இரும்புச்சத்து நிறைந்த புளிச்சகீரை

புளிச்சக்கீரைதமிழ்நாட்டில் புளிச்ச கீரை Hibiscus cannabinus என்றும் ஆந்திரா மக்களால் கோங்குரா என்றும் அழைக்கப்படும் இந்த கீரை பெயரைப் போலவே புளிப்புத்தன்மை உடையது. இதில் விட்டமின் சத்துக்களுடன் இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியபிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புளிச்சகீரை அதிக அளவில் நார்களுக்காக பயிரிடப்படுகிறது. புளிச்சகீரையின் இலைகள், மலர்கள் மற்றும் விதைகள் உள்ளிட்டவை மருத்துவ பயன் உடையவை.

புளிச்சகீரை செடியின் மலர்களில் இருந்து கன்னாபினிடின், கன்னாபிஸ்சிட்ரின், கன்னாபின்னின், ஆகியவை எடுக்கப்படுகின்றன. கரிம அமிலங்களான லினோலியிக் ஒலியிக், பால்மிடிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன. இலைகளில் ப்ரக்டோஸ், குளுக்கோஸ், மானேஸ் சர்க்கரைகளும், லிக்னோசெரிக், வனிலிக், சிரோடிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன. உடலை வலுவாக்கும் விட்டமின் மற்றும் இரும்புசத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சத்து குறைவினால் நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்த கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர அவர்களின் உடல் புஷ்டியாகும்.

வாத நோய்களை குணமாக்கும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு. சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை சட்னியாக செய்து சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்கள் குணமடையும். ஆந்திராவில் கோங்குரா சட்னி மற்றும் கோங்குரா ஊறுகாய் பிரசித்தி பெற்றது. இந்த கீரையின் மகத்துவம் உணர்ந்த ஆந்திரா மக்கள் இதனை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

புளிச்சக்கீரை..இலைகள் வயிற்றுப்போக்கை தூண்டும். கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகைச் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமடையும்.

விதைகள் பால் உணர்வு தூண்டுகின்றன.

காகாசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும்.

புளிச்சகீரை உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அதனால்தான் இந்த கீரையை உடலையும் குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர்.

இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது. இரவில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் சீரண சக்தி குறைந்து செரிமானம் பாதிக்கப்படும். இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர்ந்து பெரும்பாலோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.

-tamil.boldsky.com

தொகுப்பு – thamil.co.uk