பீட்ரூட்

பீட்ரூட் கீரைகண்களுக்கு பயன்தரும் பீட்ரூட் கீரை

அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர். சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன

பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயறுகளுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.

பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் விட்டமின் A சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை விட்டமின் Aயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் விட்டமின் A நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.

பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், விட்டமின் C போன்றவை அதிகம் உள்ளது.

பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.

உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். விட்டமின் A அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

-puthumanaikpm.blogspot

பீட்ரூட்.thamil.co.uk

பீட்ரூட்டின் மகிமை

வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் மிக முக்கியமான பீட்ரூட்டின் மகிமையைப் பற்றி நம் அம்மாக்களும், பாட்டிகளும் வாய் ஓயாமல் பேசுவதை நாம் கேட்டிருப்போம். வேரிலிருந்து கிடைக்கும் இந்த கருஞ்சிவப்பு வண்ண காயானது, பெரும்பாலான இந்திய வீடுகளில் இரத்தசோகைக்கு உகந்த, பிரசித்தி பெற்ற மாற்று மருந்தாகத் திகழ்கிறது.

ரோமானியர்கள் தங்கள் இல்லற நலத்தை பேண இதனை நம்பி இருப்பது தொடங்கி, இந்தியர்கள் இதனை இரத்த சோகை மற்றும் உடல் அயர்ச்சி போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு உபயோகிப்பது வரையிலான பல்வேறு நலன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது பீட்ரூட். மக்களுள் ஒரு சாரார் இதனை மிகவும் விரும்புபவராகவும், மற்றொரு சாரார் இதனை அறவே வெறுப்பவராகவும் காணப்படுகின்றனர். இதற்கு காரணம், அதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றி தெரியாமல் இருப்பதே ஆகும்.

உண்மையில் இதன் நன்மைகளை நன்கு தெரிந்திருந்தால், நிச்சயம் இதனை உணவில் சேர்ப்பார்கள். எனவே நீங்கள் பீட்ரூட் அபிமானியாக இருந்தாலும் சரி, இல்லை அதன் மகிமையைப் பற்றி அறிந்திடாதவராக இருந்தாலும் சரி, இதனை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டியதற்கான காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் படித்து தெரிந்து, இனிமேலாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் ஆகியவற்றை அபரிமிதமான அளவுகளில் கொண்டிருப்பதாக அறியப்படுவதாகும். பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. இது எல்டிஎல் கொழுப்பின் ஆக்ஸிடேஷனுக்கு உதவுவதோடு, இரத்த நாளங்களின் சுவர்களில் அது படியாமல் தடுக்கவும் செய்கிறது. இதனால் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாத்து, மருத்துவ சிகிச்சைக்கான தேவையைக் குறைக்கவும் உதவுகிறது.

பீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும். ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக்குழந்தையைப் பாதுகாக்க வல்லது. அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம். மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும்.

பீட்ரூட்டில் நிரம்பியுள்ள சிலிகா, உடல் தனக்குத் தேவையான கால்சியம் சத்தை சிறப்பாக உபயோகித்துக் கொள்ள உதவும் மிக அவசியமான ஒரு தாதுப்பொருளாகும். பொதுவாக எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. எனவே, தினந்தோறும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாற்றை பருகி வந்தால், எலும்புருக்கி மற்றும் எலும்புச் சிதைவு நோய்களை அண்ட விடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் அனைவரும், தங்களின் இனிப்பு சாப்பிடும் வேட்கையை, சிறிது பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் தணித்துக் கொள்ளலாம்.

இது கொழுப்புச்சத்து அற்றதாக, குறைவான மாவுச்சத்துடன் கூடியதாக, நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸைக் கொண்டதாக இருப்பினும், இதில் சர்க்கரை சத்து இருப்பதனால், மருத்துவர்கள் இதனை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறார்கள். நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸ் என்றால், அது சர்க்கரைச் சத்தை மிக மெதுவாகவே இரத்தத்திற்குள் விடுவிக்கும் என்று அர்த்தம். பீட்ரூட்டின் இந்த அம்சமானது, ஒருவரின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைவாக வைத்திருக்க உதவுவதோடு, அவரது இனிப்பு சாப்பிடும் வேட்கையையும் தணித்துக் கொள்ள உதவுகிறது.

