உணவை எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது

சம்மணம்

செவிவழி தொடு சிகிச்சை மூலமாக பலன்பெற்ற கோவையை சார்ந்த தர்மராஜா கோவில் வீதியில் ‘தில்லை யோகாலயம்’ நடத்தும் பரதநாட்டிய வாத்தியாரான திரு. ழு. செல்வமணி அய்யா அவர்கள் எழுதிய சில முத்துக்கள்.

1. அகோரப் பசியுடன் வேகமாகச் சாப்பிடக் கூடாது.
2. அசுத்தமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
3. அஜீரணக் கோளாறின் போது கடும் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
4. அசைவ உணவாகவே சாப்பிடக் கூடாது.
5. அசௌகரியமான நிலையில் சாப்பிடக் கூடாது.

6. அச்சத்துடன் சாப்பிடக் கூடாது.
7. அடுப்பு எரியும் இடத்தில் உணவைச் சாப்பிடக் கூடாது.
8. அதிகாரத்தில் உணவுகளை சாப்பிடக் கூடாது.
9. அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடக் கூடாது.
10. அதிகமான ருசியை வாயில் போட்டவுடன் விழுங்கக் கூடாது.

11. அதிர்ச்சியில் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
12. அதிருப்தியாக உணவைச் சாப்பிடக் கூடாது.
13. அநாகரீகமான இடத்தில் சாப்பிடக் கூடாது.
14. அமைதி இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது.
15. அம்மா பரிமாறிக் கொண்டே சாப்பிடக் கூடாது.

16. அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
17. அலட்சியத்துடன் உணவைச் சாப்பிடக் கூடாது.
18. அழுகிய உணவுகள் சாப்பிடக் கூடாது.
19. அழுது கொண்டு உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
20. அறியாத உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

21. அன்போடு பறிமாறாத போது சாப்பிடக் கூடாது.
22. அகலக் கால் விரித்துச் சாப்பிடக் கூடாது.
23. அனல் பறக்க சாப்பிடக் கூடாது.
24. அமுதாயினும் அளவின்றி சாப்பிடக் கூடாது.
25. அயர்ந்து உறங்கும் வேளை சாப்பிடக் கூடாது.

26. அறுசுவை உணவில்லாமல் சாப்பிடக் கூடாது.
27. ஆடம்பரமாக சாப்பிடக் கூடாது.
28. ஆர்வமின்றி உணவைச் சாப்பிடக் கூடாது.
29. கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு சாப்பிடக் கூடாது.
30. காய்ந்து போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

31. காரசாரமான பேச்சின்போது சாப்பிடக்கூடாது.
32. காய்ச்சலின்போது கடும் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
33. சாதனைக்காக உணவைச் சாப்பிடக் கூடாது.
34. காசுக்காக சாப்பிடக் கூடாது.
35. காலைக் கடன் கழிக்காமல் காலை உணவைச் சாப்பிடக் கூடாது.

36. வாயைத் திறந்து கொண்டே சாப்பிடக் கூடாது.
37. வாயைச் சுத்தம் செய்யாமல் சாப்பிடக் கூடாது.
38. இருட்டில் உணவைச் சாப்பிடக் கூடாது.
39. கிடைக்குதே என்று எல்லா உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
40. சிந்தனை உணவின் மீதில்லாமல் சாப்பிடக் கூடாது.

41. நின்று கொண்டு உணவைச் சாப்பிடக் கூடாது.
42. விருப்பமில்லாத உணவைச் சாப்பிடக் கூடாது.
43. இறைவனைத் துதிக்காமல் (பிரார்த்தனை) உணவைச் சாப்பிடக் கூடாது.
44. ஈ மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
45. சீக்கிரம், சீக்கிரமாகச் சாப்பிடக் கூடாது.

46. நீர் அருந்தியவுடன் சாப்பிடக் கூடாது.
47. வீணாகி விடக்கூடாது என்று நினைத்து உணவைச் சாப்பிடக் கூடாது.
48. ஈரத்துணி உடுத்தியவாறு உண்ணக் கூடாது.
49. உடலுக்கு தீங்கிழைப்பவை சாப்பிடக் கூடாது.
50. உடற்பயிற்சி செய்யாமல் சாப்பிடக் கூடாது.

51. உணவைச் கூழாக்காமல் சாப்பிடக் கூடாது.
52. உணவின் மீது சிந்தனை இல்லாமல் சாப்பிடக் கூடாது.
53. உமிழ் நீர் கலக்காமல் சாப்பிடக் கூடாது.
54. சுவை வாயில் குறையும் முன் சாப்பிடக் கூடாது.
55. உணவை ருசிக்காமல் உணவைச் சாப்பிடக் கூடாது.

56. உள்ளத்தில் சக்தி இல்லாத போது கடும் உணவு உண்ணக் கூடாது.
57. குளித்த உடனே உணவை உண்ணக் கூடாது.
58. முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடக் கூடாது.
59. ருசியின் அளவு தெரியாமல் சாப்பிடக் கூடாது.
60. புத்தகம் படித்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.

61. கும்மாளம் போட்டுக் கொண்டே சாப்பிடக் கூடாது.
62. சுரண்டிச் சுரண்டி உணவை உண்ணக் கூடாது.
63. துக்கத்துடன் கடும் உணவை உண்ணக் கூடாது.
64. ஊட்டம் இல்லாத உணவுகள் சாப்பிடக் கூடாது.
65. ஊரைச் சுற்றி வந்தவுடன் கடும் உணவுகள் சாப்பிடக்கூடாது.

66. சூரியன் இல்லாதபோது கடும் உணவுகள் சாப்பிடக் கூடாது.
67. தூக்கம் கெட்டால் கடும் உணவுகள் சாப்பிடக் கூடாது.
68. சூட்டோடு (அதிகம்) உடனே சாப்பிடக் கூடாது.
69. ஊஞ்சலில் ஆடியவாறு உணவை உண்ணக் கூடாது.
70. எங்கோ கவனம் வைத்து புசிக்கக் கூடாது.

71. ஏவல் புரிந்து கொண்டே சாப்பிடக் கூடாது.
72. ஏந்தியவாறும், நடந்து கொண்டும் சாப்பிடக் கூடாது.
73. கேடு தரக்ககூடிய உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
74. ஐக்கியம் இல்லாமல் சாப்பிடக் கூடாது.
75. கை, கால், முகம் கழுவாமல் சாப்பிடக் கூடாது.
76. நைந்து போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
77. உணவை வீணாக்கிச் சாப்பிடக் கூடாது.

-anatomictherapy.org