பழந்தமிழ் இசை – தமிழ் இசையின் பண்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம்
பழந்தமிழ் இசை நான்காம் பாகம் – தமிழ் இசையின் பண்கள்

மாயாமாளவ கெளளை
மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கருநாடக இசையின் 15வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகமாகும். இந்த இராகத்தின் ஸ்வரங்கள்:
ஆரோகணம்: ஸ ரி1க3ம1ப த1நி3ஸ்
அவரோகணம்: ஸ் நி3த1ப ம1க3ரி1ஸ

கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு பயிலும் மாணவருக்கு முதலில் சொல்லிக் கொடுக்கப்படும் இராகம் மாயாமாளவ கௌளை. இது ஏழு ஸ்வரங்களையும் ஆரோகண அவரோகணத்தில் முழுமையாகக் கொண்ட இராகம். பயிற்சி அதிகமில்லாத மாணவர்கள்கூட வெறும் ஆரோகண அவரோகண ஸ்வரங்களைப் பாடினால் இந்த ராகம் கிடைத்துவிடும். அக்னி என அழைக்கப்படும் 3வது வட்டத்தில் 3வது மேளம். இந்த இராகத்தின் பழைய பெயர் மாளவகௌளை ஆகும். இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மாயாமாளவ கௌளையின் சேய் இராகங்களாவன:
பரசு, சாவேரி, கௌளிபந்து, நாதநாமக்கிரியா, பௌளி, மலஹரி, கௌளை, ரேவகுப்தி, ஜகன்மோகினி, குர்ஜரி, மேச்சபௌளி, சிந்துராமக்கிரியா, பூரணபஞ்சமம், குண்டக்கிரியா, மேகரஞ்சனி, கௌரி, மித்திரகிரணி, லலிதகௌரி, கிருஷ்ணவேணி, நேப்பாளகௌள, பாஞ்சாலி, ருக்மாம்பரி, மதராங்கப்பிரியா, கோபிகாகுசும, தாரவம், கரக, பாவினி.

தொடர் - 69மாயாமாளவ கௌளை இராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

பாடல் : கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா…..
படம் : ஆலயமணி (1962)
பாடியவர்கள் : T M சவுந்தரராஜன், L R ஈஸ்வரி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…..
படம் : முள்ளும் மலரும் (1978)
பாடியவர் : K J யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : பூங்கதவே தாழ் திறவாய்…..
படம் : நிழல்கள் (1980)
பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி, உமாரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா

பாடல்: மதுரை மருக்கொழுந்து வாசம்…..
படம் : எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
பாடியவர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

பாடல் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்…..
படல் : முதல் இரவு
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் சுசீலா

பாடல் : நண்டூருது நரியூருது நண்டூருது……
படம் : பைரவி
பாடியவர் : T M சௌந்தரராஜன்

பாடல் : பூவ எடுத்து ஒரு மாலை…..
படம் : அம்மன் கோவில் கிழக்காலே

பாடல் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூரதீபம்…..
படம் : ஒருதலைராகம்
பாடியவர் : டிராஜேந்தர்

புறநீர்மை / பூபாளம்

திருஆலவாய் பண் – புறநீர்மை
‘மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.’

திருஞானசம்பந்தர் – “திருகோணமலை பதிகம்” பண் : புறநீர்மை
‘நிரைகழ அரவம் சிலம்பொலி அலம்பு
நிமலர் நீறணி திருமேனி
வரைகெழு மகளோர் பாகமாய்ப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பரும் கனமணி வரன்றிக்
குரைகட ஓதம் நித்திலங் கொழிக்கும்
கோணமா மலைஅமர்ந்தாரே.’

