நீர் பிராணன் : Healer Baskar

ஹீலர் பாஸ்கர்பிராணன் என்றால் என்ன?

பிராணன் என்பது ஒரு சக்தி. ஆற்றல், இந்த சக்தியின் மூலமாக இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து விதமான பொருட்களுக்கும் இயக்க சக்தி இந்த பிராணன் ஆகும். பிராணன் என்பதை வீட்டிலுள்ள நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரத்தை போன்றது. நமது வீட்டில் மின்சாரம் உள்ளது. அது மின் கம்பியின் மூலமாக வீட்டில் அனைத்து இடங்களுக்கும் செல்கிறது. இந்த மின்சாரம் மின்விசிறியில் நுழையும்போது அது சுற்றுகிறது. அதே மின்சாரம் ஒரு ரேடியோ பெட்டிக்குள் செல்லும்போது அது பாடுகிறது. அதுவே மாவு அரைக்கும் இயந்திரத்திற்குள் செல்லும்போது சுற்றுகிறது. இஸ்திரிப்பெட்டிக்குள் செல்லும்போது சூடாகிறது.

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரும், பிராணனை தனது இயக்க சக்திக்காக, தான் செய்யவேண்டிய செயலுக்காக எரிபொருளாக பயன்பபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு உயிரும் பிராண சக்தியை உற்பத்தி விதமும் அதற்கு தேவையான மூலப்பொருளும் வேறுவேறு.

உதாரணமாக மனிதன் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதன்மூலமாக பிராணனை உற்பத்தி செய்ய பயன்பட்ட ஆக்ஸிஜன் கார்பன்-டை-ஆக்ஸைடாக அதாவது கரியமில வாயுவாக மாறுகிறது. இந்த கார்பன்-டை-ஆக்ஸைடு தாவரத்திற்குள் செல்லும்போது பிராணசக்தியாக மாறுகிறது.

ஒரு பொருளின், ஒரு உயிரின் கழிவு இன்னொரு பொருளுக்கு, உயிருக்கு மூலப்பொருளாக, சாப்பிடும் உணவாக இருக்கிறது. இதுதான் உலக நியதி. இதை புரிந்துகொண்டால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக நாம் மலம் கழிக்கிறோம். அந்த மலத்தை ஒரு நாய் சாப்பிடுகிறது. நமது கழிவுப்பொருள் ஒரு நாய்க்கு உணவாக இருக்கிறது. நாம் அசிங்கமாக அருவெறுப்பாக நினைக்கும் நமது மலம் அந்த நாய்க்கு அமிர்தமாக இருக்கிறது. இதேபோல் ஒரு மரத்தில் ஒரு மாங்காய் இருக்கிறது. அது நாள்பட நாள்பட கனிந்து மரத்திலிருந்து கீழே விழுகிறது. அந்த மரம் எப்பொழுது அந்த மாம்பழம் அழுகிப்போகிறதோ அது வேண்டாம் என்று கீழே வீசுகிறது. நாம் கீழே கிடக்கும் மாம்பழத்தை ஆசையாக எடுத்து முக்கனிகளில் ஒன்றாக கருதி அதை ஆசையாக வாயில் வைத்து சுவைத்து சாப்பிடுகிறோம். ஒருவேளை அந்த மரம் நினைக்கலாம், நம் மலத்தை இந்த மனிதன் ஓடிவந்து சாப்பிடுகிறானோ என்று, எப்படி இவனால் சாப்பிட முடிகிறது என்று அந்த மரம் யோசிக்க வாய்ப்பு உள்ளது. மரத்தின் மலம் மனிதனின் உணவு, மனிதனின் மலம் நாய்க்கு உணவு. இதுதான் உலக நியதி. இது ஒரு சுழற்சி(வட்டம்). இந்த சுழற்சியின் மூலமாகத்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. அதனால் பிராணன் என்பது ஒருவிதமான சக்தி. இந்த பிராணன் மூலம்தான் அனைத்தும் இயங்குகிறது.

ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் பிராணனமயகோசம் என்று கண்ணுக்கு புலலப்படாத சக்தி/ ஆற்றல் உள்ளது. நமது உடலிலுள்ள அனைத்து கலங்களும் உறுப்புகளும் பிராண சக்தியின் மூலமாகத்தான் இயங்கி கொண்டிருக்கிறது. எப்பொழுதெல்லாம் நமக்கு அதிக சக்தி கிடைக்கிறதோ அதை நமது உடல் பிராணனாக மாற்றி சேமித்து வைத்து கொள்ளும். நாம் மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொள்ள சப்ஸ்டேசன் என்று மின்சாரத்தை சேமித்து வைக்கும் ஒரு அமைப்பை பயன்படுத்துவது போல நமது உடல் பிராண சக்தியை சேமித்து வைத்துக்கொள்கிறது. ஒருசில மனிதர்கள் ஒரு மணிநேரம் பேசியவுடன் களைப்படைந்து விடுகிறார்கள். ஒருசிலர் எவ்வளவு நேரம் பேசினாலும் களைப்படைவதே இல்லை.அவர்கள் பிராண சக்தியை சேமித்து வைத்து பயன்படுத்துவார்கள். மனிதனின் உயிர் அவன் சேர்த்து வைத்திருக்கும் பிராண சக்தியைப் பொறுத்து வீரியமாக இருக்கும். மொத்த பிராணன் இழந்தவுடன் நமது உயிர் நம்மை விட்டுப்பிரிகிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ளவேண்டிய அத்தியாவசியமான விஷயம் பிராணன்.

பிராணன் எப்படி பரிமாற்றப்படுகிறது?

உதாரணமாக இரண்டு பாத்திரத்தில் நீர் இருக்கிறது. ஒரு பாத்திரத்தில் 100 டிகிரி கொதிக்கும் தண்ணீரையும், இன்னொரு பாத்திரத்தில் 20 டிகிரி கொதிநிலை உள்ள தண்ணீரையும் ஒன்று சேர்த்தால் என்ன ஆகும். இப்பொழுது மொத்த தண்ணீரும் 40 அல்லது 50 டிகிரிக்கும் வந்துவிடும். அதிக சூடும் அதிக குளிர்ச்சியும் ஒன்று சேரும்போது தண்ணீர் இயல்பான நிலைக்கு வந்துவிடுகிறது. ஒரு பொருள் 1000 மதிப்பிற்கு பிராணன் இருக்கும்பொழுது, இன்னொரு பொருளில் 500 மதிப்பிற்கு பிராணன் இருந்தால், இரண்டும் சேர்த்து 1500 மதிப்புள்ள பிராணனாக மாறி, இரண்டு பொருளும் பிராணனை 750, 750 என்று சரிபாதியாக பிரித்துக் கொள்கிறது. இதுதான் பிராணன் பரிமாற்றப்படும் உண்மை.

உதாரணமாக சில சாமியார்களை தொடக்கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால் அவர்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பலவிதமான பயிற்சிகள் செய்து பிராணசக்தியை சேமித்து வைத்திருப்பார்கள். சாதாரண மனிதர்களும், நோயாளிகளும், உடலில் பிராணன் பற்றாக்குறையுள்ள மனிதர்களும் அவரைத் தொடும்பொழுது பிராணன் நோயாளியின் உடலுக்கு பாய ஆரம்பிக்கிறது. எனவேதான் பலர் தங்களைத் தொடக்கூடாது, தூரமாக நின்று பேசவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்குபஞ்சர், அக்குபிரசர், தொடு சிகிச்சை, பிராண சிகிச்சை இதுதெல்லாம் இது சம்பந்தப்பட்டதுதான். நோயாளியை டச் தெரபி /தொடு சிகிச்சை என்ற முறையில் ஒரு சிகிச்சையாளர் தொடும்பொழுது நோயாளியின் உடலில் பிராணனை அனுப்பி நோயை குணப்படுத்த செய்கிறார்கள். மனித உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து பிராணன். உங்களுக்கு என்ன நோய் உள்ளது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிகிச்சையாளர் தன் உடலில் உள்ள பிராணனை நோயாளிக்கு செலுத்துவதன் மூலமாக இந்தப் பிராணன் நோயாளியின் உடலில் சென்று, எந்த இடத்தில், எந்த உறுப்பில், எந்த மூலையில் நோய் இருக்கிறதோ அதை குணப்படுத்தும். எனவே தண்ணீர் எப்படி பள்ளத்தை நோக்கி ஓடுகிறதோ, பிராணன் பற்றாக்குறை உள்ள இடத்தை நோக்கி ஓட ஆரம்பிக்கும்.

