சப்போட்டா பழம்

சப்போட்டா பழம்-thamil.co.ukநம்மில் பலருக்கும் சாப்பிடுவதற்கு ஆர்வத்தைத் தூண்டாத பழங்களில் சப்போட்டாவும் ஒன்று. ஆனால் இனிப்பான, சதைப்பற்று கொண்ட இந்தப் பழம் உடல்நலனுக்கு ரொம்பவும் நல்லது. சிலருக்குச் சப்போட்டா பழத்தை மட்டும் தனியாகச் சாப்பிடுவதற்குப் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் சிறிதளவு வாழைப்பழம், மாம்பழத்துடன் சேர்த்துச் சப்போட்டாவைச் சாப்பிடுவதன் மூலம் முக்கனிகளின் சத்தையும் ஒருங்கே பெறமுடியும். சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிகம், விட்டமின் A, C யும்,  இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது.

கண்களுக்கு நல்லது:
சப்போட்டா பழம் விட்டமின் A வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிபடி விட்டமின் A வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

இதய பாதுகாப்பு
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

இரத்த இழப்பை ஈடுகட்டவும் சப்போட்டா உதவும். சப்போட்டாவைப் பழரசமாகவோ அல்லது சாலட்டாகவோ சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

ஆற்றலை வழங்கக்கூடியது
நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம். ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு
விட்டமின் A மற்றும்B யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது வாய்குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க விட்டமின் A வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

எலும்பை உறுதிப்படுத்தும்
எலும்பை பலப்படுத்த தேவையான கல்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்
சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பித்தம் நீக்க 
சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம். இதில் கல்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். பித்த மயக்கம், சோர்வு, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

சப்போட்டா இலைகள் நம் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்துக் காயங்களைக் குணப்படுத்தும்.

சப்போட்டாவின் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் பொருமல், வலி போன்ற உபாதைகள் நீங்கும்.

உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் நாள்தோறும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் கரையும் என்கின்றனர் நிபுணர்கள்.

வயிற்றில் நாள்பட்ட புண், குடல் புண் போன்ற உபாதைகளால் சிரமப்படுபவர்கள் சப்போட்டா சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.

சப்போட்டாவுடன் சிறிது பால் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உடல்சூடு பிரச்சினையைச் சரிசெய்யலாம். தூக்கக் கோளாறு பிரச்சினைகளுக்கும் சப்போட்டா பழம் பயனளிக்கும்.