எந்த இராகங்களில் ஆரோகணம், அவரோகணம் இரண்டிலும் ஏழு சுரங்களும் முழுமையாக இருக்கின்றனவோ, அவை சம்பூர்ண இராகங்கள், ஜனக இராகங்கள், கர்த்தா இராகங்கள், தாய் இராகங்கள் அல்லது மேளகர்த்தா இராகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்றன. அவ்வாறன்றி, எண்ணிக்கை குறைந்து சுரங்கள் வந்தால் அவற்றை சேய் இரகங்கள் அல்லது ஜன்ய இராகங்கள் என்று அழைப்பர். பூபாள இராகத்தில் அமைந்த பாடல்களை விடியற்காலையில் பாடுதல் சிறப்பு.

இந்த ராகத்திற்கு ஏற்ற இசைக்கருவிகள் : புல்லாங்குழல் மற்றும் “சுப நாயனம்”. இத்துடன் ‘கடம் அல்லது மிருதங்கம்” வாசித்தல் சிறப்பு என புராணங்கள் கூறுகின்றன. இது 15வது மேளகர்த்தா இராகமான “மாயா மாளவகௌள”வின் ஜன்ய இராகமாகும். இதற்கு ‘புள்ளாளம்” “பூபாலம்” என்றும் பெயர்களுண்டு. தமிழிசைமரபில் இந்த ராகம் “புறநீர்மை” என்ற பண் ஆகும். ஹிந்துஸ்தானி இசை மரபில் இதற்கிணையான இராகம்  பூபாலி என்பதாம். இது ஒரு ஆண் பால் இராமாகும்.

இந்த இராகத்தின் சுரங்களாவன: சட்ஜமம், சுத்த ரிசபம், அந்தரகாந்தாரம், பஞ்சமம், சுத்த தைவதம் ஆகும். ‘மத்யமம்’, ‘நிசாதம்’ ஆகிய சுரங்கள் இதில் இல்லை.
ஆரோகணம் – ச ரி க ப த ச்
அவரோகணம் – ச் த ப க ரி ச

தொடர் - 70பூபாளம் இராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் 
“சலங்கையிட்டாள் ஒரு மாது”
“பாதம் வந்தனம் செய்யடி”
“நானாக நான் இல்லை தாயே”
“அதிகாலையில் சேவலை எழுப்பி”
“உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்”

இந்தளம் (இந்தோளம்)
மருதப் பெரும்பண்ணின் இரண்டாவது திறமான வடுகு என்ற திறத்தில் அகநிலைப் பண்ணாக அமைந்துள்ளது. சம்பந்தர் இப்பண்ணில்தான் மிக அதிகமான பதிகங்களைப் (2:1-39) பாடியிருக்கிறார். அப்பர் 3, சுந்தரர் 12, (1-12) ஆக 54 திருமுறைகளில்  இப்பண்ணில் பதிகங்களைப் பாடியிருக்கின்றனர்.  பதினோராந் திருமுறையிலுள்ள காரைக்கால் அம்மையாரின் பதிகங்களில் இரண்டாம் பதிகம் இந்தளம் பண்ணில் அமைந்துள்ளது. இதனையே ஹிந்தோளம் இராகம் என்றும் அழைப்பர். பெருமிதம், மருட்கை, வெகுளி என்னும் சுவைகளையுடையது.

சுந்தரர் தேவாரம் – திருவெண்ணெய்நல்லூர் – பண் : இந்தளம்
‘பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே’

திருமருகல் (154) – பண்: இந்தளம்
திருச்சிற்றம்பலம் 2-186
‘சடையாஎனுமால்சரண்நீஎனுமால்
விடையாஎனுமால்வெருவாவிழுமால்
மடையார்குவளைமலரும்மருகல்
உடையாய்தகுமோஇவள்உள்மெலிவே.’