சில நேரங்களில் நமது வீடுகளில் இரண்டு குழந்தை இருக்கும்போது ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்து படுத்திருக்கும். மற்றொரு குழந்தை ஆரோக்கியமாக விளையாடிக் கொண்டிருக்கும். இந்த ஆரோக்கியமான குழந்தை காய்ச்சல் வந்த குழந்தை பக்கத்தில் போய் தொட்டு விளையாடும்போது, ஆரோக்கியமான குழந்தையின் பிராண சக்தி, காய்ச்சல் வந்த குழந்தையின் உடலில் பாய்ந்து காய்ச்சல் குணமாகிவிடும். இப்பொழுது காய்ச்சல் வந்த குழந்தை குணமாகி பள்ளிக்கு சென்றுவிடும். ஆனால் ஆரோக்கியமான குழந்தை காய்ச்சல் வந்து வீட்டில் படுத்துவிடும். அதனால்தான், பலரும் சகுனம் பார்க்கிறார்கள்.

உதாரணமாக விதவைகள், நோயாளிகள் குறுக்கே சென்றால் நாம் போகிற காரியம் விளங்காது என்று. அது அப்படி கிடையாது. அவர்கள் மனதால் வருத்தத்துடன் இருக்கும் போது பிராணன் குறைவாக இருக்கும். இப்படி நோயாளிகள், மனதால் வருந்தி அவஸ்தை படுபவர்கள் பிராணன் குறைவாக இருக்கும்போது அவர்களை தாண்டிச் செல்லும்பொழுதோ, அவர்களை தொடும் பொழுதோ, அவர்கள் அருகில் இருக்கும் பொழுதோ நமது பிராணன் உறியப்படுகிறது. இதனால் நாம் சக்தி இழக்கிறோம். எனவே தான் இதைப்போன்ற சகுனங்களை நம் முன்னோர்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், அந்த விதவைப்பெண்மனதில் சந்தோசமாக யோகா செய்துகொண்டு, ஒழுங்காக சாப்பிட்டுக்கொண்டு பிராணன் அதிகமாக சேமித்து வைத்துக் கொண்டிருந்தால் நாம் செல்லும்போது அவர்களை தொடும்பொழுது நமக்கு பிராணன் கிடைக்கும் என்பதுதான் உண்மை. இதில் யார் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரிடம் பிராணன் இருக்கிறது என்று மட்டுமே பார்க்க வேண்டும். இப்பொழுதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் பிராணன் இன்றி தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஒருவர் நோயாளியாக படுத்திருக்கும்போது ஏன் சொந்தக்காரர்கள் அவரைப் பார்க்க வருகிறார்கள் என்றால், ஆரோக்கியமாக உள்ள அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அவரைப் பார்த்து அருகில் அமர்ந்து, கவலைப்படாதே நான் இருக்கிறேன், தைரியமாக இரு என்று சொல்லும்போது பிராணன் பரிமாற்றப்படுகிறது. அப்பொழுது நோயாளிகள் குணமாவதற்கு மருந்து கிடைக்கிறது. எனவே நமது உறவினர் யாராவது உடல்நிலை சரியில்லாதபோது எல்லோரும் கிளம்பிப்போய் பார்க்கிறோம். அப்படி பார்க்கக்கூடாது. யார் ஆரோக்கியமாக இருக்கிறார்களோ நீங்கள் மட்டும்தான் போய்ப்பார்க்க வேண்டும். ஏற்கனவே நோயாளியாக இருக்கும் நபர்கள், பிராண சக்தி இல்லாத நபர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், மனதில் குழம்பிப்போய் இருக்கும் நபர்கள் நிம்மதியாக தூக்கம் இல்லாத நபர்கள் நோயாளியை பார்க்கச் செல்லக்கூடாது. அப்படி செல்லும்போது மேலும் அவரை நோயாளியாக ஆக்குகிறோம் என்பதுதான் உண்மை.

