ப்ராக்கோலி /பச்சைப் பூக்கோவா

ப்ராக்கோலிபச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி Brocoli, முட்டைக்கோவா வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது. அதேபோல் அது நமக்கு அளிக்கும் நன்மைகளும் மிகவும் அதிகமாகும்.

ஆரோக்கியமான நன்மைகள்

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

ப்ராக்கோலியில் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.

ப்ராக்கோலியில் கல்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கல்சியம் நல்லது.

ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் ஆகியவை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவையாகும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

ப்ராக்கோலியில் உள்ள விட்டமின் C, விட்டமின் K மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை அதிகரிக்க உதவுகின்றன. ஞாபகசக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை உதவுகின்றன.

பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ராக்கோலி மிகவும் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் ஆகியவை தான் அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன.

ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களுக்குப் பகைவனாக உள்ளது. எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகும்; தோல் பளபளப்பாகும்.

பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

-tamil.boldsky.com

தொகுப்பு – thamil.co.uk