இந்த இராகம் 20வது மேளகர்த்தாவான நடபைரவியின் சேய் இராகம் என்று சிலரும், 8வது மேளகர்த்தாவான தோடியின் சேய் இராகம் என்று சிலரும் கூறுகின்றனர். இந்த உருக்கமான ராகத்தில் ஆர்பாட்டமில்லாத சந்தோஷத்தையும், மெதுவாக இழையோடும் சோகத்தையும் வெளிப்படுத்த முடியும்.  இதுவும் மோகனத்தைப் போலவே ஐந்து சுரங்களை மாத்திரமே கொண்ட இராகமாகும்.  எந்த வகையான மக்களையும் வசீகரிக்கக் கூடிய மனோகரமான இராகம் என்றால் மிகையில்லை என்றே சொல்லலாம்.

இன்று ஹிந்தோளம் என்றழைக்கப்படும் இந்த ராகத்தை பழந்தமிழகத்தில் இந்தளம் என்று அழைத்தனர். சமயக்குரவர்கள் காலத்தில் இந்த இராகத்தில் தேவாரங்கள் பாடப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இந்த இராகத்தை மால் கௌன்ஸ் Malkauns என்று அழைக்கின்றனர். இந்த இராகத்திற்கு மிக நெருக்கமானதாகக் கருதப்படும் சந்திரகவுன்ஸ் Chandrakauns என்கிற ராகம் ஒரே ஒரு சுரத்தால் மாறுபடுகின்றது. கல்யாணவசந்தம் என்ற இராகமும் ஹிந்தோளத்திற்கு நெருக்கமானது என்றும் கருதுவர்.

ஹிந்தோளம் :
ஸ க ம1 த1 நி2 ஸ
ஸ நி2 த1 ம1 க ஸ

மால் கௌன்ஸ்:
ஸ க ம1 த1 நி2 ஸ
ஸ நி2 த1 ம1 க ஸ

சந்திரகவுன்ஸ்:
ஸ க ம1 த1 நி3 ஸ
ஸ நி3 த1 ம1 க2 ஸ

கல்யாணவசந்தம்
ஸ க2 ம1 த1 நி3 ஸ
ஸ நி3 த1 ப ம1 க2 ரி 2 ஸ

உலகம் தழுவிய இசையில் ஒலிக்கும் ஐந்து சுரங்களைக் கொண்ட இராகங்களில் ஒன்றான இந்த இராகம் தென்கிழக்கு ஆசியாவிலும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள இராகமாகும். சீன நாட்டில் தேசிய ராகமாக கருத்தப்படும் மோகன ராகம் போல இந்த இராகமும் அதிகமாக ஒலிக்கின்ற இராகமாகவும் விளங்குகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தளம்  இராகத்தில் அமைந்துள்ள திரை இசைப் பாடல்களைக் காண்போம்.

தொடர் - 71பாடல் : மழை கொடுக்கும் கொடையும்….
படம் : கர்ணன் (1964)
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : கண்களும் கவி பாடுதே…..
படம் : அடுத்த வீட்டுப் பெண் (1960)
பாடியவர்கள் : சீர்காழி, திருச்சி லோகநாதன்
இசை : ஆதிநாராயணராவ்

பாடல் : பச்சை மாமலை போல் மேனி…..
படம் : திருமால் பெருமை (1966)
பாடியவர் : சௌந்தரராஜன்
இசை : கே.வீ மகாதேவன்

பாடல் : சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே…..
படம் : மகாதேவி (195)
பாடியவர் : பகவதி
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : மாலைப்பொழுதின் மயக்கத்திலே…..
படம் : பாக்கிய லட்சுமி (1961)
பாடியவர் :  பி.சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : இயற்கை என்னும் இளைய கன்னி…..
படம் : சாந்திநிலையம் (1969)
பாடியவர்கள் : SPபாலசுப்ரமணியம், பி.சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்…..
படம் : அவளுக்கேன்றோர் மனம்
பாடியவர்கள் : எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

பாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு…..
படம் : மண் வாசனை
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி

பாடல் : அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட…..
படம் : வைதேகி காத்திருந்தாள் (1985)
பாடியவர் : எஸ்.ஜானகி

பாடல் : ஓம் நமச்சி வாயா……
படம் : சலங்கை ஒலி
பாடியவர்: எஸ்.ஜானகி

பாடல் : தரிசனம் கிடைக்காதா…..
படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி

பக்திப் பாடல்களில் T M சௌந்தரராஜன் பாடிய “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்” என்ற பாடலும் அருமையான ஹிந்தோள இராகத்தில் அமைந்ததே.