நானும் தொடுசிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், பிராண சிகிச்சை கற்றுக்கொண்டு, சில ஆண்டுகள் சிகிச்சை அளித்து வந்தேன். நான் தூக்கம் இல்லாதபோதோ, அல்லது மனதில் குழப்பம் இருக்கும்போதோ நான் யாருக்கும் சிகிச்சை அளிக்க மாட்டேன். எனவே நானே ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும்போது நோயாளியின் பிராணன் எனக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே நாம் இந்த பிரபஞ்சத்தில் இருந்து பலவழிகளில் பிராணனை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.

பிராணன் எந்தெந்த வழிகளில் நமக்கு கிடைக்கும்?

1. உண்ணும் உணவின் மூலம் பிராணன் கிடைக்கிறது.
2. குடிக்கும் தண்ணீர் மூலம் பிராணன் கிடைக்கிறது.
3. மூச்சுக்காற்றின் வழியாக பிராணன் கிடைக்கிறது.
4. தூங்கும்போது பிராணன் கிடைக்கிறது.
5. குளிக்கும்போது அந்த நீர் மூலமாக உடலுக்கு பிராணன் போகிறது.
6. நமது எண்ணங்கள் அமைதியாக, நிம்மதியாக இருக்கும்போது சக்கரங்கள் மூலமாக நமது உடலுக்கு பிராணன் செல்கிறது.

இப்படி பல வழிகளில் நாம் பிராணனை சம்பாதித்து கொண்டிருக்கிறோம். பல வழிகளில் பிராணனை செலவு செய்துகொண்டும் இருக்கிறோம். கண் பார்ப்பதற்கு பிராணன் தேவைப்படுகிறது. படிப்பதற்கு, நடப்பதற்கு பிராணன் தேவைப்படுகிறது. உடல், மனம், புத்திக்குள் வேலை கொடுக்கும்பொழுது நமது பிராணன் செலவாகிறது.

எவ்வகை தண்ணீரில் குளிக்கலாம்?

கொதிக்க வைத்த தண்ணீரில் குளிக்கக்கூடாது. ஏனென்றல் தண்ணீரை கொதிக்க வைக்கும்பொழுது தண்ணீரில் உள்ள பிராணன், ஆற்றல்(சக்தி) தண்ணீரைவிட்டு வெளியே சென்றுவிடுகிறது. தண்ணீரில் உள்ள உயிர்சத்துப் பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள் கொதிநிலையில் அனைத்தும் ஆவியாகிவிடும். இந்த கொதிக்கவைத்த தண்ணீரில் நாம் குளிக்கும் போது நாம் ஏற்கனவே பார்த்ததுபோல பிராணன் இல்லாத பொருளுக்கு, பிராணன் உள்ள பொருளிலிருந்து பிராணன் பரிமாற்றப்படும் என்ற நியதிப்படி கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்கும்போது அந்த பிராணன் இல்லாத தண்ணீர் நமது உடல் வழியாக கடக்கும்பொழுது, உடலில் உள்ள அனைத்து பிராணனையும் எடுத்துவிட்டு பாத்ரூம் வழியாக வெளியேறிச் செல்கிறது. கொதிக்கவைத்த தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ஆபத்து. எனவே இனி வாழ்நாளில் கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்க வேண்டாம்.

குளிர்ச்சியான நீரில் குளிக்கலாமா?

குளிர்ச்சியான நீரிலும் குளிக்கக்கூடாது. நமது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருந்தால் அதுதான் ஆரோக்கியம். குளிர்ந்த நீரில் குளிக்கும்போது நமது தோளில் உள்ள அனைத்து செல்களும் அந்த குளிர்ந்த நீரை 37 டிகிரி செல்சியஸ் ஆக மாற்றுவதற்கு அதிக வேலை செய்யவேண்டியிருக்கிறது. அதனால் இந்த மாற்றத்திற்கு அதிக சக்தி(ஆற்றல்) செலவாகிறது. எனவே குளிர்ந்த நீரிலும் குளிக்கக்கூடாது.

எந்த தண்ணீரில் குளிக்கலாம் எவ்வளவு சூடாக குளிக்கலாம் ?

