குப்பை கீரை

குப்பை கீரை

குப்பை கீரை செடி வகையை சேர்ந்தது. தானாக ஆங்காங்கே குப்பை மேடுகளிலும், தரிசு நிலங்களிலும் தானாக வளரும் தன்மையுடையது. வயல் வரப்புகளில் , சாலை ஓரங்களில் இக்கீரையை கானலாம். குப்பை இருக்கும் இடங்களில் இக்கீரை செழித்து வளர்வதால் இதனை குப்பை கீரை என்று அழைக்கிறார்கள். இது 30 முதல் 60 செ.மீ  உயரம் வளரக்கூடியது. பக்க கிளைகளைவிட்டு வளரும் தன்மையைக் கொண்டது . இதன் தண்டு பச்சை அல்லது சிவப்பு நிறமாயிருக்கும்  செடியில் என்னமுடியாத அளவிற்கு உற்பத்தியாகும்.

குப்பை கீரை சாம்பல் நிறத்தில் இருக்கும். குப்பை கீரையில் வெளிறிய சிவப்பு நிறத்தில் பூக்கள் இருக்கும். குப்பை கீரை பார்ப்பதற்கு தண்டு கீரை போல் இருக்கும் ஆனால் அக்கீரையை போல் பசுமையாக இருக்காது. குப்பை கீரையை வீட்டினில் பயிரிடலாம். இதன் இலைகளை பறித்துக் கீரையாக சமைத்துண்ணலாம். இது இந்தியாவில் எப்பகுதியிலும் சாதாரணமாக கிடைக்கும் கீரையாகும் . இதன் தாவரப் பெயர் அமராந்தஸ் விரிடிஸ் ஆகும்

மருத்துவ பயன்கள்

குப்பை கீரையில் கல்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, விட்டமின் C ஆகிய சத்துகள் அதிகமாக உள்ளன.  இக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

இக்கீரை உடலுக்கு உரந்தரும் . உடலைக் கொழுக்கச் செய்வதுடன் மேனிக்கு அழகையும் அதிகரிக்கும். உடல் சூட்டைத் தணிக்கும்

 பசி உண்டாக்கும்.

சிறுநீர் பெருக்கும்.

கைகால்  நடுக்கம் , வாதநோய் ஆகியவற்றிற்கும் உதவும்.

இக்கீரையை அரைத்து வீக்கம் , கட்டி ஆகியவற்றின் மீது கட்டி வர கரைந்து குணமாகும் . இச்செடியின் வேரை உலர்த்திச் சுட்டுச் சாம்பலாக்கி கட்டிகளுக்கு வைத்துக்  கட்ட சீழ் வெளியாகி புண் குணமாகும்.

குப்பை கீரையில் நார்சத்து அதிகமாக உள்ளது. எனவே இக்கீரையை மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்லது. இக்கீரையுடன் பருப்பை சேர்த்து கடைந்துண்ண  சுவையாக இருக்கும்.

குப்பை கீரையை பசுக்களுக்கு கொடுத்தல் பால் அதிகமாக சுரக்கும்.

 -உடல் நலம் காப்போம்

தொகுப்பு – thamil.co.uk