தானியங்கள் எதற்காக தவிடு நீக்கப்படுகிறது?

தானியங்கள்இப்படத்தை கொஞ்சம் கவனியுங்கள். இங்கு Hull என்பது நெல்லின் மீது இருக்கும் உமி, இதை நம்மால் உணவாக எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த பகுதியான தவிடு / Bran என்பதில் தான் என அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. இந்த பகுதி தவிடு நீக்கப்படல் என்ற பெயரால் நீக்கப்பட்டு வெள்ளை தீட்டப்படுகிறது. அடுத்த பகுதி தான் கடைசியில் விற்கப்படும் சிறு தானியங்கள்.

இந்த நெல்லை மீண்டும் மண்ணில் விளைவிக்க உதவும் பகுதிதான் Germ. தவிடு நீக்கப்படல் என்ற பெயரில் இந்த தவிடு நீக்கப்படுகிறது. அரிசியில் இருந்து நீக்கப்படும் இந்த பகுதி எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா நண்பர்களே?. google பக்கத்திற்கு சென்று Bran products என்று தேடி பாருங்கள். ஒரு கிலோவில் இருந்து பகுதியை கொண்டு மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் பொருளும் உங்களிடமே விற்கப்படுகிறது.

இப்படி தவிடு நீக்கப்பபட்ட தானியங்களை உண்பதால்தான் சக்கரை நோய், மூட்டுவலி போன்ற நவீனகால நோய்கள் மனிதனை பிடித்து ஆட்டுகின்றன என்பது தான் உண்மை.

எதற்காக இவ்வாறு தவிடு நீக்கப்படுகிறது??  இரண்டே இரண்டு காரணங்கள். முதலாவது மேலிருக்கும் உமியை மட்டுமே நீக்குவது சற்று வேலை அதிகம். இரண்டாவது உமியை மட்டும் நீக்கி வைத்தால் இந்த தானியங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையெனில் வண்டுகளும் சில பூச்சிகளும் வந்து விடும்.

இங்கு நாம் சற்று உற்று கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. இங்கு பூச்சிகள் வருவதை தடுப்பதற்காக பாலிஷ் போடப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் வராமல் இருந்தால் மட்டுமே வியாபாரிகளால் அதிக நாள் இந்த தானியங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முடியும்.

இரண்டாவது உங்களுடைய பகுத்தறிவை பயன்படுத்துவதற்கான ஒரு தருணம். ஓர் அறிவு, இரண்டு அறிவு என்று மனிதனால் சொல்லக்கூடிய பூச்சிகள் மற்றும் வண்டுகளுக்குத் தெரிகிறது, தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் தாம் உண்பதற்கான சத்துக்கள் எதுவும் இல்லை என்பது. அதனால் இவற்றை அவை சாப்பிடுவது இல்லை. ஆனால் ஆறறிவு என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் நாம்தான் சிலரின் சுயநலன்களுக்காக சத்துக்கள் நீக்கப்பட்ட தவிடு நீக்கப்பட்ட சிறு தானியங்களை வாங்கி உண்கிறோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை சத்துகளும் நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சிறு தானியங்கள் சாப்பிட முற்பட்டால், நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது, கட்டாயம் தவிடு நீக்கப்படாத, உமி மட்டும் நீக்கப்பட்ட சிறு தானியங்களே. இதனை கண்டுபிடிப்பதும் மிக எளிது. தவிடு நீக்கப்படாத எந்த ஒரு சிறுதானியமும் வெள்ளை நிறத்தில் இருக்காது. மாறாக அந்தந்த தானியதிற்கே உரிய வண்ணங்களில் மட்டுமே காணப்படும்.

-The Farmer