நடபைரவி
இது இருபதாவது மேளகர்த்தாராகமாகும். தமிழிசையில் “ஓரி” ராகம் என்றும் அழைக்கப்படும். இது ஒரு பெண்பால் ராகம். இது ஹிந்துஸ்தானி மரபில் “ஆசாவரி” என்றழைக்கப்படும். மாலையில் பாட வேண்டிய இந்த இராகத்தின் ஸ்வரங்கள்:
ஆரோகணம் – ஸ ரி2 க2 ம1 ப த1 நி2 ஸ்
அவரோகணம் – ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ

வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 2வது இராகம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.

இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08), மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28) ஆகிய மேளங்களைக் கொடுக்கும். இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சண்முகப்பிரியா (56) ஆகும்.

நடபைரவியின் சேய் இராகங்கள் வருமாறு.
பைரவி, ஆனந்தபைரவி, ஜயந்தசிறீ, சாரமதி, பூர்ணஷட்ஜம், இந்தோளம், மாஞ்சி, மார்க்கஹிந்தோளம், அமிர்தவாஹினி, சுத்ததெசி, ஜிங்களா, ஹிந்தோளவசந்தம், கோபிகாவசந்தம், கமலாதரங்கிணி, திவ்யகாந்தாரி, புவனகாந்தாரி, சுத்தரஜ்ஜணி, சுத்தசாளவி, நவரசச்சந்திரிகா, கோமேதகப்பிரியா, பாகீரதி, ரதிபதிப்பிரியா.

தொடர் - 72நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்

பாடல் : உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா…..
படம் : காதலிக்க நேரமில்லை (1964)
பாடியவர் : P B ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : போடச்சொன்னா போட்டுக்கறேன் போதும்வரை…..
படம் : பூவா தலையா (1969)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : M S விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…..
படம் : பாலும் பழமும் (1961)
பாடியவர் : T M சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
இயற்றியவர் : கண்ணதாசன்

பாடல் : ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ…..
படம் : அரங்கேற்றவேளை (1990)
பாடியவர்கள் : K J யேசுதாஸ் உமாரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா

பாடல் : வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்…..
படம் : மின்னலே (2001)
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர் : தாமரை

பாடல் : நினைக்கத் தெரிந்த மனமே…..
படம் : ஆனந்த ஜோதி
பாடியவர் : பி சுசீலா
இயற்றியவர் : கண்ணதாசன்

இந்த இராகத்தில் அமைந்துள்ள மேலும் சில பாடல்கள்:
“அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” – களத்தூர் கண்ணம்மா – ஆர் சுதர்சன்
“விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே” – புதையல் – எம் எஸ் வி, டீ கே ஆர்
“ராகங்கள் 16 உருவான வரலாறு” – தில்லு முல்லு – எம் எஸ் வி
“ராஜாவின் பார்வை” – அன்பே வா – எம் எஸ் வி
“நான் பார்த்ததிலே” – அன்பே வா – எம் எஸ் வி
“கண்ணை நம்பாதே” – நினைத்ததை முடிப்பவன் – எம் எஸ் வி
“ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து” – நினைத்ததை முடிப்பவன் -எம் எஸ் வி
“நாளை நமதே, நாளை நமதே” – நாளை நமதே – எம் எஸ் வி
“ஆசைய காத்துல தூது விட்டு” – ஜானி – இளையராஜா
“ஆத்து மேட்டுல ஒருபாட்டு கேக்குது” – கிராமத்து அத்தியாயம் – இளையராஜா
“அந்தி மழை மேகம்” – நாயகன் – இளையராஜா
“என் இனிய பொன் நிலாவே” – மூடுபனி – இளையராஜா
“இளம்பனித் துளி விழும் நேரம்” – ஆராதனை – இளையராஜா
“மடை திறந்து பாயும் நதியலை நான்” – நிழல்கள் – இளையராஜா
“மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர” – மௌனராகம் – இளையராஜா