தண்ணீரை கொதிக்கவைத்து குளிக்கக்கூடாது. குளிர்ந்த நீரிலும் குளிக்கக்கூடாது. ஆனால் நீரை விலாவி குளிக்கலாம். அது என்ன விலாவி குளிக்கலாம்? கிராமங்களில் வழக்கமாக நாம் கேள்விப்படும் வார்த்தை, “தண்ணீர் விலாவி வைத்திருக்கிறேன், போய் குளிங்க” என்பது. அதாவது நாம் ஒரு வாளி தண்ணீரில் குளிக்கிறோம் என்றால், பாதி வாளி தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து சூடுசெய்து, பாதி வாளி தண்ணீரை கொதிக்க வைக்காமல் பிராணன் இருக்கும் தண்ணீரை கொதிக்கவைத்த பிராணன் இல்லாத தண்ணீருடன் சேர்த்து குளிக்கும்போது அந்த தண்ணீரில் சூடும் இருக்கும், பிராணனும் கிடைக்கும். இது உடலுக்கு ஆரோக்கியமான குளியல். எனவே இனி நம் வாழ்நாளில் முழுவதும் கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்க வேண்டாம்.

குளிர் பிரதேசங்களில் நாம் வெந்நீரில் தான் குளிக்கவேண்டும். அதிக உஷ்ணம் உள்ள நாடுகளில் குளிர்ந்த நீரில் தான் குளிக்கவேண்டும். குளிரும் இல்லாத, உஷ்ணமும் இல்லாத மிதவெப்ப நாடுகளில் சாதாரண (Room temperature) வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளிக்கலாம். எனவே நாம் குளிக்கும் தண்ணீரின் வெப்பநிலை நாட்டுக்கு நாடு மாறுபடும். ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் மாறும். ஆனால் நமது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்குமாறு குளிக்கவேண்டும். அதற்கு பாதகம் வருமாறு நாம் குளிக்கக்கூடாது.

உடலுக்கு மட்டும் குளித்தால் நல்லதா? தலையோடு சேர்த்து குளித்தால் நல்லதா?

குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவே கூடாது. உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும்.

அது எப்படி? நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகிறது. அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து கலங்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை, தாடை, மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து கலங்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும். எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு மாறுகிறது. எனவேதான் முடிகொட்டுதல், டென்சன், கோபம், மனோரீதியான நோய்கள், தூக்கமின்மை, மைக்ரேன், தலைவலி, சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் மனிதனுக்கு வருகிறது. பொடுகு போன்ற பிரச்னையும் வருகிறது. எனவே குளித்தால் தலையோடு குளிக்கவேண்டும். இல்லையென்றால் குளிக்கக்கூடாது.

இது ஆண்களுக்கு ஒத்துவரும். பெண்களுக்கு கூந்தல் நீளமாக இருப்பதால் தினமும் தலையோடு சேர்த்து எப்படி குளிக்க முடியும்? என்று ஒரு கேள்வி வரலாம். பெண்கள் உடலுக்கு மட்டும் குளித்துக் கொள்ளலாம். ஆனால் அதில் சில முறைகளை கையாளவேண்டும். ஈரத்துணியை தலையில் கட்டிக்கொண்டு குளியல் அறைக்குச் செல்ல வேண்டும். பின் உடலில் நீரை ஊற்றிக் குளிக்க வேண்டும். தலையில் ஈரத்துணி இருப்பதால் தலைப்பகுதி வெப்பமடைய வாய்ப்பு இல்லை. குளித்து முடித்து வெளியே வந்து துடைத்து துணியை மாற்றும்வரை தலையில் ஈரத்துணி இருந்துகொண்டே இருக்கவேண்டும். பிறகு அதை சுழற்றினால் மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு வியாதியும் அவர்களுக்கு வராது. இது ஆரோக்கியமான குளியல். எனவே பெண்கள் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது ஈரத்துணியைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்.

