பாசிப்பருப்பு பாயாசம்

பாசிப்பருப்பு பாயாசம்தேவையான பொருட்கள்

பால் –  2 1/4 கப்
பாசிப்பருப்பு –  1/3 கப்
கடலைப்பருப்பு –  2 மேசைக்கரண்டி
வெல்லம் –  3/4 கப்
துருவிய தேங்காய் –  1/4 கப்
அரிசி மாவு –  2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி
முந்திரி – 6
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் வெல்லத்தை குறைவான தண்ணீரில் போட்டு கரைய வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

துருவிய தேங்காய் மற்றும் அரிசி மாவை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உடனே தண்ணீர் ஊற்றி, பின் தண்ணீரை வடிகட்டி பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பருப்புக்களை சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தேங்காய் மற்றும் அரிசி மாவை போட்டு, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பருப்பு, அரிசி மாவு கலவை, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து அனைத்து பொருட்களும் ஒன்று சேர நன்கு கிளறிவிட்டு இறக்கி, நன்கு குளிர விடவேண்டும்.

பின்னர் கடாயில் பாலை ஊற்றி, பால் நன்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு, பாலானது நன்கு சுண்டியதும், அதில் குளிர்ந்த வெல்லக் கலவையை சேர்த்து, பின் முந்திரியை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!!!

-Meera Tharshan