடக சங்கீதத்தில் ரீதிகௌளை இராகம் ஒரு ஜன்னிய இராகமாகும். ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவற்றை சேய் இரகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர்.

திரையிசையில் மோகனம், கல்யாணி, ஹிந்தோளம் போன்ற இராகங்களைப் போன்று அல்லாமல் இந்த ரீதிகௌளையில் குறைந்தளவு பாடல்களே வந்துள்ளன.

பாடல் : சின்னக்கண்ணன் அழைக்கிறான்…..
படம் : கவிக்குயில் (1977)
பாடியவர் : பாலமுரளிகிருஷ்ணா
இசை : இளையராஜா
இயற்றியவர் : பஞ்சு அருணாசலம்

பாடல் : தலையைக் குனியும் தாமரையே…..
படம் : ஒரு ஓடை நதியாகிறது (1983)
பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம், S ராஜேஸ்வரி
இசை : இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து

பாடல் : கண்கள் இரண்டால்…..
படம் : சுப்ரமணியபுரம் (2008)
பாடியவர்கள் : பெல்லி ராஜ் , தீபா மரியம்
இசை : திரு சம்ஸ் வசந்தன்
இயற்றியவர் : தாமரை

பாடல் : அழகான ராட்சசியே பாடல்……
படம் : முதல்வன்
பாடியவர்கள் : எஸ்.பி பாலசுப்புரமணியம், ஹரினி
இசை : ஏ.ஆர் ரஹ்மான்
இயற்றியவர் : வைரமுத்து


கெளரி மனோகரி

கௌரிமனோகரி கருநாடக இசையின் 23வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு கௌரீ வேளாவளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்பால் இராகமான இது மிகவும் கம்பீரமானது. கௌரியாகிய பார்வதியின் மனதில் சென்று தங்குவது அல்லது கவர்ந்தது என்று பொருள் கொள்ளலாம். முன்னிரவு நேரத்தில் பாடத் தகுந்த இராகமிது.

ஆரோகணம் : ச ரி2 க2 ம1 ப த2 நி3 ச்
அவரோகணம் : ச் நி3 த2 ப ம1 க2 ரி2 ச
வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 5வது மேளம்.
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

கௌரிமனோகரியின் சேய் இராகங்கள்: பாதுதீபகம், வேளாவளி, கோகிலதீபம், ஹம்ஸபூஷணி, ஹம்சதீபகம், சாமசாளவி, சாளவிபங்காள, சிங்களபைரவி, கமலா.

இது மனதுக்கு ஊக்கமும், திடமும், கனிவும் ஒன்றுசேர தரும் பண்பட்ட இராகம். இன்பநிலை தந்து நுண்ணுணர்வுகளைக் கிளறிவிடுவதில் கெளரிமனோகரி தனித்தன்மை வாய்ந்தது.  கனிவும் கருணையும்மிக்க இந்த ராகத்தை பாடி, அழியாமல் தலைமுறை தலைமுறையாகக் காத்தவர்கள் ஓதுவார்கள் ஆவர். எனினும் இந்த ராகத்தின் பூர்வ தமிழ்ப்பெயர் தெரியவில்லை. இது கீரவாணி இராகத்திற்கு மிகமிக நெருக்கமானதாகும். தனது மனம்போன போக்கில் இராகங்களுக்கு வேறு பெயர் வைத்து மகிழ்ந்த தீட்சிதர் இந்த இராகத்திற்கு இட்ட பெயர் கௌரி வேளாவளி என்பதாகும்.

தொடர் - 85கௌரிமனோகரி இராகத்தில் வெளிவந்த அற்புதமான திரையிசைப் பாடல்கள் 
பாடல் : எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்….
படம் : தை பிறந்தால் வழி பிறக்கும் (1949)
பாடியவர் : T M S , R பாலசரஸ்வதிதேவி
இசை : K V மகாதேவன்

பாடல் : வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கு…..
படம் : மல்லிகா (1957)
பாடியவர் : ஏ.எம் ராஜா, பி.சுசீலா
இசை : டி.ஆர்.பாப்பா

பாடல் : பாட்டும் நானே பாவமும் நானே…..
படம் : திருவிளையாடல் (1965)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசை : K V மகாதேவன்
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : சரவணப் பொய்கையில் நீராடி…..
படம் : இது சத்தியம் (1963)
பாடியவர் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : ஆலயமாகும் மங்கை மனசு…..
படம் : சுமதி என் சுந்தரி (1971)
பாடியவர் : பி.சுசீலா
இசை : எம்.எஸ் விஸ்வநாதன்

பாடல் : மலரே குறிஞ்சி மலரே…..
படம் : டாக்டர் சிவா (1975)
பாடியவர் : கே.ஜே ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
இசை : எம்.எஸ் விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : கவிதை அரங்கேறும் நேரம்…..
படம் : அந்த ஏழு நாட்கள்  (1981)
பாடியவர் : கே.ஜே ஜேசுதாஸ், வாணி ஜெய்ராம்
இசை : எம்.எஸ் விஸ்வநாதன்
இயற்றியவர் : உடுமலை நாராயணகவி

இளையராஜா அமைத்த கௌரிமனோகரி இராகத்தில் வெளிவந்த சில பாடல்கள்:
பாடல் : சோலைப்பூவில் மாலைத் தென்றல்…..
படம் : வெள்ளை ரோஜா (1986)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

பாடல் : முத்தமிழ் கவியே வருக…..
படம் : தர்மத்தின் தலைவன்
பாடியவர் : கே.ஜே ஜேசுதாஸ், சித்ரா

பாடல் : சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே…..
படம் : நான் சிகப்பு மனிதன் (1987)
பாடியவர் : எஸ்.பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

பாடல் : வா வா அன்பே அன்பே…..
படம் : அக்னிநட்சத்திரம் (1988)
பாடியவர் : கே.ஜே ஜேசுதாஸ், சித்ரா

பாடல் : மாங்குயிலே பூங்குயிலே…..
படம் : கரகாட்டக்காரன் (1989)
பாடியவர் : எஸ்.பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

பாடல் : மணிக்குயில் இசைக்குதடி…..
படம் : தங்கமனசுக்காரன் (1991)
பாடியவர் : மனோ

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர் 76 – 85
சிறீ சிறீஸ்கந்தராஜா
17/07/2015 -02/10/2015

தொகுப்பு -thamil.co.uk