நீர் அடைப்பு, நீர்க்கடுப்பு, நீர்க்கட்டி

மனித உடலில் மணிக்கட்டில் ஏற்படும் கட்டிகள் பற்றிய தவல்கள்

இத்தகைய கட்டிகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். பொதுவாக இத்தகைய கட்டிகள் மணிக்கட்டின் பின்புறத்தில் தோன்றுவது ஆனால் சிலருக்கு முன்புறத்திலும் தோன்றலாம். சிலருக்கு கால்களின் மேல்புறத்திலும் தோன்றும், சிலருக்கு மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கணுக்காலடியிலும் தோன்றலாம். இது எவ்வகையிலும் ஆபத்தான கட்டியல்ல. இது தோலுக்கு கீழே உள்ள தோலுடன் ஒட்டிக்கொண்டிருக்காது, வழுக்கிக் கொண்டிருக்கும் நீர்கட்டி (Cyst) போன்றது அதற்குள்ளே நீரைவிட சற்று தடிப்பான ஜெலி போன்ற திரவம் இருக்கும்

எப்படி ஏற்படுகிறது
நீர் கட்டி-thamil.co.ukஇத்தகைய ஜெலி போன்ற திரவம் தான் நமது மூட்டுகளையும், தசைநார்களையும் வரட்சியடையாது வழவழப்புடன் வைத்திருந்து சுலபமாக நம் உடலை இயக்க உதவுகிறது. எப்பொழுதாவது அடிபடும்போது அல்லது தசைநாரை சுற்றிருக்கும் இத்திரவம் வெளியேறி எதாவது காரணத்தால் ஓரிடத்தில் தடைபட்டு கட்டிபோல செருவதாலேயே இது ஏற்படுகிறது. கீழே உள்ள தசைநாருடன் அல்லது எலும்புகளுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும், ஆனால் இது புற்றுநோய் போல வேறு பாகங்களுக்கு பரவாது.

சிகிச்சை:
பொதுவாக சிகிச்சை ஏதும் தேவைபடாது, சில காலம் கழித்து சிலருக்கு தானாவே மறைந்திடும்.

மருத்துவர்கள் அகன்ற துவாரம் கொண்ட ஊசி மூலம் அத்திரவத்தை அகற்றுவார்கள். ஆயினும் மிக தடிப்பான திரவமாவதால் அவ்வாறு ஊசியால் பெரும்பாலும் அகற்ற முடியாது. அவ்வாறு ஊசி மூலம் அகற்றி விட்டு அதனுள் ஸ்டிரொயிட் மருந்தை ஏற்றுவார்கள் இதனால் நீர்க்கட்டி மறைந்தாலும் சில காலம் கழித்து மீண்டும் வளரும்.

நீர் அடைப்பு, நீர்க்கடுப்பு, நீர்க்கட்டி நீங்க பாட்டி வைத்தியம்:
கொடிப்பசலைக் கீரை, கத்தரி இலை இரண்டையும் சம அளவு (ஒரு கைப்பிடி) எடுத்து கஷாயமாக்கி வடிகட்டி நான்கு சிட்டிகை வெங்காரபஸ்பத்தை கலக்கிக் குடித்தால் நீர் அடைப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

முளைக்கீரை சாற்றில் உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.

பசலைக் கீரைச் சாறில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து, அதைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

பருப்புக் கீரை சானமும் 60 மி.லி. அளவில் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

கொடிப்பசலைக் கீரைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக்கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.

முள்ளிக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவை மறையும்.

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் 
உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

காரணங்கள்
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்
* ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.

* அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

* பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:-

* கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.

* கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.

* சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.

* கால் குவளை பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.

* அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.

* சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்

* செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.

* கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.

* சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

* துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.

* அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.

சேர்க்கவேண்டியவை
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.

தவிர்க்க வேண்டியவை
துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.

-பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும் #