பைரவி (கெளசிகம்)
பைரவி 20வது மேளகர்த்தா இராகமாகிய, “வேத” என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஒரு பழமையான இராகம்.
ஆரோகணம் – ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ்
அவரோகணம் – ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. மற்றும் சுத்த தைவதம் (த1) அவரோகணத்தில் வருகின்றது. தமிழ் இசையில் இது கௌசிகப் பண் என்று அழைக்கப்படுகிறது. மாலை நேரத்தில் பாடத்தகுந்த ராகமாகும். ‘பைரவி’ ஆண்பால் இராகமாகும்.

நமச்சிவாயத் திருப்பதிகம் பண் – கௌசிகம்
காதலாகிக் கசிந்துகண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

திருப்பாற் கடலில் பள்ளி : ஸ்வாமி அய்யப்பன்

ஆனந்த பைரவி

ஆனந்தபைரவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். 20வது மேளகர்த்தா இராகமாகிய, “வேத” என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் சேய் இராகம் ஆகும். இந்த இராகம் நாட்டுப்புற பாடல்களில் பிரபலமானது.

ஆரோகணம் – ச க2 ரி2 க2 ம1 ப த1 ப நி2 ச
அவரோகணம் – ச் நி2 த1 ப ம1 க2 ரி2 ச

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இது ஒரு சம்பூர்ண இராகம் என்றாலும் ஒரு மேளகர்தா (தாய்) இராகம் ஆகாது, ஏனெனில் இதில் வக்ர ஆரோகணம் உள்ளது. இது ஒரு பாஷாங்க இராகம். இந்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன. இவை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் வரவில்லை, ஆனால் சில பிரயோகங்களில் வருகின்றன. இது ஒரு அமைதியானராகம். மங்களகரமான ராகம். கருணை ரசம் ததும்பும் ஒருராகம். இந்த இராகத்தில் உள்ள சில கர்நாடக இசைப் பாடல்கள் இருந்தாலும் அவற்றில் மிகவும் பிரசித்தமானது

“கற்பகவல்லி நின் பொற்பதங்கள்” என்ற பாடலாகும். இந்த பாடல் பல இராகங்களால் ஆனது (இராகமாலிகா). முதல்சரணம் வரையில் ஆனந்த பைரவி ராகம். பிறகு வரும் சரணங்கள் கல்யாணி, பாகேஸ்வரி மற்றும்ரஞ்ஜனி ஆகிய ராகங்கள் வரும். இந்த பாடலிலேயே இந்த ராகத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு. கேட்க கேட்க சந்தோசமும் குதூகலமும் பெருகும். சோர்ந்த உள்ளங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும்.

“வேலவா வடி வேலவா…”  பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள்
இயற்றியவர் : எஸ். கோவிந்தராஜன், இசை: டி.ஏ. கல்யணம்.

“நானாட்சி செய்து வரும் நான் மாடக்கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு” – ஆதிபராசக்தி

தொடர் - 74ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

1964ல் வெளிவந்த ‘கர்ணன்’ என்ற திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய “போய் வா மகளே போய் வா புன்னகை சுமந்து போய் வா” என்ற பாடல் ஆனந்த பைரவி ராகத்தில்தான் அமைந்திருகிறது.

“சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா” – காளிதாஸ்
“காதுகொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் – காவல்காரன்
“கொஞ்ச நாள் பொறு தலைவா…” – ஆசை
“மெட்டுப் போடு என் தாய்கொடுத்த….” – டூயட்
“சுடிதார் அணிந்து வந்த சொர்கமே” – பூவெல்லாம் கேட்டு பார்
“தேவதை வம்சம்நீயோ…..”
“தீண்டாய் மெய்தீண்டாய்….”

