சமையலில் பயன்படும் மசாலா,வாசனைப் பொருட்கள்

மசாலாப் பொருள்கள்முதலில் தமிழ்ப் பெயரும் (இலங்கை / இந்திய தமிழ் பேச்சு வழக்குகளில்), அடுத்ததாக ஆங்கிலப் பெயரும், அடைப்புக் குறிகளினுள் இந்திப் பெயர்களும் தரப்பட்டுள்ளன.

விதைகளும், பழங்களும் – Seeds and Fruits
கடுகு – Mustard seeds (Rai / Sarson)
சின்னச்சீரகம் / சீரகம் – Cumin seed (Jeera)
பெருஞ்சீரகம் / சோம்பு – Fennel seed (Saunf/Sanchal)
வெந்தயம் – Fenugreek seeds (Methi)
கொத்தமல்லி / தனியா – Coriander seeds (Dhaniya)
மிளகு – Black Pepper Corns / Pepper (Mirchi)
ஏலம் / ஏலக்காய் – Cardamom / Green Cardamom (Elaichi)
கறுப்பு ஏலக்காய் – Black Cardamom (Kali Elaichi)
ஓமம் – Carom seeds / Bishop’s Weed seeds (Ajwain)
கருஞ்சீரகம் – Black Cumin seed
தமிழில் கருஞ்சீரகம் எனும் பொதுப் பெயரால் இரண்டு முற்றிலும் வேறுபட்ட தாவரங்களின் விதைகள் அழைக்கப்படுகின்றன. அவையாவன: Nigella sativa மற்றும் Bunium persicum (Syah Jeera).
சாதிக்காய் – Nutmeg (Jaiphal)
சாதிப்பூ – Mace (Javitri)
உண்மையில் இதுவொரு பூவல்ல, மாறாக பழத்தினுள் சாதிக்காய் விதையைச் சூழ்ந்திருக்கும் உறைபோன்ற மெல்லிய பகுதியே சாதிப்பூ என அழைக்கப்படுகின்றது.
எள் – Sesame seeds (Til)
கசகசா – Poppy seeds (Khus Khus)
அன்னாசி மொக்கு / மகம்பூ – Star anise (Chakra phool)
செத்தல் மிளகாய் – Dried Chilli / Red chili pepper (Lal Mirchi)
பச்சை மிளகாய் – Green chili pepper (Hari Mirch)
சாம்பார் மிளகாய் – Sambar Chilli
புளி / பழப்புளி – Tamarind (Imli)
எலுமிச்சை / தேசிக்காய் – Lime (Nimbu)
கொறுக்காய்ப்புளி – Malabar tamarind / Brindall berry (Kudampuli)
நெல்லிக்காய் / முழுநெல்லிக்காய் – Indian gooseberry (Amla)
கடுக்காய் – Terminalia chebula (Harad / hime)
மாதுளம் விதை – Pomegranate seed (Anardana)
சீமைச் சோம்பு – Caraway Seed (Siya zira)
கண்டந்திப்பிலி – Long pepper (Pippali)
வால்மிளகு – Cubeb
அசம்டவோமன் – Celery seed (Ajmud)

பூக்களும் மொட்டுக்களும் – Flowers and Buds
கிராம்பு / லவங்கம் – Clove (Lavang) – உலர்ந்த மொட்டுகள்.
குங்குமப்பூ – Saffron (Kesar) – சூல்முடிகள்.

பட்டைகளும் வேர்களும் கிழங்குகளும் – Barks, Roots and Rhizomes
கறுவா / இலவங்கப்பட்டை / பட்டை – Cinnamon (Dalchini)
இஞ்சி – Ginger (Adrak)
வோ்க்கம்பு / வோ்க்கொம்பு / சுக்கு – Dried ginger (Sonth)
மஞ்சள் – Turmeric (Haldi)
வசம்பு – Sweet Flag
அதிமதுரம் – Licorice (Jethimadh, Valmi)

பிசின்களும் பாசிகளும் – Resins and Lichens
பெருங்காயம் – Asafoetida (Hing)
கல்பாசி – lichen (Pathar Ka Phool)

இலை வகைகள் – Leaves
கருவேப்பிலை – Curry leaf / Sweet neem leaf (Kadipatta)
கொத்தமல்லி கீரை – Coriander leaf (Dhaniya)
வெந்தய கீரை – Fenugreek leaf (Kasoori Methi leaves)
புதினா இலை – Mint leaf (Pudina)
Bay leaf (Tej Patta)

பூண்டு வகைகள் – Bulbs
உள்ளி / வெள்ளைப் பூண்டு / பூண்டு – Garlic (Lahsun)
சின்ன வெங்காயம் / ஈருள்ளி (கன்னடம்) – Baby Onion, Red Onion, Shallot
சின்ன வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் வகைகள்: வல்லாரை 60, வல்லாரை 90, வேதாளம், யாழ்ப்பாண உள்ளூர் வகை.
பெரிய வெங்காயம் / பம்பாய் வெங்காயம் – Big onions, Red/purple Onion
பெரிய வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.

பருப்பு வகைகள் – Nut Varieties
முந்திரி – Cashew nut
பாதாம் – Almond
வேர்க்கடலை / நிலக்கடலை / கச்சான் / மணிலாக்கொட்டை / மல்லாக்கொட்டை- Peanuts

தூள் வகைகள் – Powder Varieties
வறுத்த கறித்தூள் – Roasted Curry powder (Sri Lankan)
கறித்தூள் – Curry powder
மிளகாய்த் தூள் – Chilli powder
குடை மிளகாய்த்தூள் – Paprika powder
மாங்காய்த்தூள் – Sour mango powder (Aamchur)
கரம் மசாலா – Garam Masala
மிளகு, கிராம்பு, கறுவா, சின்னச்சீரகம், கருஞ்சீரகம், பச்சை ஏலக்காய் மற்றும் கறுப்பு ஏலக்காய் ஆகியவற்றின் கலவை வறுக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.

ஏனையவை – Others
உப்பு / கறியுப்பு – Salt (Namak)
வெல்லம் / சர்க்கரை (இலங்கை பேச்சுவழக்கில்) / கருப்பட்டி – Jaggery (Gur)
பன்னீர் – Rose water (Gulab Jal)
வினாகிரி – Vineger (Sirka)

-வாடைக்காற்று