விலாவிய வெந்நீரில் குளிக்கும்போது முதலில் கால்களில் ஊற்றவேண்டும். பின்பு மூட்டு,பிறகு இடுப்பு, தோள், கடைசியில் தலையில் ஊற்றவேண்டும். அதேபோல் சாதாரண குளிர்ந்த நீரில் குளிக்கும்போது முதலில் தலையில் ஊற்றவேண்டும். பிறகு உடலில் ஊற்றவேண்டும். இதை மாற்றி செய்தால் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவேதான் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச்செல்லும்போது நாம் அதை கடவுளாக நினைத்து முதலில் கால் வைக்கக் கூடாது, கையில் எடுத்து தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கையில் எடுத்து வாயில் குடிக்க வேண்டும். இந்த இரண்டு காரியத்தையும் செய்துவிட்டு குளித்தால் அந்த தண்ணீர் நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் என்ற கருவிமூலம் தண்ணீரை கொதிக்கவைத்து பிராணன் இல்லாத தண்ணீரை நேரடியாக ஷவர் மூலம் குளிக்கிறோம். இதில் முதல் தவறு தண்ணீரை சூடு செய்து பிராணனையை எடுப்பது, இரண்டாவது தவறு சுடுதண்ணீரை தரையில் ஊற்றுவது. இதனால்தான் இப்போதுள்ள மக்கள் கோபம், டென்சன், பயத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் ஏன் மனசாட்சி இல்லாத நாய்போல் கத்துகிறார்கள் என்றல் அதற்க்கு காரணம் குளிக்கும் முறைதான். எனவே இனிமேல் பச்சைத் தண்ணீரில் குளிக்கும்போது தலையிலிருந்தும், வெந்நீரில் குளிக்கும்போது காலிலிருந்தும் ஆரம்பிக்கும் போது நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி பிறக்கும்.

எவ்வகை தண்ணீரில் பிராணன் மிகுதியாக உள்ளது ?

இயற்கையான தண்ணீரில் பிராணன் மிகுதியாக உள்ளது. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள பிராணன் வெளியேறுகிறது. பிராணன் அதில் இருக்காது.

வடிகட்டிய தண்ணீரில் (பில்டர் வாட்டர்) பிராணன் இருக்குமா ?
ஆம். தண்ணீரை வடிகட்டும்போது (பில்டர் செய்யும்போது) பிராணன் வெளியேறுவதில்லை. எனவே பில்டர் செய்த தண்ணீரில் பிராணன் இருக்கும்.

கடைகளில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (பாட்டில் வாட்டரில்) பிராணன் உள்ளதா ?
கண்டிப்பாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (பாட்டில் வாட்டரில்) பிராணன் உள்ளது. ஆனால் இயற்கையாக உள்ள தண்ணீரில் உள்ள சத்துப்பொருள்கள் அதில் கிடையாது என்பது வேறு ஒரு உண்மை.

போர்வெல் தண்ணீரில் பிராணன் உள்ளதா ?

எல்லா போர்வெல் தண்ணீரிலும் பிராணன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சில போர்வெல் தண்ணீரில் பிராணன் இருக்கும் அல்லது இருக்காது. ஏனென்றால் பூமிக்கடியில் சில இடங்களில் விஷ வாயுக்களும், பிராணன் இல்லாத நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே போர்வெல் தண்ணீரை உடனடியாக குடிக்கக்கூடாது. சில நேரங்களில் அவை உயிருக்கு ஆபத்தைக்கூட ஏற்படுத்தும். எனவேதான் நமது முன்னோர்கள் போர்வெல் தண்ணீரை எடுத்தவுடன் முதன்முதலில் அதில் மீன்களை போட்டு சோதிப்பார்கள். 24 மணிநேரம் மீன்கள் உயிரோடு இருந்தால் அந்தத் தண்ணீரில் பிராணன் உள்ளது என்று அந்தத் தண்ணீரை நாம் பயன்படுத்தலாம். போர்வெல் தண்ணீரில் விட்ட மீன் இறந்துவிட்டால் அந்தத் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது என்று அறிந்துகொள்ளலாம்.

ஆற்றுநீரில் பிராணன் எவ்வளவு இருக்கும் ?

ஆற்றுநீரில்தான் அளவுக்கு அதிகமான பிராணன் இருக்கும். ஏனென்றால் ஆற்றுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்றுநீர் வேகமாக ஓடிக் கொண்டிருப்பதால் பூமியிலும், பூமிக்கடியிலும் உள்ள பிராணனை எடுக்கிறது. காற்றில் உள்ள பிராணனையும் எடுக்கிறது. எனவே ஆற்று தண்ணீர்தான் குளியலுக்கு மிகச்சிறந்த தண்ணீர்.