பாடியவர் : T M சௌந்தரராஜன் – இயற்றியவர் : வீரமணி ஐயர்
இராகம் : ராகமாலிகா- (ஆனந்த பைரவி)

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி

(கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

(கற்பகவல்லி) (ஆனந்த பைரவி)
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

(கற்பகவல்லி) (கல்யாணி)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாசிகள் வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

(கற்பகவல்லி) (பாகேஸ்ரீ)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே உன் சேய் நான்………
லோகேஸ்வரி நீயே உலகினில் நீ துணையம்மா

(கற்பகவல்லி) (ரஞ்சனி)
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா

கீரவாணி

தமிழ் இசைமரபில் இந்த ராகம் 21வது மேளகர்த்தா இராகம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு மூர்ச்சனாராகம். அதாவது இந்த ராகத்திலிருந்து புதிய ராகங்கள் பிறக்கும் என்பதாகும்.

இதிலிருந்து பிறந்த ராகங்களாக சிம்மேந்திரமத்திமம்,  வகுளாபரணம்,  ஹேமாவதி, கல்யாண வசந்தம் போன்ற ராகங்கள் கருதப்படுகின்றன.

விரிவான ஆலாபனைக்கு இடம் அளிக்கும் இராகமாகவும் இது திகழ்வதால் கர்னாடக இசையிலும் அதிகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழ் செவ்வியல் இசை வளத்துக்கு மற்றுமொரு பெருஞ்செல்வம் இதுவாகும். பழம்பெரும் இராகங்களில் இன்றும் நிலைபெற்று பயன்பாட்டில் இருந்துவருகிறது.

ஆரோகணம் – ச ரி2 க2 ம1 ப த1 நி3 ச்
அவரோகணம் – ச் நி3 த1 ப ம1 க2 ரி2 ச

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

கீரவாணியின் சேய் இராகங்கள்
குலபூஷணி, சாமந்தசாளவி, கல்யாணவசந்தம், நாகதீபரம், ரிஷிப்பிரியா, உகவாணி, சந்திரிகா, சிவிகா, பானுப்பிரியா, ஸ்ரோத்தஸ்வினி, கதரம்.

தொடர் - 75கீரவாணி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

பாடல் : சமரசம் உலாவும் இடமே…..
படம் : ரம்பையின் காதல் 1957
பாடியவர் : சீர்காழி S கோவிந்தராஜன்
இசை : T R பாப்பா

பாடல் : ஒ..ரசிக்கும் சீமானே வா…..
படம் : பராசக்தி (1951)
பாடியவர் : M S ராஜேஸ்வரி
இசை : R சுதர்சனம்

பாடல் : பாட்டுப் பாட வா…..
படம் : தேன்நிலவு (1961)
பாடியவர் : A M ராஜா
இசை : A M ராஜா

பாடல் : போனால் போகட்டும் போடா…..
படம் : பாலும் பழமும் (1961)
பாடியவர் : TMS
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : காதோடு தான் நான் பாடுவேன்…..
படம் : வெள்ளி விழா (1972)
பாடியவர் : L R ஈஸ்வரி
இசை : V குமார்

பாடல் : மன்னவனே அழலாமா…..
படம் : கற்பகம் 1964
பாடியவர் : சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் : கண்ணாளனே எனது கண்ணை…..
படம் : பம்பாய் 1993
பாடியவர் : சித்ரா
இசை : A R ரகுமான்

பாடல் : எங்கே எனது கவிதை…..
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடியவர்கள் : சித்ரா, ஸ்ரீநிவாஸ்
இசை : A R ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து

பாடல் : எவனோ ஒருவன்…..
படம் அலைபாயுதே
பாடியவர் : ஸ்வர்ணலதா
இசை : A R ரஹ்மான்

இளையராஜாவும் கீரவாணியும் 
ஒரே ராகத்தில் இத்தனை பாடல்களா எனப் பிரமிக்க வைக்கும் பாடல்களை அதிக எண்ணிக்கையில் தந்திருக்கிறார்.

