புகை நமக்கு பகை

புகை நமக்கு பகை-thamil.co.ukபுகை நமக்கு பகை: (சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்)

நம் உடல் உறுப்புகள் உடலின் இயக்கத்திற்கான வேலைகளை தனித்தனியாக செய்தாலும் கூட அவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டே இயங்குகின்றன. உடல் உறுப்புகளின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவைகள் யாவும் இணைந்து உயிர்காக்கும் கூட்டுமுயற்சியில் தான் இயங்குகின்றன. ஒரு உறுப்பு செயலிழந்தால் அது தொடர்பான மற்ற உறுப்புகளும், பின் மற்ற உறுப்புகளும் செயலிழக்க தொடங்கும். இதுதான் உடலின் அடிப்படை தத்துவம்.

சிகரெட் அட்டையில் எழுதி இருக்கும் தார், நிக்கோடின், மற்றும் கார்பன் மோனாக்சைடு (co) போன்ற நச்சுப்பொருட்கள் சுவாச மண்டலத்தின் வழியாக நுரையீரலில் படிந்து புற்றுநோய் உள்ளிட்ட பல வியாதிகளை அள்ளிக்கொடுத்தாலும், அவைகளோடு மட்டும் விட்டு விடாமல் இன்னும் பற்பல சிறப்பு பரிசுகளையும் போனஸாக தருகிறது.

இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காசநோய், பக்கவாதம் (Stroke) உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வியாதிகளுடன் இரத்தப்புற்றுநோய் (Blood Cancer), நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer), கழுத்து புற்றுநோய் (Neck Cancer), சிறுநீரக மற்றும் சிறு நீர்ப்பை புற்றுநோய் (Kidney & Urinary Bladder cancer) என விதவிதமான புற்றுநோயையும் தருகிறது.

நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் புகைப்பவர்களுக்கு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் மனோரீதியான பாதிப்புகளையும், தாம்பத்திய வாழ்வில் சிக்கலையும் உருவாக்கி நிம்மதி இழந்து மன உளைச்சலால் தற்கொலைவரை இழுத்து செல்லும். இது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. ஆனாலும் புகை பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாயில்லை.

சிகரெட்-thamil.co.ukசிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் வர மிக மிக முக்கிய காரணம் புகைதான். எல்லாம் தெரிந்தும் பலர் புகைப்பதை கெளரவமாகவும், கம்பீரமாகவும் கருதுகிறார்கள். தவணை முறையில் தற்கொலை செய்துகொள்ள எப்படி இவர்கள் சந்தோஷமாய் சம்மதிக்கிறார்கள்.

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதற்கு அடிமையாக்கிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பழக்கம் பல பேருடைய டென்ஷன் மற்றும் அழுத்தத்தை நீக்க உதவுகிறது. இந்த பழக்கத்தை கைவிட நினைத்த பல பேர், இதற்கு மாற்று பொருளாக நிக்கோட்டின் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். வெகு சிலராலேயே இந்த பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த முடிகிறது.

புகைப்பிடிப்பதை கைவிடுவதனால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் 

இரத்த அழுத்தம் 
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதனால், உடலுக்கு உடனடி நன்மைகள் முதல் நீண்ட கால நன்மைகள் வரை பல கிடைக்கும். அதில் முதன்மையானது, அதிகமாக உள்ள இரத்த அழுத்தம் 20 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஆக்ஸிஜன் சீராகும் 
இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு மெதுவாக குறைந்து, 8 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு சீராக மாறிவிடும்.

சுவை மற்றும் மனம் திரும்பும் 
2 நாட்களில் உடம்பில் பரவியுள்ள நிக்கோட்டின் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் பொருட்களின் மீதான சுவை மற்றும் மனம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஆக்கத்திறன் அதிகரிக்கும் 
4 நாட்களில் உடலில் உள்ள மூச்சு குழாய்கள் அனைத்தும் அமைதியாகி, ஆக்கத் திறனை அதிகரிக்கும்.

இரத்த ஓட்டம் சீராகும் 
2 வாரங்களில் இரத்த ஓட்டம் முன்னேறி, அடுத்த 10 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

சுவாசக் கோளாறுகள் நீங்கும் 
9 மாதங்களில் அனைத்து சுவாசக் கோளாறுகளும் சரி ஆகும். மேலும் சுவாசப்பையின் கொள்ளளவு 10% அதிகரிக்கும்.

இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும் :-
5 வருடங்களில் இதயமும், நுரையீரலும் புகைப்பிடிக்காதவரை போலவே இயங்கத் தொடங்கிவிடும். அதனால் நெஞ்சு வலி மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

செரிமான மாறுதல்கள் 
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், அசிடிட்டி, செரிமானமின்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். மேலும் வயிற்றுப் பொருமல், லேசான வயிற்று போக்கு, மலச்சிக்கல் மற்றும் குமட்டலும் ஏற்படும்.

சுவாச மாறுதல் 
தீய நஞ்சுத் தன்மையால் உடல் இனி மாசுபடாததால், சுவாச அமைப்பு மீண்டும் மீளவுயிர்ப்பிக்கும். இது சைனஸ், சளி, தொண்டை புகைச்சல் மற்றும் தொண்டை கட்டுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் மாறுதல்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இனி இதயம் வேகமாக துடிக்க தேவையில்லை. இயல்பான இரத்த ஓட்டமாக மாறும் போது, விரல்களில் சிலிர்ப்பு, தலைச்சுற்று, தசை இறுக்கம் மற்றும் நீர் தேங்குதல் போன்ற பக்க விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும்.

மனநிலை மாறுதல் 
இரத்த நாளங்கள் சம்பந்தமான தொகுப்புகளை சுருங்கச் செய்யும் தன்மையை கொண்டவை நிக்கோட்டின். அதனால் இதயம் இயல்பு நிலையை விட, அதிகமாக துடிக்க வேண்டியிருப்பதால், அது வலுவிழந்து போகும். மேலும் புகைப்பழக்கத்தை கைவிடுவதால், இப்போது இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்று ஏற்படும்.

தூக்க மாறுதல் 
தூங்கும் முறையில் கூட மாற்றங்களை காணலாம். லேசாக கண் அயரும் நேரத்தில் கண் அசைவு இருந்து கொண்டே இருக்கும். மேலும் கெட்ட கனவுகளும் வந்து கொண்டே இருக்கும். மன அழுத்தத்தை நீக்கும் புகைப்பழக்கத்தை நீங்கள் கைவிடுவதால், பகலில் ஏற்படும் டென்ஷன் மற்றும் பிரச்சனைகளை இவ்வகை கனவுகள் தான் கையாளும். அதனால் சிறிது எரிச்சலும் கூட ஏற்படும்.

குறிப்பு
முடிவில், இதையெல்லாம் தாண்டி இந்த பழக்கத்தை கைவிட்டால், அது உங்கள் உயிரை காக்க போவது உறுதி. இந்த பழக்கத்தை கைவிட்டால், அந்த மாற்றத்தை உடல் ஏற்றுக்கொள்ள சிறிது காலம் பிடிக்கும். ஆனால் அதனால் கிடைக்க போகும் பயன்களை எண்ணும் போது இவை எல்லாம் துட்சமே.

FB arthikeyan Mathan , அக்குபஞ்சர் அறிவோம்