பீட்ரூட் கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதால், அது இழந்த இரத்தத்தை மீட்க உதவும்; அதனால் இது இரத்தசோகைக்கு மிகவும் நல்லது என்றொரு மூட நம்பிக்கை உலவி வருகிறது. பலருக்கு இது நகைப்புக்குரிய விஷயமாகத் தோன்றினாலும், இந்த மூட நம்பிக்கையில் ஒரு பாதி உண்மையே உள்ளது. பீட்ரூட்டில் அபரிமிதமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவக்கூடியதான ஹீமோக்ளூட்டினின் என்ற திரவத்தின் உருவாக்கத்துக்கு உதவக்கூடியதாகும். இரத்தசோகையை குணமாக்க உதவுவது பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து தானேயொழிய அதன் நிறமல்ல.

அமெரிக்க சர்க்கரை நோயாளிகள் சங்கத்தின் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், பீட்ரூட் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவக்கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நைட்ரேட் உட்பொருள், ஒருவரின் இரத்த நாளங்களை விரிவாக்கி, பிராணவாயு உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான முறையில் சென்றடைய உதவி புரிந்து, அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பீட்ரூட்டில் இரும்புச் சத்து செறிந்திருப்பதால், அது ஒருவரின் சகிக்கும் தன்மையை மேம்படுத்துவதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது.

மூலம் எதுவாக இருப்பினும், வேலைப்பளுவினால் சோர்வடைந்த ஒரு நாளின் முடிவில், அதனை போக்கக்கூடிய உணவே ஒருவரின் தேவையாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. “இயற்கையான வயாக்ரா” என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதே செயல்பாட்டைத் தான் வயாக்ரா போன்ற மருந்துகள் நகலெடுத்துள்ளன.

மனித உடலில் பாலியலைத் தூண்டும் ஹார்மோனின் சுரப்புக்கு மிக முக்கியமானதான போரான் என்ற வேதியியல் கூறு, பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது என்பது மற்றொரு அறிவியல் உண்மையாகும். எனவே அடுத்த முறை, நீல நிற மாத்திரைகளை தூக்கி எறிந்து விட்டு, அதற்கு பதிலாக கொஞ்சம் பீட்ரூட் சாற்றைப் பருகுங்கள்.

பீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது.

பீட்ரூட், எளிதில் கரையும் தன்மையாலான நார்ச்சத்துடன் கூடிய உட்பொருளைக் கொண்டிருப்பதனால், இது மிகச்சிறந்த மலமிளக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. அதிலும் இது பெருங்குடலை சுத்தமாக்கி, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி, மலங்கழிப்பை சீராக்கும். கே.வில் உள்ள எக்ஸீடர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், நைட்ரேட் உட்பொருள் அதிக அளவில் இருக்கக்கூடிய பீட்ரூட் சாற்றை பருகுபவரின் சகிக்கும் தன்மையானது சுமார் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

உடல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிராணவாயுவை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக அறியப்படும் பீட்ரூட், இந்த ஒரு அம்சத்தைக் கொண்டே மூளையின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, மறதி நோயையும் குணமாக்கக் கூடியதாகும். நைட்ரேட், நைட்ரைட்டாக மாற்றப்படும் போது, அது நரம்புகளில் ஏற்படக்கூடிய அலைகளைத் தூண்டி, அவற்றை சீரான முறையில் பரப்புவதன் மூலம் மூளையை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கல்சியம் 18 மில்லி கிராமும், பொஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இரும்பு 10 மில்லிகிராமும், விட்டசின் C 10 மில்லிகிராமும் மற்றும் விட்டமின் A மற்றும் B1, B2, B6 நியாசின் விட்டமின் B ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்தியேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

-சரவணா ஸ்ரீ

 

பீட்ரூட்-thamil.co.ukபீட்ரூட் உடல்நல நன்மைகள்

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். பீட்ரூட்டில் உள்ள காபோவைதரேற்று சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. பீட்ரூட்  மாச்சத்து அதிகம் உள்ளது.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், விட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

* இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.

* முகப்பொலிவு கூடும்.

* தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

* பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

* பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

* பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

* பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் (அல்சர்) குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* கல்லீரல் கோளாறுகளுக்கும்,   பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்து.

* மாதக்கணக்கில் மலச்சிக்கல் மூலக்கோளாறு என அவதிப்படுபவர்கள் பீட்ரூட் சாறோடு தண்ணி சேர்த்து இரவில் தூங்கமுன் குடித்து வந்தால் குணம் கிடைக்கும்.

* புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

* தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

* பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

* சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது.  சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.

* தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும், தலையில் அதிக முடி முளைக்கும்.

தொகுப்பு – thamil.co.uk