சனி நீராடு என்று தமிழில் இருக்கிறது. சனி என்றால் சனிக்கிழமை என்று அர்த்தம் இல்லை. சனி என்றால் ஓடுகின்ற, குளிர்ந்த என்ற பொருளும் உண்டு என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே ஆற்றுநீரில் குளிப்பது உடலுக்கு மிக மிக நல்லது. நாம் ஒருமாதமாக தினமும் ஒருமணிநேரம் யோகா செய்து கிடைக்கும் பிராணனை, ஆற்றுத்தண்ணீரீல் ஒரு முறை குளித்தாலே எடுத்துவிடலாம்.

கடல் தண்ணீரில் பிராணன் உள்ளதா?

கடல் தண்ணீரில் பிராணன் உள்ளது. அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆனால் அளவுக்கதிகமான உப்பும் இருப்பதால் அது நமது உடலில் சேர்வதற்கு காலதாமதம் ஆகிறது, எனவே கடல் நீரைவிட ஆற்றுநீர் மிகமிக சிறந்தது. ஆனால் கடல்நீரில் குளிக்கும் போது இன்னொரு நன்மை கிடைக்கிறது. எப்போது உப்புத்தண்ணீரில் குளிக்கிறோமோ உப்பின் மூலமாக மின்சக்தி உடலுக்கு கிடைக்கிறது. நமது உடலில் உள்ள எதிர்மறை சக்தி, நேர்மறை சக்தியாக மாற்றப்படுகிறது. எனவேதான் நமது முன்னோர்கள் கிராமங்களில் சாவுக்கு சென்றுவந்தால் முதலில் கல் உப்பை தண்ணீரில் போட்டு குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் நுழைவார்கள். இதை நாம் மறந்துவிட்டோம்.

கெட்ட எண்ணங்களுடன், தவறான எண்ணங்களுடன் இருப்பவர்கள், தங்களுக்குத் தாங்களே தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், உப்பை தண்ணீரில் சேர்த்து குளித்துவிட்டு பின் சாதாரண தண்ணீரில் குளித்தால் எண்ணங்கள் நேர்மறை எண்ணங்களாக மட்டுமே இருக்கும். கடல் நீரில் குளிப்பதால் நமது எண்ணங்கள் நேர்மறையாக மாறுகிறது.

கிணற்று தண்ணீர் நல்லதா? கெட்டதா?

கிணற்று தண்ணீர் ரொம்பவும் நல்லது. கிணற்று தண்ணீரை இரவு 12 மணிக்குத் தொட்டால் குளிர்ச்சியாக இருக்கும். ஒரு மனிதனின் ஆரோக்கியமான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கிணற்று நீர் மட்டும்தான் ஒருமனிதனுக்கு எந்த வெப்பநிலையில் குளித்தால் சரியாக இருக்கும் என்று கொடுக்கக்கூடிய திறன் உடையது. எனவே நாமும் இதே முறையை பின்பற்றுவோம். இரவில் சூடாக குளித்தால் நல்லது. பகலில் குளிர்ச்சியாக குளித்தால் நல்லது. எனவே கிணற்றுத் தண்ணீர் ஆற்றுத் தண்ணீரை விட சற்று பிராணன் குறைவாக உள்ளது. ஏனென்றால், கிணற்று தண்ணீர் ஓடுவதில்லை. ஆனால் கெடுதல் கிடையாது. ஆற்றுத்தண்ணீரை ஒப்பிடும்போது கிணற்றுநீர் சற்று குறைவானது. ஆனால் கிணற்றுநீரில் குளிப்பது மிகவும் நல்லது.

தண்ணீரை எப்படி சேமித்துவைப்பது?