பாடல் : காற்றில் எந்தன் கீதம்…..
படம் : ஜானி (1980)
பாடியவர் : எஸ்.ஜானகி

பாடல் : மண்ணில் இந்த காதலன்றி…..
படம் : கேளடி கண்மணி
பாடியவர் : SPB

பாடல் : தங்கச் சங்கிலி…..
படம் : தூறல் நின்று போச்சு (1982)
பாடியவர் : மலேசியா வாசுதேவன், S ஜானகி

பாடல் : மலையோரம் வீசும் காற்று…..
படம் : பாடுநிலாவே (1980)
பாடியவர்கள் : SPB, சித்ரா

பாடல் : நெஞ்சுக்குள்ளே….
படம் : பொன்னுமணி
பாடியவர்கள் : SPB, S ஜானகி

பாடல் : போவோமா ஊர்கோலம்…..
படம் : சின்னத்தம்பி
பாடியவர்கள் : SPB, சுவர்ணலதா

பாடல் : பாடிப்பறந்த கிளி…..
படம் : கிழக்கு வாசல்
பாடியவர் : SPB

பாடல் : உன்னே நினச்சே பாட்டு படிச்சேன்…..
படம் : அபூர்வ சகோதரர்கள்
பாடியவர் : SPB

பாடல் : மன்றம் வந்த தென்றலுக்கு…..
படம் : மௌனராகம்
பாடியவர் : SPB

பாடல் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…..
படம் : வருஷம் 16
பாடியவர் : P சுசீலா

பாடல் : தெய்வீக ராகம்…..
படம் : உல்லாசப்பறவைகள்
பாடியவர் : ஜென்சி

பாடல் : ராஜராஜ சோழன் நான்…..
படம் : ரெட்டை வால் குருவி
பாடியவர் : K J யேசுதாஸ்

பாடல் : பூவே செம் பூவே…..
படம் : சொல்லத் துடிக்குது மனசு
பாடியவர் : K J யேசுதாஸ்
இசை : இளையராஜா

பாடல் : நிலா அது வானத்து மேலே……
படம் : நாயகன்
பாடியவர்கள் : இளையராஜா, சித்ரா

பாடல் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…..
படம் : ஈரமான ரோஜாவே
பாடியவர்கள் : K J யேசுதாஸ், எஸ்.ஜானகி

பாடல் : சின்னமணிக் குயிலே…..
படம் : அம்மன் கோயில் கிழக்காலே
பாடியவர் : SPB

பாடல் : என்னைத் தாலாட்ட வருவாளா…..
படம் : காதலுக்கு மரியாதை
பாடியவர்கள் : ஹரிகரன், பவதாரணி

பாடல் : ராசாத்தி மனசிலே…..
படம் : ராசாவே உன்ன நம்பி
பாடியவர்கள் : மனோ, P சுசீலா

பாடல் : நடந்தால் இரண்டடி…..
படம் : செம்பருத்தி
பாடியவர் : SPB

பாடல் : இந்த மாமனோட மனசு…..
படம் : உத்தமராசா
பாடியவர்கள் : SPB, ஜானகி

பாடல் : உன் குற்றமா என் குற்றமா…..
படம் : அழகி
பாடியவர் : இளையராஜா

பாடல் : ஒளியிலே தெரிவது…..
படம் : அழகி
பாடியவர்கள் : கார்த்தி, பவதாரணி

கீரவாணி இராகத்தில் இசைஞானி ஏறக்குறைய அறுபது பாடல்களுக்கு மேல் தந்திருக்கின்றார்.

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர்  69 – 75
சிறீ சிறீஸ்கந்தராஜா
29/05/2015 – 10/07/2015

தொகுப்பு – thamil.co.uk