வள்ளலாரின் நீர் சிகிச்சை

மண்பானைஅன்றாடம் நாம் பயன்படுத்தும் குடிநீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது என்று அறிந்திருக்கிறோமோ. இல்லையே. சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் நன்கு உணர்ந்து இருந்தார். அதைத் தம் பாடல் வரிகளிலும் குறிப்பிட்டுள்ளார். தண்ணீரைக் குடிப்பதற்கு பயன்படுத்தும் முன் அதைக் காய்ச்சித்தான் குடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதுவும் எப்படித் தெரியுமா?

ஒரு லிட்டர் தண்ணீரைக் கால் லிட்டர் ஆகும் வரை நன்றாகக் கொதிக்க வைத்துப் பின் ஆறவைத்துப் பருக வேண்டும். அது உடலுக்கு ஆரோக்கியம் என்று கூறியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டபின் நிறையபேருக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். எனக்கும் அந்த சந்தேகம் முதலில் இருந்தது.

கடந்த ஏழு ஆண்டுகளாக தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக்கூடாது என்று உலக மக்களுக்கு பிரச்சாரம் செய்து வருகிறோம். தண்ணீரைக் கொதிக்க வைப்பதன் மூலமாக தண்ணீரில் உள்ள உயிர்சக்தி அழிந்துவிடுகிறது. உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிந்து விடுகின்றன. உயிர்த்தன்மை கொண்ட வாயுக்களான ஈத்தேன், மீத்தேன் போன்றவை வெளியேறுகின்றன. எனவே தண்ணீரை காய்ச்சிக் குடிக்கக்கூடாது என்று நமது வகுப்புகளின் மூலம் உலக மக்களுக்குப் பிரச்சாரம் செய்து வருகிறோம். பலரும் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது கிடையாது. நானும் அப்படித்தான் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் பல ஊர்களில், பல நாடுகளில் நடக்கும் நம் வகுப்புகளில் இவ்வாறு தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கக் கூடாது என்று நாம் சொல்லி வரும்பொழுது பலரும் ஒரு முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகின்றனர். “ தண்ணீரை ஏன் காய்ச்சிக் குடிக்கக் கூடாது? மகான் இராமலிங்கம் அடிகளார் தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். அது நல்லது என்று கூறியிருக்கிறரே? இரண்டில் எது உண்மை?” என்று பலரும் என்னிடம் கேட்டார்கள்.

வள்ளலார் அவர்கள் மிகப்பெரிய மகான். மிகப்பெரிய புத்திசாலி எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய, அனைவரும் பின்பற்ற வேண்டிய பல விசயங்களை மனித குலத்திற்குப் போதித்துச் சென்றவர். அவர் கூறிய விசயம் தவறாக இருக்குமா? பலரும் என்னிடம் பேசும் பொழுது தண்ணீரைப் பற்றி நாம் கூறும் கருத்தும் மகான் வள்ளலார் அவர்கள் கூறும் கருத்தும் முரண்பாடாய் இருக்கிறதே விளக்கம் கூறுங்கள் என்று கேட்டனர்.

ஆனால் இதுவரை இந்த விசயத்தில் என்னால் சரியான பதில் கூறமுடியவில்லை. தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆய்வு செய்தபொழுது அதில் பிராணன் இல்லை. நுண்ணுயிர்கள் அழிந்து போயிருந்தன. எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதில் நான் இப்பொழுதும் வள்ளலாரின் கருத்துக்கு மாறான கருத்தைத் தான் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதனால் உடலுக்கு எவ்வித நன்மையையும் கிடையாது.

சில மாதங்களுக்கு முன்பு மலேசிய நாட்டிற்கு சென்றிருந்த பொழுது அங்கே செல்வத்தரசி எனும் ஆசிரியை ஒருவரைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் சில அறிவியல் ரீதியான உண்மைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அப்பொழுதுதான் பல வருடங்களாக என்னில் இருந்த கேள்விக்குப் பதில் கிடைத்தது.

அதாவது வள்ளல் பெருமானார் கூறிய நீரைக் காய்ச்சிக் குடிக்கவேண்டும் என்பதும் நாம் கூறுகின்ற தண்ணீரைக் காய்ச்சாமல் குடிக்க வேண்டும் என்பதும் சரியே. அதாவது நாம் தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பதற்காக எவர்சில்வர், அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இப்படிக் கொதிக்க வைத்த நீரைப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுதுதான் அதில் பிராணன் இல்லை என்கிற உண்மையை நான் அறிந்தேன்.