நாம் கீழ்நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டி என்று தண்ணீரை நான் சேமித்து வைக்கிறோம். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் பிராணன் கிடையாது. ஏனென்றால் அனைத்துத் தொட்டிகளையும் நன்றாக மூடி விடுகிறோம். இப்படி கான்கிரிட்டால் செய்யப்பட்ட தொட்டிகளில் தண்ணீரை மூடி வைப்பதால் அதில் பிராணன் குறைகிறது. தண்ணீருக்கும் காற்றுக்கும் உள்ள இணைப்பை நான் துண்டிக்கிறோம். அல்லது தடுக்கிறோம். எனவே பிராணன் குறைகிறது. எனவே கீழ்நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டியை நாம் கொஞ்சமாவது திறந்துவைத்து, இந்த பிரபஞ்காற்றுடன் எப்போதுமே ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்மாறு செய்யவேண்டும். நாம் குப்பை விழுகிறது, பறவைகள் எச்சம் இடுகிறது என்று மூடி வைக்கிறோம். குப்பை விழுந்தாலும் பரவாயில்லை, எச்சம் விழுந்தாலும் பரவாயில்லை, பிராணன் கிடைப்பது மிகவும் நல்லது. எனவே கீழ்நிலைத்தொட்டி மற்றும் மேல்நிலைத்தொட்டிகளை கொஞ்சமாவது திறந்துவைப்போம். குப்பை விழாமல் இருப்பதற்கும், பறவைகள் எச்சம் விழாமல் இருப்பதற்கும் ஒரு சிம்னி(சல்லடை) போன்ற அமைப்பை உருவாக்கி, குப்பை செல்லாமலும், எச்சம் விழாமலும் காற்று மட்டும் உள்ளே செல்லுமாறு ஏற்பாடு செய்திருக்க வேண்டும், அந்த தண்ணீரில் குளிக்கும் போது, சமைக்கும்போது நமக்கு பிராணன் கிடைக்கிறது.

Syntex, Plastic போன்ற தொட்டிகளில் தண்ணீர் வைப்பதைவிட சிமெண்ட் அல்லது கான்கிரீட் தொட்டிகளில் தண்ணீர் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீர் பிராணனை நாம் எப்படி பயன்படுத்துவது?

எனவே இனிமேல் நாம் பயன்படுத்தும் பயன்படுத்தும் ஒவ்வொரு நீரிலும் பிராணன் உள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். இனிமேல் நாம் குடிக்கும் ஒவ்வொரு தண்ணீரிலும் பிராணன் இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குளிக்கும்போது அதில் பிராணன் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். நாம் கண்களை கழுவும்போது கண்களில் உள்ள அழுக்கு வெளியே செல்வதற்காக கழுவுவது கிடையாது. கண், கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்ட எந்தநோயாக இருந்தாலும் பச்சைத்தண்ணீரில் 5 முறை கண்களைக் கழுவினால் தண்ணீரில் உள்ள பிராணன் கண்வழியாக சென்று கண்ணில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.

அதேபோல் வாய்கொப்பளிக்கும்போது வாயிலுள்ள அழுக்கு வெளியே வருவது ஒருபக்கம் இருந்தாலும் தண்ணீரில் உள்ள பிராணன் உடலுக்கு சென்று நம்மை ஆரோக்கியப்படுத்தும். மேலும் கை, கால், முகம் கழுவுவதால் நன் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒருபுறம் இருந்தாலும் கை, கால் தான் பிராணனை நமது உடல் உறிஞ்சிக்கொண்டு நம்மை உற்சாகப்படுத்துகிறது. எனவே சமைக்கும் போதும் பிராணன் உள்ள தண்ணீரில் தான் சமைக்க வேண்டும்.

பிராணன் என்றால் என்ன? பஞ்சபூதம் என்றால் என்ன ? என்று எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோமோ இந்த உலகிலுள்ள அனைத்து விஷயங்களையும் புரிந்துகொண்டு அன்பான அமைதியாக ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் தகுதியானவர்களாக ஆகிறோம். நான் சிலசமயங்களில் அதிக நேரம் நிகழ்ச்சிகளில் பேசிவிட்டு திரும்பும்போது பிராணன் பற்றாக்குறையாக இருக்கும் அப்பொழுது குளியலறைக்குச் சென்று தண்ணீர் குழாயை திறந்துவிட்டு உள்ளங்கையும் உள்ளங்காலையும் நனைத்துவிட்டு, உள்ளங்கையில் தண்ணீரைவிட்டு அந்தத் தண்ணீரில் உள்ள பிராணசக்தி என் உடலுக்கு வருகிறது என்று நினைப்பதன் மூலமாக அந்த நீரில் உள்ள பிராணன் உடலுக்கு வருகிறது.

மழை நீர் பிராணன்

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து கலங்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளிபிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த முடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த முடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடுத்துக்கொண்டு பூமியை நோக்கி வரும். எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்க வேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும்.

இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது. நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.

குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.

நன்றி – ஹீலர் பாஸ்கர்