ஆதொண்டை கீரையின் மருத்துவ குணங்கள்

ஆதொண்டைஆதொண்டை கீரைஆதொண்டைகீரை

மூலிகையின் பெயர் : ஆதொண்டை கீரை
Botanical name : CAPPARIS HORRIDA
common name : Tarati, Wagoti

ஆதொண்டை கீரை CAPPARIS HORRIDA முள்ளுள்ள ஏறுகொடி வகையைச் சேர்ந்தது. தடிப்பான தனியிலைகளை கொண்டது. துளிர் விடும்பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். செந்நிறப் பூக்களையும் சதைக்கனியையும் கொண்டது. காய்கள் சமைத்து உண்ணக் கூடியவை. இக்கீரைக் கொடி வேலிகளில் படர்ந்து வளரும் தன்மையுடயது. இதன் காய்கள் இதன் இலை வடிவிலேயே இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம். இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மருத்துவப் பயன்கள்
இக்கீரையில் கல்சியம்,பொஸ்பரஸ், விட்டமின் B, C ஆகியவை உள்ளன.

நோய் நீக்கி உடல் தேற்றவும் பசி மிகுக்கவும் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பந் தரவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இலையை நெய்யில் வதக்கித் துவையலாக்கி உணவுடன் கொள்ளச் சுவையின்மை, பசியின்மை நீங்கி பசியுண்டாகும்.

50 கிராம் வேர்ப்பட்டை நன்கு சிதைத்து 1 லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி. ஆகக் காய்ச்சி வடித்து 3 பங்காக்கிக் காலை மதியம் மாலையாக சாப்பிட்டு வரப் பசியின்மை, வாந்தி, மார்பு வலி ஆகியவை தீரும்.

ஆதொண்டை கீரை வாதநோய் மற்றும் ஒற்றை தலைவலியுடன் கூடிய மூக்கடைப்பு ஆகிய நோய்களை விரைவில் குணப்படுத்தும். “ஆதொண்டை கீரை தலைவலி ஆற்றுமே” என்பது சித்தர் வாக்கு.

சீரணக் கோளாறுகளை சீர் செய்யும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.

ஆதொண்டை கீரை நன்மை மிக்க கீரை….!

-manakkalayyampetai
-udalnalamkappom

தொகுப்பு -thamil.co.uk