ஆனால் மண்பானையில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைப்பதை நம்முடைய அன்றாட வழக்கத்தில் செய்வதில்லை. அப்படிச் செய்வதைப் பார்க்கின்ற வாய்ப்பும் நமக்கில்லை. நவீனம் மிகுந்துவிட்ட இந்த காலத்தில் மண்பானைகளை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? வள்ளல் பெருமானார் கூறியது இதைத்தான்.

மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அது கால்லிட்டராக ஆகும் வரை கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும் பொழுது அந்த நீர் உடலில் பலவித நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருந்தாக மாறுகிறது என்பதை வள்ளலார் கண்டறிந்திருக்கிறார். அதைத் தனது பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தண்ணீரை எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களில் ஊற்றி கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. அப்படிக் குடிக்கும் பொழுது அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ஆவியாகி விடுகிறது. இந்த நீரால் உடலுக்குத் தீங்கு தான் விளையும்.

ஒருவேளை நீங்கள் தண்ணீரை காய்ச்சிக் குடித்தே பழகியவர் என்றாலும் அல்லது நிறைய மாசுக்களும் கிருமிகளும் எங்கள் ஊர் நீரில் இருக்கின்றன என்றோ, சாக்கடை நீர் எல்லாம் கலந்து வருவதால் எப்படி அப்படியே குடிக்க முடியும் என்று சாக்குப் போக்குச் சொல்லியோ, தண்ணீரைக் காய்ச்சித்தான் குடிப்பேன் என்று அடம்பிடிப்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு அற்புதமான யோசனை ஒன்று கூறுகிறேன்.

மண்பானையில் நீரை ஊற்றிக் கொதிக்க வைத்துக் குடிக்கும் பொழுது அதில் மண் சத்து அதிகம் கிடைக்கிறது. மண்பானை காற்றில் உள்ள அதாவது பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை கிரகித்துக்கொண்டு நீருக்குள் அனுப்புகிறது. எனவே இந்த நீர் மருத்துவ குணம் கொண்டதாக மாறுகிறது. இதைப் பருகும் பொழுது நம் உடலில் உள்ள நோய்கள் குணமாகி ஆரோக்கியம் பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.

ஆனால் நாள் முழுவதும் பானையில் கொதிக்க வைத்த இந்த தண்ணீரை மட்டுமே அருந்தக் கூடாது. ஏனென்றால் கொதிக்க வைத்த தண்ணீரின் தன்மை வேறு, சாதாரணத் தண்ணீரின் தன்மை வேறு.

உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு நீங்கள் பத்துலிட்டர் தண்ணீர் அருந்துவதாக இருந்தால் அதில் 5 லிட்டர் நீரான கொதிக்க வைக்காத வடிகட்டாத தண்ணீரை அருந்துங்கள். மீதி பாதியளவு நீரை (5லி) மண்பானையில் கொதிக்க வைத்துக் குடியுங்கள். ஏனென்றால் கொதிக்க வைக்காத, வடிக்கட்டாத நீரிலுள்ள சத்துக்களும் உடலுக்குத் தேவை. அதில் மட்டுமே உயிர்சத்துக்கள் இயற்கையிலேயே நம் உடலுக்கு நன்மை செய்யும் வண்ணம் அதில் கலந்து இருக்கின்றன. என்ன தான் மண்பானையில் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது நன்மை என்றாலும் அதில் உயிர்சத்துக்கள் அழிந்து போயிருக்கும்.

எனவே தண்ணீரை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

1. சாதாரணமாக உள்ள நீர் (கொதிக்க வைக்காத வடிகட்டாத நீர்)
2. மண்பானையில் கொதிக்க வைத்த தண்ணீர்.
3. மற்றைய பாத்திரங்களில் கொதிக்க வைத்த தண்ணீர் (எவர்சில்வர், அலுமினியம்).

இதில் மற்றைய பாத்திரத்தில் ( எவர்சில்வர், அலுமினியம்) கொதிக்க வைத்த தண்ணீரை மட்டும் கண்டிப்பாக பயன்படுத்தவே வேண்டாம். அது உடலுக்குத் தீங்கைத்தான் விளைவிக்கும். எனவே சாதாரண நீரையே நாம் அனைவரும் குடிப்பதற்கு முயற்சி செய்யலாம் அல்லது மண்பானையில் கூட தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கலாம்.

தண்ணீர் தாகத்தைப் போக்குவதோடு ஆரோக்கியத்தையும் நம் உடலில் ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்துவோம். இந்த ரகசியத்தை நம்முடன் பகிர்ந்துகொண்ட மலேசிய நாட்டைச் சேர்ந்த ஆசிரியைக்கு நன்றிகள் உரித்தாக்குக!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

நன்றி – ஹீலர் பாஸ்கர் (அமைதியும் ஆரோக்கியமும்)
www.amaidhiyumaarokiyamum.com
Contact: (+91) 8883805456.