வெங்காயத்தாள்

scallionநம்மில் பெரும்பாலோர் வெங்காயத்தாளை வாசனைக்காகவும், சுவையை மெருகூட்டவுமே உணவில் பயன்படுத்துகிறோம். சத்துள்ள கீரைகள் என்ற பட்டியலில் வெங்காயத்தாளை யாரும் இணைப்பது மிக அரிது. ஆனால் அதையும் தாண்டி வெங்காயத் தாளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும் சீன உணவுகளில் வெங்காயத்தாள் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.

Botanical name : Allium fistulosum
common name : Scallion

மேலும் வெங்காயத்தாளில் விட்டமின் C, விட்டமின் B2 மற்றும் தயமின் உட்பட பல விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் விட்டமின் A மற்றும் விட்டமின் K கூட நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பொஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாள் quercetin க்யூயர்சிடின் போன்ற flavonoide பிளேவோனாய்டுகளுக்கு ஒரு வலுவான ஆதாரமாக இருக்கின்றது.

green onionவெங்காயத்தாளின் பக்டீரிய எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது. இந்த காய்கறிகளிலுள்ள விட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது. இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், தடிமன் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.

வெங்காயப்பூவெங்காயப் பூ  மருத்துவ குணங்கள் – http://thamil.co.uk/?p=2301

சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும்.

வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.

கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.

பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.

வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.

குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.

-vanakkammalaysia.com

தொகுப்பு – thamil.co.uk